Posts

Showing posts with the label PERINGKAT KEBANGSAAN

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

Image
கடந்த 17.09.2022 ஆம் நாள் மாணவர் முழக்கம் 2022 காலிறுதிச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டி இயங்கலை முறையில் நடந்தது. பேரா மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ஒருவர் மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சூரியவேந்தன். மற்றொரு வெற்றியாளர் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவி ரக்‌ஷிதா. சிறப்பான படைப்பினை வழங்கியதோடு, நல்ல வாதத் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் வினாக்களுக்கும் தகுந்த பதிலை வழங்கி  இவர்கள் இருவரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

மாணவர் முழக்கம் 2022 - பேராவின் 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Image
மாணவர் முழக்கம் 2022 தேர்வுச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியாளர்கள் தங்களின் பேச்சினை 1 நிமிடம் 30 வினாடிக்குக் காணொலியாகப் பதிவுசெய்து ஏற்பாட்டளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறப்பான காணொலிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். அதன்  அடிப்படையில், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பேரா மாநிலத்தின் 18 வெற்றியாளர்களின் பட்டியலைக் கீழே காணலாம். மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பாடாற்றிய தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். காலிறுதிச் சுற்றில் பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறப்பான படைப்பினை வெளிப்படுத்த வாழ்த்துகள்.

SJK(T) LDG.STRATHMASHIE - SAMNOVA 2022 மகிழ் கற்றல் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்று சாதனை

Image
SJK(T) Ladang Strathmashie menang 1 pingat emas dan 1 pingat perak dalam Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA, 2022)  பாகான் டத்தோ மாவட்டம், ஸ்ட்ராத்மாஷி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான  மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தனியாள் நிலை : (தங்கப் பதக்கம்) புத்தாக்கம்: MAFFT (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர் :  திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன் குழு நிலை : (வெள்ளிப்  பதக்கம்) புத்தாக்கம்: 3L Story (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்கள் :  திரு. சுரேந்திரன் த/பெ நாகரத்தினம், திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன், குமாரி. திவ்யா த/பெ ராஜேந்திரன் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசிலா அவர்களின் வழிகாட்டலில் பள்ளியில்  மகிழ் கற்றல் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் தங்களின் மகிழ் கற்றல் நடவடிக்கையை...

SJK(T) LADANG KAMPAR - SAMNOVA 2022 மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்களின் சாதனை

Image
4 orang guru SJK(T) Ladang Kampar menang pingat perak & gangsa dalam Seminar Amalan PdPc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA) 2022 தென்கிந்தா மாவட்டம், கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான மகிழ் கற்றல்  புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022)  பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குழு நிலை : (வெள்ளிப் பதக்கம்) புத்தாக்கம் : Reading Wisdom Castle (நூலகப் பயன்பாட்டின் நனிச்சிறந்த அம்சம்) சாதனை ஆசிரியர்கள்: 1.திருமதி. நோர்நிஸா மைடின் 2. திருமதி. ரா.விசாலெட்சுமி தனியாள் நிலை:(வெண்கலப் பதக்கம்)  புத்தாக்கம் : Koordismart (கணிதப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 3 .திருமதி. கி.சங்கீதா புத்தாக்கம் : KAD SIMBA 4 Dalam 1 ( தேசிய மொழி பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 4. திருமதி.கோ.ஷாமினி தேவி தங்களின் சிறப்பான மகிழ் கற்றல் புத்தாக்கத்தின் மூலம் கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தும் இவ்வாசிரியர்களின் சீரிய பணிக்க...

SJK(T) PERAK SANGGETHA SABAH & SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் 2021இல் பேரா மாநிலத்திற்கு இரட்டை வெற்றி

Image
மாணவர் முழக்கம் 2021 மாபெரும் இறுதிச் சுற்றில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் இடத்தையும் இரண்டாம் பரிசையும் வாகை சூடி இரட்டை வெற்றியைக் கண்டுள்ளனர். Murid Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah, Daerah Kinta Utara menjadi Johan dan Adik Darshini Kumaran dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak menjadi Naib Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 23.10.2021 23.10.2021ஆம் நாள் நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் முதல் நிலையில் வெற்றிபெற்றார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் முதல் பரிசான RM1000.00 (ஆயிரம் வெள்ளி) தொகையும் நற்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. நான் கல்வி அமைச்சரானால் கலைப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் திறம்பட பேசியதோடு, பொதுமக்கள் மற்றும் நடுவர்களின் வினாக்களுக்கு இலாவகமாக மறுமொழி பேசி ஜோனஸ் அபிசியா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அதே வேளையில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளர் பாத்தாக் ராபிட் ...

