KARNIVAL BAHASA MELAYU SJK(C) & SJK(T) - தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மகத்தான சாதனை
பேரா மாநில நிலையில் நடைபெற்று முடிந்த தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டிகளில் அனைத்துப் பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தனியாள் நாடகம், பேச்சுப் போட்டி, மலாய் எழுத்துப் போட்டி என மூன்று வகையான போட்டிகள் நடைபெற்றன. இம்மூன்றிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். தனியாள் நாடகப் போட்டியில் மலாய்மொழியில் கதைக்கூறி தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தெய்வான்ஷா திருஞானசுந்தர் முதல் பரிசை வென்றார். மலாய்மொழிப் பேச்சுப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி சாருமதி திருச்செல்வன் முதல் இடத்தை வெற்றி கண்டார். மலாய் எழுத்துப் போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி மாணவி ரோஷிமி பன்னீர்செல்வம் முதலாவது நிலையில் வெற்றி பெற்றார். மூன்று போட்டிகளிலும் தமிழ்ப்பள்ளி மானவர்களே வெற்றி கண்டிருப்பது இந்தத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டி வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனப்பள்ளி மாணவர்களின் ஆதிக்கமே