DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்
தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டங்களும் [DSKP] அண்டுத் திட்டங்களும் [RPT] இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த அரும்பணியைச் செய்துள்ளார். ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான கலைத்திட்டங்கள் தமிழ்மொழியில் இங்கு கிடைக்கும்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மை கருதி ஐயா அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் பல்வேறு ஆவணங்கள், கலைத்திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள், வினாத் தாள்கள், பயிற்றிகள் ஆகியவற்றைத் தமது வலைப்பதிவில் தொகுத்து வைத்துள்ளார்.
| தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திரு.முனியாண்டி ராஜ் - En.Muniandy Raj, Guru Cemerlang Bahasa Tamil SJK(T) Telok Panglima Garang, Selangor. |
தமிழ்ப்பள்ளி நலன்கருதி தமிழ் உள்ளத்தோடும் தொண்டு மனப்பான்மையோடும் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த நற்பணியைப் போற்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்.
அவருடைய வலைப்பதிவைப் பார்வையிட சொடுக்கவும்:-

Good effort. Really useful
ReplyDelete