Posts

Showing posts from October, 2019

SJK(T) NATESA PILLAY - அனைத்துலக அறிவியல் போட்டியில் வெங்கலம் வென்று சாதனை

Image
கீழ்ப்பேரா மாவட்டம், நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 4 பேர் கடந்த 24.10.2019 முதல் 27.10.2019ஆம் நாள் வரை இந்தோனீசியாவில் நடைபெற்ற கணிதம் மற்றும் அறிவியல் அனைத்துலக நிலை புதிர்ப் போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் மலேசிய நாட்டின் நிகராளிகளாக இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். Murid-Murid SJK(T) Natesa Pillai Menang Pingat Gangsa Dalam Pertandingan Kuiz Sains Dan Matematik Peringkat Antarabangsa Di Bogor, Indonesia Pada 24 - 27 Oktober 2019 நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனுசியா அன்பழகன் மற்றும் திவினேஷ்வரன் சந்திரன் ஆகிய இருவர் வெங்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்களோடு சேர்ந்து தீபராஜ் இளங்கோ மற்றும் விஜயராஜ் சந்திரசேகரன் ஆகிய இரண்டு மாணவர்களும் இப்போடியில் பங்கேற்றனர். நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகேஸ்வரி வீரன் மற்றும் பிரேம்குமார் கண்ணன் ஆகிய இருவரும் மாணவர்களுடன் சென்றிருந்தனர். அனைத்துலக நிலையில் வெங்கலப் பதக்கம் வென்றுள்ள நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனை பள்ளிக்கும் தலைமையாசிரியர் திருமதி,குமுதா, ஆசிரியர்கள்

SJK(T) ST.THERESA’S CONVENT – இந்தோனீசியாவில் வெள்ளிப் பதக்கம் வாகை சூடி சாதனை

Image
அக்டோபர் 23 முதல் 26 வரை இந்தோனீசியா, தங்கேராங் நகரத்தில் அனைத்துலக இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டி (INTERNATIONAL EXHIBITION FOR YOUNG INVENTORS 2019)  நடந்தது. இதில் கலந்துகொண்ட பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயின்ட் தெரெசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 3 orang murid SJK(T) St.Theresa's Convent, Taiping, Daerah Larut Matang & Selama meraih Pingat Perak dalam INTERNATIONAL EXHIBITION FOR YOUNG INVENTORS 2019 yang berlangsung di Tangerang, Jakarta, Indonesia pada 23 -26 Oktober 2019 செயின்ட் தெரெசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களாகிய தான்யாலட்சுமி விக்னேஸ்வரன், தமிழ்ச்செல்வன் கனகநாதன் மற்றும் மித்ரா கணேசன் ஆகிய மூவரும் சேர்ந்து இந்தச் சாதனையைப் படைத்துத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் திறன் வடிகால் முறையை உருவாக்கியதன் காரணமாக இந்த விருதினைப் பெற்றுள்ளனர். பள்ளியின் ஆசிரியர்கள் லோகநாதன் பெருமாள் மற்றும் விசாலாட்சி அருணாசலம் ஆகிய இருவரும் ம

SJK(T) CHETTIARS - உலகக் கிண்ண சிலம்பப் போட்டியில் மகத்தான சாதனை

Image
கடந்த 4.10.2019ஆம் நாளன்று கெடாவிலுள்ள டேசாகு நகராண்மைக் கழக அரங்கத்தில் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண சிலம்பப் போட்டியில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மாணவர்களாகிய செல்வன் தீரன் ராஜ் யுவராஜி (ஆண்டு 3) முதல் நிலையிலும், செல்வன் ஏரித் கிஷோதரன் (ஆண்டு 1)  முதல் நிலையிலும் மற்றும் செல்வன் வினாஷ் கிஷோதரன் (ஆண்டு 3) இரண்டாம் நிலையிலும் மகத்தான வெற்றியைக் கண்டனர்.         இந்த வெற்றியின் மூலமாக அம்மூன்று மாணவர்களும்  பெற்றோருக்கும்,  பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் வங்காள தேசம், கம்போடியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்திருந்த சிலம்பப் போட்டியாளர்களுடன் இம்மூவரும் போட்டியிட்டு மகத்தான வெற்றியை அடைந்து நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.      செல்வன் தீரன் வயது நான்கு முதல், இச்சிலம்பப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செல்வன் வினாஷ் மற்றும் செல்வன் ஏரித் கடந்த மூன்று வருடங்களாக இப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.    2 orang murid SJK(T) Chettiars, Ipoh men

