Posts

Showing posts from November, 2019

BAGAN DATUK, HILIR PERAK மாவட்ட நிலை விளையாட்டு விழா

Image
கடந்த 17.11.2019ஆம் நாள் ஞாயிறு காலை மணி 8:00 தொடங்கி பாகான் டத்தோ மாவட்டம் , ஊத்தான் மெலிந்தாங் , பாரதி தமிழ்ப்பள்ளித் திடலில் மாவட்ட நிலை விளையாட்டு விழா நடைபெற்றது. இது 10ஆவது ஆண்டாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் ஐவர் காற்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய 2 போட்டிகள் நடந்தன. ஐவர் காற்பந்து போட்டியில் 16 குழுக்களும் கைப்பந்து போட்டியில் 9 குழுக்களும் கலந்துகொண்டன.   ஐவர் காற்பந்து போட்டி (ஆண்கள்) வெற்றியாளர்கள்:- முதல் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 2ஆம் நிலை :- ஊலு பெர்னாம் தோட்டம் 2 தமிழ்ப்பள்ளி 3ஆம் நிலை :- நோவா ஸ்கோசியா தோட்டம் 1 தமிழ்ப்பள்ளி 4 ஆம் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி கைப்பந்து போட்டி (பெண்கள்) வெற்றியாளர்கள்:- முதல் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி 2ஆம் நிலை :- காமாட்சி தோட்டம் தமிழ்ப்பள்ளி 3ஆம் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 4 ஆம் நிலை :- செலாபா தமிழ்ப்பள்ளி பாகான் டத்தோ , கீழ்ப்பேரா ஆகிய 2 மாவட்டங

UPSR 2019 - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சி

Image
2019ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த அடைவுகளைப் பெற்று நமது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி அடைந்துள்ளோம். வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்னும் முழக்கத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம். இவ்வாண்டில், 69.12% தேர்ச்சி பெற்று பேரா தமிழ்ப்பள்ளிகள் வரலாறு படைத்துள்ளோம். 2018ஐ விட 2.2% தேர்ச்சி விகிதம் உயர்வு கண்டுள்ளது. தேசிய பள்ளிகள் 70.54% தேர்ச்சியும் சீனப்பள்ளிகள் 69.15% தேர்ச்சியும் பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 37 மாணவர்கள் 8ஏ பெற்றுள்ளனர். அதிகமான மாணவர்கள் 7ஏ மற்றும் 6ஏ பெற்றுள்ளனர். பாட வாரியாக அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிநிலை சிறந்த அடைவைப் பதிவு செய்துள்ளோம்.  இவ்வாண்டின் யூபி எஸ் ஆர் முடிவுகள் மிக்க மகிழ்ச்சியைத் தரும் வகையில் உள்ளன. இந்தச் சிறப்பான அடைவுக்காக உழைத்து வெற்றி கண்டுள்ள நமது மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  இதற்காக அரும்பாடு பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், பொது இயக்கங்கள், தனி நபர்கள், தமிழ்ப்பள்ள

விழி - மடல் 23 : ஆசிரியரின் உயரம் ஆசிரியத்தின் உயரம்

Image

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

Image
21ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st CENTURY EDUCATION) உருமாற்றத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதற்கேற்ப ஒட்பம் நிறுவனம் 25 தமிழ்க்கல்விச் செயலிகளைத் (TAMIL EDUCATIONAL MOBILE APPS) தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக வெளியீடு செய்துள்ளது.   தமிழ் இலக்கணம் , மொழி விளையாட்டு , திருக்குறள் , செய்யுள் , அறிவியல் , மலாய் , நன்னெறி , வரலாறு போன்ற பாடங்கள் தொடர்பான 25 குறுஞ்செயலிகள் (APPS) இதில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் வகுப்பறைக் கற்றல் எளிமையாக்கல் நடவடிக்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றால் பொய்யில்லை. அதோடு , மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்தச் செயலிகளைத் திறன் கருவிகளில் (GADGETS) பயன்படுத்தவும் முடியும். ஒட்பம் நிறுவனத்தின் தமிழ்க்கல்விச் செயலிகளைக் கீழ்க்காணும் முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கூகிள் பிளேவுக்குச் ( GOOGLE PLAY ) சென்று அங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய / DOWNLOAD http://otpam.com/academy/ மலேசியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ்க்க

SJK(T) ST.MARY'S - திருமுறை விழா 2019 ஒட்டுமொத்த வெற்றியாளர்

Image
பேரா , கிரியான் மாவட்டம் , கோலக் குராவ் பட்டணத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட நிலையில் திருமுறை விழா சிறப்புற நிகழ்ந்தது. தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களின் பேரா மாநில சிறப்பு அதிகாரி திருவாளர்.நாகேஷ் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் உடன் கலந்துகொண்டார். ஆலயத் தலைவர் திரு.எஸ்.ஓ.அப்பன் அனைவரையும் வரவேற்றுப் பேசி ஆலயத்தின் பணிகளைப் பற்றி விவரித்தார். போட்டியில் கலந்துகொள்ள மாணவர்களை அனுப்பிவைத்த கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். செயிண்மேரி தமிழ்ப்பள்ளிக் குடும்பத்தினர் செயிண்மேரி தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் சுழற்கிண்ணம் பெறுகிறார் மாவட்ட நிலையில் நடைபெற்ற இந்தத் திருமுறை விழாவில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தேர்வு பெற்றது. அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியம் சுழற்கிண்ணத்தைப் பெற

SJK(T) LADANG CHEMOR - இடைநிலைப் பள்ளியை நோக்கி.. வழிகாட்டி நிகழ்ச்சி

Image
2019 யூ.பி.எஸ்.ஆர். தேர்வை முடித்த சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி  மற்றும் சத்தியசீலா தோட்டத் தமிழ்ப்பள்ளிகளின் 6ஆம் ஆண்டு  மாணவர்கள் இன்னும் மூன்றாண்டுகளில்  பி.டி.3  தேர்விலும்  SPM தேர்விலும் தமிழ் மொழி பாடத்தை ஒரு தேர்வுப் பாடமாகக் கண்டிப்பாக எடுப்போம் என உறுதி மொழி வழங்கினர். “இடைநிலைப் பள்ளியை நோக்கி…” எனும்  கருத்தரங்கைச் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்திருந்தது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கற்பகவள்ளி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஈப்போ குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகத்தின் செயலவை உறுப்பினர் நந்தகுமாரன்  சிறப்புப் பேச்சாளராக மாணவர்களிடம் உரையாற்றினார். இக்கருத்தரங்குகில் 2019 யூ.பி.எஸ்.ஆர். தேர்வை முடித்த சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள் 10 பேருடன் அருகில் உள்ள சத்தியசீலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த 6 மாணவர்களும் உடன் கலந்து கொண்டனர். ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நமது மாணவர்கள் தங்களை எப்படியெல்லாம் தயார் படுத்துக் கொள்ள வேண்டும