SJK(T) THIRUVALLUVAR - தேசிய நிலை காற்பந்து குழுவுக்குப் பூவேந்திரன் தேர்வாகினார் [காணொலி இணைப்பு]

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான், கீழ்ப்பேரா மாவட்டம், பேரா SJKT THIRUVALLUVAR, TELUK INTAN,  PERAK சாதனை மாணவர் / Murid Terlibat: பூவேந்திரன் மோகன சுந்தரம் PUUVEENTHIRAN MOGHANA SUNTHARAM போட்டி / Pertandingan: காற்பந்து திறன் காட்டும் போட்டி  MSSPk e-Challenge Bola Sepak Juggling நிலை / Peringkat: தேசிய நிலை / Kebangsaan விருது / Anugerah: பேரா மாநில நிகராளி / Wakil Negeri Perak நாள் / Tarikh: 4.10.2021 ஏற்பாட்டாளர் / Penganjur: MSSPk & MSSM தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி சகுந்தலா கிருஷ்ணன்  Puan Sakunthala Krishnan பொறுப்பாசிரியர் /  Guru Terlibat: திரு. யுவகுமார் ராதா கிருஷ்ணன்/ EN.YUVAKUMAR RADHA KRISHNAN திருமதி சத்யபிரியா / PN.SATYAPRIYA KUMAR செல்வன் பூவேந்திரன் திறமையைக் காணொலியில் காணலாம்

SJK(T) LDG.DOVENBY - சுற்றுச்சூழல் அடையாளப் பள்ளி விருது [ICONIC SCHOOL]

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோல கங்சார் மாவட்டம், பேரா SJKT LDG DOVENBY, DAERAH KUALA KANGSAR, PERAK விருது / Anugerah: சுற்றுச்சூழல் தட்பநிலை அடையாளப் பள்ளி  ICONIC SCHOOL  ENVIRONMENT CLIMATE  நிலை / Peringkat: தேசிய நிலை / KEBANGSAAN நாள் / Tarikh: 10-10-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: உலகக் கல்வி அடையாள விருதளிப்பு மன்றம் MAJLIS PENGANUGERAHAN WORLD EDUCATION ICON AWARDS தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி இராஜம்பாள் வீராசாமி PUAN RAJAMBAL VEERASAMY பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat:  1. திருமதி. இலாவன்யா கிருஷ்ணமூர்த்தி / PN.LAVANYA A/P  KRISHNAMURTHY  2. திருமதி.தனேஸ்வரி சுபாராவ் / PN.THANESWARI A/P  SUPPARAO  3.  திருமதி. கலைவாணி பழனி / PN.KALAIVANI A/P PALANI

மாணவர் முழக்கம் 2021 - பேராவின் 2 மாணவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்

Image
மாணவர் முழக்கம் 2021 இறுதிச் சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியா மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 அரையிறுதிப் போட்டி  9.10.2021ஆம் நாள் நடந்து முடிந்தது. இதில், 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள் களம் இறங்கினர். போட்டியாளர்களின் படைப்புத் திறனை மதிப்பீடு செய்த நடுவர் குழுவினர் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்களைத் தெரிவு செய்தனர். கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தர்சினி குமரன் மற்றும் வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் ஆகிய 2 மாணவர்கள் மிகச் சிறப்பான படைப்பினை வழங்கி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.  இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி சாதனைச் செல்வங்களின் விவரங்களைக் கீழே காணலாம். 2 orang murid dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak dan SJK(T) Perak Sangetha Sabah, Daerah Kinta Utara layak ke Pertandingan Akhir Pidato Manavar Muzhakkam Peringkat K...

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 5 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 போட்டியில்  பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள்  அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டிக்கு மலேசியாவின் நிகராளிகளைத் தேடும் இந்தப் பயணத்தில் பேராவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இணைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். மாணவர் முழக்கம் 2021இல் தற்போது காலிறுதிச் சுற்றுகள்  4 மண்டல வாரியாக  நடைபெறுகின்றன. 14.09.2021ஆம் நாள் நடந்த பேரா மற்றும் பகாங் மண்டலத்திற்கான காலிறுதிச் சுற்றில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 6 மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பேசி அதிக புள்ளிகளைப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்ற வேளையில் 5 மாணவர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிச் சுற்றுகுத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர் விவரங்களைக் கீழே காணலாம். இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏற்கனவே நடந்து முடிந்த தகுதிச் சுற்றில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர் ...