SJK(T) LADANG BANOPDANE - ஐவர் காற்பந்து போட்டியை நடத்தி வரலாறு படைத்தது

Image
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் முதன்முறையாக பனோப்டேன் கிண்ணம் ஐவர் காற்பந்து போட்டி 2019 (PERTANDINGAN FUTSAL PIALA BANOPDANE 2019) நடந்தேறியது. இந்தச் சிறப்புமிக்க ஐவர் காற்பந்து போட்டி முன்னாள் மாணவர்கள் ஆதரவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு.ஆனந்தன்  இப்போட்டியைத் தொடக்கி வைத்து ரி.ம.9000ஐ வழங்கி பள்ளியின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். மற்றொரு முன்னாள் மானவராகிய திரு.வினோத்  பள்ளியின் சீரமைப்புக்கு ரி.ம.2000 வழங்கினார். பேரா மற்றும் மலேசியா முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் திரு.இரவிந்திரன் அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 குழுக்கள் இப்போட்டியில் பங்கெடுத்தன. முதல் நிலை வெற்றியாளராக டான் ஸ்ரீ மாணிக்கவாசகம்  தமிழ்ப்பள்ளி (குழு 2) மாணவர்கள் சுழற்கிண்ணம், வெற்றி கேடயங்கள் மற்றும் ரிம.800 ரொக்கத்தை வெற்றிக் கொண்டனர். இரண்டாம் நிலை வெற்றியாளராக துன் சம்பந்த

SJK(T) NATESA PILLAY – சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் #3

Image
நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் [LEMBAGA PENDUDUK DAN PEMBANGUNAN KELUARGA NEGARA (LPPKN)] பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக PEKERTI SJK(T) எனப்படும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் ( PROGRAM PENDIDIKAN KESIHATAN REPRODUKTIF DAN SOSIAL ) பயிலரங்கைக் கீழ்ப் பேரா மாவட்டம் , நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடத்தியது. 23.10.2019 புதன்கிழமை நடந்த இந்தப் பயிலரங்கத்திற்கு நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.குமுதா அவர்கள் தலைமை தாங்கினார்.  நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி, சசக்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி , பிளாமிங்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி , செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆ கிய 3 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். காலை மணி 10:00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பிற்பகல் மணி 1:15க்கு நிறைவடைந்தது. சமூகச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் , பாலியல் பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டன. விளக்கவுரை மற்றும்

SJK(T) LADANG ALAGAR - ஆசிரியர்கள் இருவர் கணித ஆய்வுக் கட்டுரை படைத்தனர்

Image
ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் கடந்த 22.10.2019 செவ்வாய்க்கிழமை கணிதப் பாட தேசிய நிலைக் கருத்தரங்கம் நடந்தது. Cik Puspavali Nagan dan Cik.Gayatiri Balasubramaniam guru SJK(T) Ladang Alagar, Daerah LMS membentang Kertas Kajian dalam Seminar Pendidikan Matematik Peringkat Kebangsaan di IPG Kampus Ipoh pada 22.10.2019 அந்தக் கருத்தரங்கத்தில் பேரா , லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் செல்வி புஷ்பவள்ளி நாகன் மற்றும் செல்வி காயத்திரி பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் ஆய்வுக் கட்டுரை வழங்கினர். ஆசிரியை செல்வி காயத்திரி ஆசிரியை செல்வி புஷ்பவள்ளி வாய்பாடு பலகையைப் பயன்படுத்துவதன் மூலம் வாய்பாட்டில் திறன் அடைதல் (KEBERKESANAN PENGGUNAAN PAPAN SIFIR FIX ME DALAM MENGUASAI SIFIR BAGI MURID TAHAP 1 DAN 2) எனும் தலைப்பில் அவர்கள் தங்கள் கட்டுரையைப் படைத்தனர். ஆசிரியர் இருவருக்கும் நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

SJK(T) KERUH – தமிழ்ப்பள்ளிக்குத் தாய்லாந்து ஆசிரியர் சிறப்பு வருகை

Image
மேல் பேரா மாவட்டம் , பெங்காலான் ஊலு , குரோ தமிழ்ப்பள்ளிக்கு ஆசிரியர் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் தாய்லாந்து ஆசிரியர் ஒருவர் அதிகாரப்படியாக வருகை புரிந்தார். மலேசிய நாட்டின் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமும் தாய்லாந்து நாட்டின் ஆசிரியர் சம்மேளனமும் இணைந்து இந்த ஆசிரியர் பரிமாற்றுத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. குரோ தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் தாய்லாந்து ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவ் குரோ தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.கி.செல்வராணி அவர்களின் இசைவுடன் இப்பள்ளி ஆசிரியர் செல்வி.சீத்தாலட்சுமி பாலு மேற்பார்வையில் தாய்லாந்து ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவ் மலேசியாவில் தங்கி இருந்தார். இதே போல தாய்லாந்திலிருந்து 5 ஆசிரியர்கள் மலேசியா வந்திருந்தனர். 5 orang guru dari Thailand berkunjung ke Malaysia di bawah Program Pertukaran Guru Antara NUTP dan The Theachers Council Of Thailand. Seorang guru Cik.Pornsawan Kieaw-On@Cha ditempatkan di SJK(T) Keroh, Daerah Hulu Perak. Beliau mengikuti berbagai aktiviti pendidikan bermula dari 4 hingga 18 Oktober 2019.