Posts

Showing posts from December, 2021

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah: கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தென் கிந்தா மாவட்டம், பேரா SJKT LADANG KAMPAR, DAERAH KINTA SELATAN, PERAK போட்டி / Pertandingan: அனைத்துலகப் புத்தாக்கம், புனைவாக்கம் மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி Internatinal Invention, Innovation & Design Expo (INoDEx 2021) நிலை / Peringkat: அனைத்துலக நிலை /Antarabangsa அடைவு / Pencapaian: வெண்கலப் பதக்கம் / Bronze medal நாள் / Tarikh: 8 & 9 November 2021 புத்தாக்கம் / Inovasi: கணித மாயக் கட்டம் /    PETAK MAYA MATEMATIK ஏற்பாட்டாளர் / Penganjur: USM, UTM,CREST & SIRIM தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி.இராஜேஸ்வரி சுப்பிரமணியம் PN.RAJESWARY SUBRAMANIAM பொறுப்பாசிரியர் / Guru Terlibat: திருமதி சங்கீதா கிருஷ்ணா PN.SANGEETHA KRISHNA சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1 செல்வன் யோகேந்திரன் / R.Yoogenthiran 2.செல்வன் பிரதிப் / Y. Pritip 3.செல்வன் மெல்வின் / D.Melvin

SJK(T) KG.JEBONG LAMA - காரம் குறையாத கடுகுப் பள்ளியின் சாதனைகள்

Image
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் செயல்படும் கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி குறைந்த மாணவர் கொண்ட (SKM) பள்ளியாகும். கடுகுக் குறைந்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஒப்ப சிறு பள்ளியாக இருந்தாலும் கீர்த்தி மிகுந்த பள்ளியாக மிளிர்கின்றது. 2021ஆம் ஆண்டு முழுவதும் இப்பள்ளி பல சிறப்பான நடவடிக்கைளையும் மாணவர் வளப் பணிகளையும் நடத்தியுள்ளது. மேலும், மாவாட்ட மற்றும் மாநில நிலையில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பெயர் பொறித்துள்ளது. கல்விப் பணியோடு மாணவர் உருவாக்கமும் இப்பள்ளியில் நன்முறையில் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கி.சந்திரிகா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தில் மிகவும் துடிப்பாகச் செயல்படும் பள்ளியின் ஆசிரியர்களையும் நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும். தலைமையாசிரியர் திருமதி கி.சந்திரிகா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மின்னும் நடசந்திரங்களாக உருவாக்கியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிறப்பான அடைவுகளையும் சாதனைகளையும் தொகுத்து  '2021இன்

SJK(T) LDG.GLENEALY - IIMOS 2021 இளம் ஆய்வாளர்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டி VIRTUAL YOUNG INNOVATOR COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 30-11-2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான், இந்தோனேசியா அல் அசார் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தேசிய நூலகம் UITM KELANTAN, UNIVERSITI AL-AZHAR INDONESIA & PERSATUAN PUSTAKAAN MALAYSIA தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY செல்வி.கஸ்தூரி / CIK.KASTURI திருமதி.சரஸ்வதி / PN.SARASWATHY திருமதி.தேன்மொழி / PN.THENMOLI திருமதி.தவமணி / PN.TAVAMANI சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வன் கேசவன் / K. KESAVAN செல்வன் லிங்கேஸ்வரன் / G. LINGESWARAN செல்வன் உதயசூரியா / V. UTHAYA SURIA

SJK(T) LDG.GLENEALY - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் புத்தாக்கப் போட்டி VIRTUAL INNOVATION COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 3 OKTOBER 2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான் UNIVERSITI TEKNOLOGI MARA KELANTAN தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY திருமதி புவனேஸ்வரி / PN.PUVANESWARI திருமதி நிவேதா / PN.NIVETHA திருமதி.கேமாமாலினி / PN.KEMAMALINI திருமதி.பிரியங்கா / PN.PRIYANGKA சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வி தஷ்வினி / M. THASHVINI செல்வி யுவனேஸ்வரி / B. YUWANEAWARI செல்வி கீர்த்திகா / M. KIRTHIKA

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி

Image
18.12.2021 ஆம் நாள் அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இரட்டை வெற்றியைக் கண்டு மலேசியப் போட்டியாளர்கள் மாபெரும் சாதனை படைத்தனர். Adik Johnnes Abisya Edwin (SJKT Perak Sangetha Sabah, Ipoh) dinobatkan sebagai Johan dan Adik Darshini Kumaran (SJKT Ldg.Batak Rabit, Teluk Intan) menjadi Naib Johan dalam Pertandingan Pidato bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Antarabangsa pada 18.12.2021 வணக்கம் மலேசியா நிறுவனம் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர் மையமும் இணைந்து 7ஆவது ஆண்டாக நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிப் போட்டி இயங்கலை வாயிலாக நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த 2 போட்டியாளர், இலங்கையிலிருந்து ஒருவர், டென்மார்க் நாட்டிலிருந்து ஒருவர் என 4 பேர் இறுதிப் போட்டியில் களமிறங்கினர். அமைதியான உலகம் வேண்டும். அதற்கு என் உடனடி ஆணை வேண்டாம் ஆயுதம், வேண்டாம் கைப்பேசி, வேண்டாம் மது, வேண்டாம் நகரமயம் எனும் 4 நிலைப்பாடுகளில் ஒவ்வொரு போட்டியாளரும் பேசினர். வேண்டாம் நகரமயம் என்ற நிலைப்பாட்டில் மிகச் சிறப்பாகப் பேசியதோடு மிக இலாவ

