Posts

Showing posts with the label KONVENSYEN

SJK(T) KERUH -ஆசிரியர் குமாரி சீதாலட்சுமிக்குச் சிறந்த ஆசிரியருக்கான அனைத்துலக விருது

Image
📹 காணொலி இணைப்பு பள்ளிப் பெயர் / Nama Sekolah: குரோ தமிழ்ப்பள்ளி, ஊலு பேரா மாவட்டம், பேரா SJKT KERUH, DAERAH HULU PERAK, PERAK விருது / Nama Anugerah: அனைத்துலக நல்லாசிரியர் விருது GLOBAL TEACHER AWARD 2021 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA நாள் / Tarikh: 10.10. 2021 ஏற்பாட்டாளர் / Penganjur: AKS EDUCATION AWARDS, HARYANA, INDIA தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி.மு.செல்வராணி PUAN SELVARANI MUNIANDY சாதனை ஆசிரியர் / Nama Guru Terlibat: செல்வி சீதாலட்சுமி பாலு CIK CHEETALAKCHUMY BALU

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலண்டன் மாநகரில் ஏறக்குறைய 200 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. தற்போது இலண்டனிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் உள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இதேபோல, நம் மலேசியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிருந்தே இல்லிருப்புக் கற்றல் முறைகளை இணையம் வழி மேற்கொண்டனர். அந்த வகையில், பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ‘இயங்கலை பயில்களம்’ என்ற பெயரில் இணையம் வழி பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு, தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை என்ற தலைப்பில் இயங்கலையில் பல்வேறு பயிற்சிகளைத் தமிழ்ப்...

SJK(T) GOPENG - மழலையர் பள்ளி ஆசிரியர் நாகலட்சுமியின் புத்தாக்கம்

Image
கடந்த 14.11.2019 வியாழக்கிழமை பேரா மாநில நிலை மழலையர் பள்ளி கருத்தரங்கமும் நனிச்சிறந்த நடைமுறை பகிர்வும் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கைப் பேரா மாநிலக் கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. தென் கிந்தா மாவட்டம் , கொப்பேங் தமிழ்ப்பள்ளியின் மழலையர் பள்ளி ஆசிரியர் திருமதி.நாகலட்சுமி இந்தக் கருத்தரங்கத்தில் தமது புத்தாக்கம் பற்றி படைப்பினை வழங்கினார்.  வாசிப்புப் பெட்டகம் ( WORDS CANDY BOX ) என்ற தம்முடைய புத்தாக்கத்திற்காக இவர் , 2019இல் மாநில நிலையில் முதல் பரிசாகத் தங்கப் பதக்கமும் , தேசிய நிலையில் மூன்றாம் பரிசும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்வி இயக்குநர் டத்தோ டாக்டர் அமின் செனின் அவர்களிடம் தேசிய நிலை 3ஆம் பரிசு பெறுகிறார் பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் ஹஜி ரோஸ்லி பின் அகமாட் அவர்களுடன் இந்த மாபெரும் வெற்றிக்கான தம்முடைய முயற்சிகள் மற்றும் வாசிப்புப் பெட்டகத்தின் புத்தாக்கம் பற்றி அவர் விளக்கிக் காட்டினார். மாநில நிலையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தமது புத்தாக்கம...

SJK(T) LADANG ALAGAR - ஆசிரியர்கள் இருவர் கணித ஆய்வுக் கட்டுரை படைத்தனர்

Image
ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் கடந்த 22.10.2019 செவ்வாய்க்கிழமை கணிதப் பாட தேசிய நிலைக் கருத்தரங்கம் நடந்தது. Cik Puspavali Nagan dan Cik.Gayatiri Balasubramaniam guru SJK(T) Ladang Alagar, Daerah LMS membentang Kertas Kajian dalam Seminar Pendidikan Matematik Peringkat Kebangsaan di IPG Kampus Ipoh pada 22.10.2019 அந்தக் கருத்தரங்கத்தில் பேரா , லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் செல்வி புஷ்பவள்ளி நாகன் மற்றும் செல்வி காயத்திரி பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் ஆய்வுக் கட்டுரை வழங்கினர். ஆசிரியை செல்வி காயத்திரி ஆசிரியை செல்வி புஷ்பவள்ளி வாய்பாடு பலகையைப் பயன்படுத்துவதன் மூலம் வாய்பாட்டில் திறன் அடைதல் (KEBERKESANAN PENGGUNAAN PAPAN SIFIR FIX ME DALAM MENGUASAI SIFIR BAGI MURID TAHAP 1 DAN 2) எனும் தலைப்பில் அவர்கள் தங்கள் கட்டுரையைப் படைத்தனர். ஆசிரியர் இருவருக்கும் நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

