Posts

Showing posts from August, 2020

SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் போட்டியில் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசு

Image
மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டியில் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசை வென்று சாதனை செய்துள்ளார். Adik Navasri Guganath dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak, Perak menang sebagai Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 29.08.2020. மாணவர் முழக்கம் 2020 தேசியநிலைப் போட்டி 29.08.2020ஆம் நாள் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது. மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ மு.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர் முழக்கம் முதல் சுற்றில் நாடு தழுவிய நிலையில் 2300 மாணவர்கள் கலந்துகொண்டனர், இரண்டாம் சுற்றில் 200 மாணவர்களும் அவர்களுள் 20 போட்டியாளர்கள் அரையிறுதிச் சுற்றிலும் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிக்கு 4 போட்டியாளர்கள் தேர்வாகினர். கோறனி நச்சில் பெருந்தொற்று காரணமாக இவ்வாண்டின் மாணவர் முழக்கம் அரையிறுதிச் சுற்று வரையில் இயங்கலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான வாதத்தை வழங

SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றது

Image
மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டிக்குப் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் ர.நவஶ்ரீகுணநாத் தகுதிப் பெற்றுள்ளார். அறையிறுதிச் சுற்றில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட வேளையில் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகினர். அவர்களுள்  ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிபெற்று பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத்திற்கே பெருமை சேர்ந்த்துள்ளார். மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. அதில் 20 மாணவர்கள் அறையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். அவர்களுள்  4 போட்டியாளர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் . செல்வன்  ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுகள்; பயிற்றுவித்த  பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.  

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலண்டன் மாநகரில் ஏறக்குறைய 200 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. தற்போது இலண்டனிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் உள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இதேபோல, நம் மலேசியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிருந்தே இல்லிருப்புக் கற்றல் முறைகளை இணையம் வழி மேற்கொண்டனர். அந்த வகையில், பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ‘இயங்கலை பயில்களம்’ என்ற பெயரில் இணையம் வழி பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு, தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை என்ற தலைப்பில் இயங்கலையில் பல்வேறு பயிற்சிகளைத் தமிழ்ப்