SJK(T) METHODIST, MALIM NAWAR - தீபாவளி & சிறுவர் நாள் கொண்டாட்டம்

Image
🎥 காணொலி இணைப்பு 9-12-2021ஆம் மாலிம் நாவார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் சிறுவர் நாளோடு கோலாகல தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குறுகிய காலத்திலேயே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இக்கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட கண்கவர் ஆடல் பாடலுடன் ஆடை அலங்காரப் படைப்புகளும் இடப்பெற்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் கோரணி பெருந்தொற்றின் காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. பல மாதங்களாக இல்லிருப்புக் கற்றல்  கற்பித்தலிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலானப் போட்டிகளில் சிறப்பாக பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும்  தலைமையாசிரியை திருமதி லோகேஸ்வரி  பாராட்டுகளைத் தெரிவித்தார். குறுகியக் காலத்தில் அப்போட்டிகளில் சிறப்பான அடைவுகளைப் பதிவு செய்ய மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் பங்களிப்பிற்கான நற்சான்றிதழ்கள் வழங்கும் அங்கமும் இந்நாளில் சிறப்பாக நடந்தேறியது. சிறுவர் நாளுக்காக உணவும் பனிக்கூழும் வழங்

SJK(T) LADANG KATI - மறக்கப்பட்ட தமிழர் உணவுமுறை அறிமுக நிகழ்ச்சி

Image
SJK(T) Ladang Kati, Kuala Kangsar, Perak menganjurkan pameran Masakan & Makanan Tradisional Tamil கோரணி பெருந்தொற்றினால் கடந்த ஆறு மாதங்களாக இல்லிருப்புக் கற்றலை மேற்கொண்ட மாணவர்கள் , 22ஆம் திகதி நவம்பர் மாதத்திலிருந்து தங்களின் இயல்பான பள்ளி வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இவ்வேளையில் மாணவர்களுக்குக் கற்றலின்பால் ஆர்வத்தைத் தூண்டவும் கற்பிக்கும் திறன்களைக் கைவரப்பெறவும் கல்வி அமைச்சு பல்வகை கற்றல் அணுகுமுறைகளை வலியுறுத்தி வருகின்றது. அவ்வணுகுமுறைகளுள் ஒன்றான செயல்முறைக் கற்றல் மாணவர்கள் உய்த்துணர்ந்து ஒன்றைக் கற்கவும் நாடிக்கற்றலைத் தூண்டவும் வழிவகுக்கும் மிகச் சிறந்த அணுகுமுறையாகும்.  இந்தச் செயல்முறை கற்றலை எவ்வாறு நனிச்சிறப்பாக மாணவரிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக , அண்மையில் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கை அமைந்திருந்தது. ஆசிரியை குமாரி தனலட்சுமி குப்புசாமி அவர்களின் வழிகாட்டலில் ஆண்டு 4 , ஆண்டு 5 மற்றும் ஆண்டு 6 மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில்   தமிழர்களால் மறக்கப்பட்ட , மறுக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள் எனும் கருப்பொருளோடு தானியங்கள

SJK(T) LADANG CASHWOOD - இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT LADANG CASHWOOD, DAERAH MANJUNG, PERAK  விருது / Nama Anugerah: அனைத்துலக இளம் கண்டுபிடிப்பாளர் விருது YOUNG INVENTER INTERNATIONAL EXPO OF INNOVATION PRODUCT AND SYSTEM DESIGN (IN-VIDE 2021) நிலை / Peringkat:  அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER MEDAL நாள் / Tarikh:  22/11/2021 ஏற்பாட்டாளர் / Penganjur: பெர்லிஸ்  மலேசியப் பல்கலைக்கழகம்  UNIVERSITY MALAYSIA PERLIS தலைமையாசிரியர் / Guru Besar:  திருமதி பரமேஸ்வரி சந்திரன் PUAN PARAMESWARY CHANDRAN  சாதனை மாணவர்கள் / Murid Terlibat:  1.குகேஸ் பிரபு / KUGESH A/L PERABU 2.மகஸ்னி தனபாலன் / MAGASNIE A/P DHANAPALAN 3.ருத்ராசா பிரகாஷ் / RUTRASA A/P PRAKASH

அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு

Image
வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசியா, இலங்கை, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். இவர்களுள் மலேசியாவின் நிகராளிகள் இருவர். அந்த இருவருமே பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . Adik Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah,Ipoh dan Adik Darshini Kumaran dari SJK(T) Ladang Batak Rabit, Teluk Intan telah mara ke Pusingan Akhir Pertandingan Pidato Manavar Muzhakkam Peringkat Antarabangsa mewakili Malaysia. ஒருவர், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவர் ஜோனஸ் அபிசியா எட்வின். மற்றொரு மாணவி பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தர்சினி குமரன். இவர்கள் இருவரும் தங்களின் பள்ளிக்கு மட்டுமின்றி பேரா மாநிலத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றால் மிகையாகாது. இந்தச் சாதனை மாணவர்கள் இருவருக்கும் அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் மனமா