SJK(T) LADANG KALUMPUNG - SAHConfEd19இல் 2 ஆசிரியர்கள் ஆய்வுக் கட்டுரை படைத்தனர்

Image
கெடா மாநிலம், சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கல்விக் கழகத்தில் (IPSAH) நடைபெற்ற  'SAHConfEd19' எனப்படும் கல்வியியல் ஆய்வு மற்றும்  கற்றல் கற்பித்தல் நனிச்சிறந்த நடைமுறை தேசிய நிலை கருத்தரங்கம் (SEMINAR PENYELIDIKAN PENDIDIKANDAN AMALAN TERBAI PdP PERINGKAT KEBANGSAAN 2019) நடைபெற்றது. அக்டோபர் 16 - 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேரா, கிரியான் மாவட்டம், களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை சங்கீதா இராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியை கலைவாணி செங்கோடன் ஆகிய இருவரும் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். ஆசிரியர் பெயர் / NAMA GURU :- KALAIVANI A/P CHENGODAN ஆய்வுத் தலைப்பு / TAJUK PENYELIDIKAN:- Pengaruh Pelaksanaan Komuniti Pembelajaran Profesional (PLC) Terhadap Kualiti Guru SJK(T) Generasi 'Y' Daerah Kerian, Perak ஆசிரியர் பெயர் / NAMA GURU :- SANGGITA RAMAKRISHNAN ஆய்வுத் தலைப்பு / TAJUK PENYELIDIKAN:- 'Bulatan Bundarkan' Bagi Meningkatkan Kefahaman Dan Kemahiran Murid Dalam Topik Bundarkan இந்...

UPSI - புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் பேரா ஆசிரியர்கள் கட்டுரைப் படைப்பு

Image
11-12 அக்டோபர் 2019இல் சுலுத்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில்  புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கிய மூன்றாம் பன்னாட்டு மாநாடு 2019 நடைபெற்றது. புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியங்களில் தமிழர்களின் குமுகாயச் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடந்தது. மலேசியா உள்பட தமிழ்நாடு, சிங்கப்பூரிலிருந்து பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இந்தப் பன்னாட்டு நிலை மாநாட்டில் நமது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் ஆய்வுக் கட்டுரை படைத்தனர்.  #1 ஆசிரியர் பெயர் : சந்திரன் கோவிந்தன் பள்ளிப் பெயர் : சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கமுண்டிங், பேரா ஆய்வுக் கட்டுரைத் தலைப்பு : குறிஞ்சிக் குமரனாரின் தமிழருவியில் வெளிப்படும் பண்பாட்டுச் சிந்தனைகள் #2 ஆசிரியர் பெயர் : கலைவாணி செங்கோடன் பள்ளிப் பெயர் : களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பாகான் செராய், பேரா ஆய்வுக் கட்டுரைத் தலைப்பு : சிறுகதை செல்வர் ஆர்.சண்முகத்தின் சிறுகதைகளில் காணப்படும் மலேசியத் தமிழர்களின் குமுகாயச் சிக்கல்களும் தீர்வுகளும் பன்னாட்டு நிலை இலக்கிய மாநாட்டில் மலேசியத் தமிழர்கள் ...

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு

Image
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது.  பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.       இந்தப் பயிலங்கில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 8 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் நனிச்சிறந்த நடைமுறை [AMALAN TERBAIK SJK(T)]  பற்றி படைப்பை அரங்கேற்றினர். அவரவர் பள்ளியில் சிறப்பாக உருவாக்கப்பட்ட காணொலிகள் துணையுடன் அவர்கள் தங்களின் படைப்பை வழங்கினார்கள்.      தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பான வெற்றிக் கதைகளும் சாதனைகளும் காணொலி வடிவத்தில் நனிச்சிறந்த நடைமுறைகளாக அரங்கேறி அனைவருடைய கண்களையும் கருத்தையும் கவர்ந்தன என்றால் மிகையில்லை. 8 orang Guru Besar dari SJK(T) Negeri Perak telah menyampaikan persembahan Amalan Terbaik Sekola...