Posts

Showing posts from May, 2019

இந்தோனேசியாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2தங்கம் 1வெள்ளி வென்றனர்

Image
கடந்த ஏப்ரல் 22 முதல் 26 வரை, இந்தோனேசியா சுராபாயா, மாலாங் மாநிலத்தில் மா சூங் பல்கலைக்கழகத்தில் அக்கு அசோசியாசியா (AKU ASOSIASIA) மற்றும் இந்தோனேசியா இளம் ஆய்வாளர் மன்றமும் இணைந்து நடத்திய 2வது அனைத்துலக அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2தங்கம் 1வெள்ளி வென்றனர். இப்போட்டியில் பேராக் மாநிலம் மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய வகை முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி 2தங்கமும், தேசிய வகை சுங்கை வாங்கி தோட்ட தமிழ்ப்பள்ளி 1வெள்ளியும் வென்றன. சிறந்த கண்காட்சிக் கூடத்திற்கான விருது மலேசியாவுக்கு கிடைத்தது. தேசிய வகை முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி. தே. தெய்வமலர் நாகேந்திரன் அவர்கள் தட்டிச் சென்றார். மஞ்ஜோங் வரலாற்றில் அனைத்துலக புத்தாக்க போட்டிகளில் பங்கு கொண்டு வென்றது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 81 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுடம் போட்டியிட்டு தங்கமும் வெள்ளியும் வென்றது பெருமைக்குரியது. அறிவியல், படைப்பாற்றல், குழு ஒற்றுமை என மூன்று பிரிவுகள