Posts

Showing posts from February, 2020

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா

Image
  காணொலி இணைப்பு  ⏭  அனைத்துலத் தாய்மொழி நாள் பிப்பிரவரி 21ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பேரா மாநிலத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா வெகுச் சிறப்பாக நடந்தது. 2018இல் பேரா மாநிலத்தில் முதன் முறையாக 35 தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி விழா கொண்டாடப்பட்டது. 2019இல் எண்பது பள்ளிகளில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த 2020இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இவ்விழா நடந்துள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி விழா மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் தமிழ்மொழி உணர்வோடும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ பள்ளிகள் தோறும் தமிழ் சார்ந்த படைப்புகள், நாடகம், நடனம், காணொலிப் படைப்பு, தமிழறிஞர் மாறுவேடம், தமிழ்க்கோலம், சிறப்புரை எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் பண்பாட்டு உடையில் கலந்துகொள்வது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மேலும், தாய்மொழி

அறிவியல் விழா 2020 - வடபேரா ஆசிரியர்களுக்கான பட்டறை

Image
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழா இந்த ஆண்டிலும் தொடரவுள்ளது. இவ்வண்டிற்கான அறிவியல் விழா தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் பட்டறை 26.02.2020 புதன்கிழமை பிற்பகல் மணி 2:00 - 5:00 வரையில் நடைபெற்றது. தைப்பிங், செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளியில் நடந்த இந்தப் பட்டறையில் வடபேரா வட்டாரத்தைச் சேர்ந்த  மொத்தம் 52 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன. அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கத்தின் தலைவர் முனைவர் முகம்மது யூனூஸ் யாசின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பட்டறையை வழிநடத்தினார்.

விழி - மடல் 26 : தாய்நலன் காப்பது சேய்கடன் தானே

Image

SJK(T) DAERAH KERIAN - ஆசிரியர்களின் பொங்கல் விழா 2020

Image
22.2.2020ஆம் நாள் சனிக்கிழமையன்று பேரா மாநிலம், கிரியான் மாவட்டத்தில் உள்ள 14 தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றிணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரிட் புந்தார், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் ஒன்றுசேர்ந்து கோலாகலமாகப் பொங்கல் விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிரியான் மாவட்டத் தலைமை ஆசிரியர்கள் / து.த.ஆசிரியர்கள் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக அதன் தலைவர் இரா.சுப்பிரமணியம் தெரிவித்தார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் சிறப்பு வருகை மேற்கொண்டார். மாவட்டக் கல்வி அலுவலகத் துணை அதிகாரி சம்சுடின் அவர்களும் கலந்து சிறப்பித்தார். முன்னாள் தலைமையாசிரியர்கள் எஸ்.ஓ.அப்பன், மு.குப்புசாமி, கை.சந்திரசேகரன் மூவரும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தனர்.  கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி யாம் ச