4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
கடந்த 25.04.2018 இல் , பிற்பகல் 2.00 மணிக்கு , கீழ்ப்பேரா மாவட்டத்திலுள்ள சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2- ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இப்போட்டி விளையாட்டினைச் சுங்காய் வட்டாரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திரு . மோகன் அபிமன்னன் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார் . சிறு பள்ளியாக இருந்தாலும் பெரிய பள்ளியைப் போல விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி பலருடைய பாராட்டினைப் பெற்றுள்ளது சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி. இவ்விளையாட்டுப் போட்டிக்கு ஹிலிர் பேராக் மாவட்டத் தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் குமரன் பெருமாள் , நோவா ஸ்கோசியா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், சுங்கை தீமா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் , தோட்ட மேலாளர் , மாணவர்களின் பெற்றோர்கள் , சுற்று வட்டார ஆசிரியர்கள் எனப் பல தரப்பினர் திரளாக வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர் . இப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக ஏற்று நடத்திய ஆசிரிய...
வாய்பாடு கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். WORDWALL : வாய்ப்பாடு கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் ரா.ரூபா பள்ளி : கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி, பேரா கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும் CLICL TO PLAY ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
மாணவர்களே.! கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள். உங்கள் கணிதத் திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் திருமதி நந்தினி அர்ஜுனன் பள்ளி: செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர் 1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர் 2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர் 3 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர் 4 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர் 5 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
பள்ளிப் பெயர் / Nama Sekolah: கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தென் கிந்தா மாவட்டம், பேரா SJKT LADANG KAMPAR, DAERAH KINTA SELATAN, PERAK போட்டி / Pertandingan: அனைத்துலகப் புத்தாக்கம், புனைவாக்கம் மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி Internatinal Invention, Innovation & Design Expo (INoDEx 2021) நிலை / Peringkat: அனைத்துலக நிலை /Antarabangsa அடைவு / Pencapaian: வெண்கலப் பதக்கம் / Bronze medal நாள் / Tarikh: 8 & 9 November 2021 புத்தாக்கம் / Inovasi: கணித மாயக் கட்டம் / PETAK MAYA MATEMATIK ஏற்பாட்டாளர் / Penganjur: USM, UTM,CREST & SIRIM தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி.இராஜேஸ்வரி சுப்பிரமணியம் PN.RAJESWARY SUBRAMANIAM பொறுப்பாசிரியர் / Guru Terlibat: திருமதி சங்கீதா கிருஷ்ணா PN.SANGEETHA KRISHNA சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1 செல்வன் யோகேந்திரன் / R.Yoogenthiran 2.செல்வன் பிரதிப் / Y. Pritip 3.செல்வன் மெல்வின் / D.Melvin
22.04.2018 ஞாயிற்றுக்கிழமை கடாரத்திலுள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய நிலை செந்தமிழ் விழா போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். மலேசியக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்தத் தேசிய நிலையிலான போட்டியில் மொத்தம் 10 மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்மொழி சார்ந்த மொத்தம் 13 போட்டிகளில் இந்தச் செந்தமிழ் விழாவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளி , தேசியப் பள்ளி , இடைநிலைப் பள்ளி , படிவம் 6 என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மாநில நிலையில் முதலாம் , இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற மாணவர்கள் இப்பொழுது தேசிய நிலையில் தங்கள் தமிழ்மொழித் திறனையும் ஆற்றலையும் வெளிபடுத்தவுள்ளனர். பேரா மாநிலத்தின் நிகராளிகளாக 30 மாணவர்கள் கலந்துகொள்ளும் வேளையில் அவர்களோடு மாநிலக் கல்வித் திணைக்களத்தின் சார்பில் 2 உயர் அதிகாரிகளும் 6 ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள். தேசிய நிலை செந்தமிழ் விழாவில் கலந்துகொள்ளும் பேரா மாநிலப் போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:- * தமிழ்ப்பள்ளி...
27.08.2019 –ஆம் நாள் பேரா, பத்தாங் பாடாங் மாவ ட் டம், தேசிய வகை கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளிக்கு இந்திய கல்வியாளர் திட்டத்தின் கீழ் அறுவர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து அதிகாரப்படியான வருகை மேற்கொண்டனர். இந்தியா மஹாராஷ்டிரா, பெங்களூரு மற்றும் குஜராத் மாநிலங்களைப் பிரதிநிதித்து இக்கல்வியாளர்கள் வந்திருந்தனர். வருகை புரிந்த பேராசிரியர், பள்ளியின் முதல்வர், அனைத்துலக கணித ஆசிரியர், இந்திய அரசாங்க நிகராளி, பொருளக மற்றும் காப்புறுதிச் சேவையாளர்கள் அடங்கிய இந்தக் குழுவினரைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன், துணைத்தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர். மலேசியாவில் தொடக்கப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிந்து கொள்ள வந்தவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள் விளக்கப்பட்டன. மேலும் அவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறைகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்களைப் பாலர் பள்ளி ஆசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்களும் அளித்தனர். அவர்கள் மாணவர...
தமிழ்ப்பள்ளிப் பாட நூல்கள் உள்பட, மலேசியக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பாட நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிப் பாடநூல்களை மின்னியல் வடிவத்தில் பார்க்கலாம்; படிக்கலாம். தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தேசியப்பள்ளிக்கான பாடநூல்கள் [BUKU TEKS KSSR] வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான பாடநூல்கள் மட்டும் இப்போதைக்கு உள்ளன. அதேபோல, இடைநிலைப்பள்ளி படிவம் 1 முதல் படிவம் 5 வரை பாடநூல்களும் உள்ளன. தமிழ்ப்பள்ளிக்கான பாடநூல்கள் :- BUKU TEKS SJK(T) [ஆண்டைச் சொடுக்கவும் / Klik Tahun] ஆண்டு / TAHUN 1 ஆண்டு / TAHUN 2 ஆண்டு / TAHUN 3 ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
பேராவில் செயின்ட் பிலோமினா கான்வன்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இப்பள்ளியின் மாணவிகளாகிய விசாலினி ஸ்ரீ, சுஜித்ரா ஸ்ரீ ஆகிய உடன்பிறந்த சகோதரிகளே இந்த மகத்தான சாதனையைச் செய்துள்ளனர். 17.04.2018இல் கெடா, கூலிமில் நடைபெற்ற சிறிம் ஆக்கம், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி 2018இல் (SIRIM Invention, Innovation & Technology Expo) கலந்துகொண்ட இந்தச் சகோதரிகளின் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. செயலிழந்த கைக்கும் விரலுக்கும் அசைவுகள் கொடுத்துப் படிப்படியாக குணப்படுத்தும் புதுவகைக் கருவி ஒன்றை (Materials Application For Hand / Fingger Rehabilitation Theraphy) உருவாக்கியதற்காக இவ்விரு மாணவிகளுக்கும் இந்தத் தங்க விருது கிடைத்துள்ளது. இந்த மாணவிகள் இருவரையும் தங்கப் பதக்க வெற்றியை நோக்கி வழிநடத்தியவர்கள் இருவர். ஒருவர் மணிப்பால் அனைத்துலகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர்.எஸ்.கிருஷ்ணன். மற்றொருவர், சுல்தான் இட்ரிஸ் ஷா சிகிச்சை அறவாறியத்தின் செயல்முறை அதிகாரி டத்தோ முன...
Kalisridevi
ReplyDeleteDenisha
ReplyDelete