SJK(T) TUN SAMBANTHAN, SG.SUMUN - GO-GIF 2021 அனைத்துலக பசுமை புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்றது

Image
Nama Sekolah / பள்ளியின் பெயர்:  SJK(T) TUN SAMBANTHAN, BAGAN PASIR, 36300 SUNGAI SUMUN, PERAK தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பாகான் பாசிர், 36300 சுங்கை சுமுன், பேரா. Nama Anugerah / போட்டி:  GLOBAL OLIMPIAD-GREEN INNOVATION FAIR GO-GIF 2021 GO-GIF 2021 அனைத்துலக பசுமை புத்தாக்கப் போட்டி. Pencapaian / விருது:  PINGAT EMAS /  தங்கப்பதக்கம் Peringkat / நிலை : PERINGKAT KEBANGSAAN /  அனைத்துலக நிலை Tarikh / பக்கல் : 15/4/2021-25/6/2021 Penganjur / ஏற்பாட்டாளர்:  PERTUBUHAN KONSERVASI ALAM MALAYSIA DAN ASIA PASIFIC மலேசியா மற்றும் ஆசியா பாசிஃபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் Guru Besar / தலைமையாசிரியர்:  PN.TAMIL SELVI A/P RAMASAMY திருமதி தமிழ்செல்வி  த/பெ   இராமசாமி Guru Terlibat / பொறுப்பாசிரியர்:  PN.VASUGEE  A/P  MANICKAM திருமதி வாசுகி  த/பெ  மாணிக்கம் Murid Terlibat / சாதனை மாணவர்கள்:  BAANUPRIYA A/P RAMMANI / பாணுப்பிரியா இரமணி VISNU RAJ A/L THIYAGARAJ / விஷ்னுராஜ்  தியாகராஜ்  ...

SJK(T) LDG.BATAK RABIT - வைராக்கிய வைரங்களின் சாதனைகள் - மின்னூல் தொகுப்பு

Image
பேரா, கீழ்ப் பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநிலத்தின் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகப் பெயர் பொறித்து வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான வெற்றிகளும் சாதனைகளும் இப்பள்ளிக்குப் புகழைச் சேர்த்து வருகின்றன. 2025 உருமாற்றுப் பள்ளி [SEKOLAH TRANSFORMASI 2025] தகுதியுயர்வுக்கு ஏற்ப இப்பள்ளி பல கோணங்களிலும் சிறந்த உருமாற்றங்களைக் கண்டு முன்னேறி வருகின்றது. SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak telah memenangi 5 anugerah peringkat antarabangsa, 8 anugerah peringkat kebangsaan dan 2 anugerah peringkat negeri dalam tempoh Jan - Jun 2021 தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் வேலு அவர்களின் சிறப்பான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முழு முதற்கார ணமாக விளங்கி வருகின்றது என்றால் மிகையில்லை. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பணியாற்றுவதால் மாணவர் உருவாக்கம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது என்று சொல்லலாம். இந்த 2021இல் இப்பள்ளி அனைத்துலக நிலையில் 5 வெற்றிகளையும் தேசியநிலையில் 8 மற்றும் மாநில நிலையி...

SJK(T) BERUAS - [TEKNOVASI 2021] கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்க தேசியநிலைப் போட்டியில் வெற்றி

Image
  பள்ளிப்   பெயர்  /  Nama Sekolah: பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT BERUAS , DAERAH MANJUNG, PERAK போட்டி  /  Nama Pertandingan: கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் போட்டி / TEKNOVASI 2021 நிலை  /  Peringkat: தேசிய நிலை / KEBANGSAAN அடைவு /  Pencapaian: மூன்றாம் நிலை /  TEMPAT KE-3 [TAHAP 1] நாள்  / Tarikh: 23-06-2021 ஏற்பாட்டாளர்  / Penganjur: மலேசியக் கற்றல் தொழில்நுட்பக் கழகம் & மலேசியக் கல்வி அமைச்சின், கருவள மற்றும் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு PERSATUAN TEKNOLOGI PENDIDIKAN MALAYSIA [META] & BHG SUMBER DAN TEKNOLOGI PENDIDIKAN-KPM தலைமையாசிரியர்  / Guru Besar: திருமதி இரஹ்மாதுனிசிஷா  பேகம் அப்துல் ரஹிமான் PN.RAHMATHUNISHA BEAHAM BT ABDUL RAHIMAN பொறுப்பாசிரியர்  /  Guru Terlibat: செல்வி அனஷ்தாஷியா வால்கர் CIK.ANNATAZCIA WALKER சாதனை   மாணவர்கள்  / Murid Terlibat: 1.தீபாசினி மும்மூர்த்தி / Deepashine A/P Mumurdi 2.திவாயாசினி மும்மூர்த்தி / Divyashini A/P Mumurdi  3...