Posts

Showing posts with the label KOKURIKULUM

SJK(T) LDG.AYER TAWAR - MSSM தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்கு தர்வின் முன்னேறினார்

Image
மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தர்வின் சிவசண்முகம் தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்குப் பேரா மாநிலத்தின் நிகராளியாகத் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். மாவட்ட நிலையில் தொடங்கி பின்னர் மாநில நிலையில் இந்தச் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. மலாய், சீன, தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தர்வின் சிவசண்முகம் கலந்துகொண்டார். மாவட்ட நிலையில் மிகச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்து பிறகு 27 - 29.08.2021இல் நடந்த மாநில நிலையிலான போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்குத் தகுதிபெறும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கலந்துகொள்ள 3 மலாய் பள்ளி மாணவர்களுடன் தர்வின் சிவசண்முகம் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த வெற்றியானது ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்தச் சாதனை மாணவரை உருவாக்கிய ஆயர...

SJK(T) LDG.AYER TAWAR - மாநில நிலை மின்-சதுரங்கப் போட்டியில் முதல் நிலை வெற்றி

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah : ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT LADANG AYER TAWAR, DAERAH MANJUNG, PERAK போட்டி / Pertandingan : மின்-சதுரங்கப் போட்டி 2021 PERTANDINGAN CATUR  E-CHALLENGE MSS PERAK FASA 2 நிலை / Peringkat: மாநில நிலை / PERINGKAT NEGERI அடைவு / Pencapaian : முதல் நிலை / JOHAN நாள் / Tarikh : 27,28,29 OGOS 2021 ஏற்பாடு / Penganjur : பேரா மாநிலக் கல்வித் திணைக்களம்  JABATAN PENDIDIKAN NEGERI PERAK தலைமையாசிரியர் / Nama Guru Besar : திரு.கிருஷ்ணன் நடராஜா ENCIK KRISHNAN A/L NADARAJAH பொறுப்பாசிரியர் / Nama Guru Terlibat : திருமதி நளினி இராமன் PUAN NALINI A/P RAMAN சாதனை மாணவர் / Nama Murid Terlibat : தர்வின் சிவ சண்முகம் THARVIN A/L SHIVA SHANMUGAM

SJK(T) LDG.BATAK RABIT - வைராக்கிய வைரங்களின் சாதனைகள் - மின்னூல் தொகுப்பு

Image
பேரா, கீழ்ப் பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநிலத்தின் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகப் பெயர் பொறித்து வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான வெற்றிகளும் சாதனைகளும் இப்பள்ளிக்குப் புகழைச் சேர்த்து வருகின்றன. 2025 உருமாற்றுப் பள்ளி [SEKOLAH TRANSFORMASI 2025] தகுதியுயர்வுக்கு ஏற்ப இப்பள்ளி பல கோணங்களிலும் சிறந்த உருமாற்றங்களைக் கண்டு முன்னேறி வருகின்றது. SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak telah memenangi 5 anugerah peringkat antarabangsa, 8 anugerah peringkat kebangsaan dan 2 anugerah peringkat negeri dalam tempoh Jan - Jun 2021 தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் வேலு அவர்களின் சிறப்பான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முழு முதற்கார ணமாக விளங்கி வருகின்றது என்றால் மிகையில்லை. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பணியாற்றுவதால் மாணவர் உருவாக்கம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது என்று சொல்லலாம். இந்த 2021இல் இப்பள்ளி அனைத்துலக நிலையில் 5 வெற்றிகளையும் தேசியநிலையில் 8 மற்றும் மாநில நிலையி...

SJK(T) ST.THERESA'S CONVENT - DIIID JOHOR 2020 புத்தாக்கப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

Image
கடந்த 27.08.2020ஆம் நாள் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 3வது அனைத்துலக அளவிலான இலக்கவியல் புத்தாக்க வடிவமைப்பு போட்டியில் (3rd Digitalized International Invention, Innovation and Design UITM Johor 2020) தைப்பிங், செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரு புத்தாக்கப் படைப்புகளை படைத்து,  தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று வெற்றி வாகை சூடி சாதனைப் படைத்துள்ளனர்.  Muri-Murid SJK(T) St.Theresas's, Taiping, Daerah LMS telah menang Pingat Emas & Pingat Gangsa dalam Pertandingan 3rd Digitalized International Invention, Innovation and Design UITM Johor 2020 Peringkat Antarabangsa Pada 27.08.2020 முதல் குழுவினர் வாகனம் ஓட்டும் தருணத்தில் ஏற்படும் சோர்வு நிலையைப் போக்க மூலிகை வழியில் அமைந்த நிவாரண யுத்தியை மாணவர்கள் பிரவின் லோகநாதன், பூவன் சுகுமாறன், கவினா ஸ்ரீ சங்கர் மற்றும் அவினாஷ் மனோகரன் ஆகியோர் படைத்தனர். இவர்களின் படைப்பு சிறந்த படைப்பாக அமைந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர். இரண்டவது குழுவில் மாணவர்கள் தமிழ்ச்செல்வன் கனகநாதன், தான்யலெட்சுமி...

SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் போட்டியில் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசு

Image
மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டியில் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசை வென்று சாதனை செய்துள்ளார். Adik Navasri Guganath dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak, Perak menang sebagai Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 29.08.2020. மாணவர் முழக்கம் 2020 தேசியநிலைப் போட்டி 29.08.2020ஆம் நாள் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது. மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ மு.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர் முழக்கம் முதல் சுற்றில் நாடு தழுவிய நிலையில் 2300 மாணவர்கள் கலந்துகொண்டனர், இரண்டாம் சுற்றில் 200 மாணவர்களும் அவர்களுள் 20 போட்டியாளர்கள் அரையிறுதிச் சுற்றிலும் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிக்கு 4 போட்டியாளர்கள் தேர்வாகினர். கோறனி நச்சில் பெருந்தொற்று காரணமாக இவ்வாண்டின் மாணவர் முழக்கம் அரையிறுதிச் சுற்று வரையில் இயங்கலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான வாதத்தை வழங...

SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றது

Image
மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டிக்குப் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் ர.நவஶ்ரீகுணநாத் தகுதிப் பெற்றுள்ளார். அறையிறுதிச் சுற்றில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட வேளையில் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகினர். அவர்களுள்  ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிபெற்று பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத்திற்கே பெருமை சேர்ந்த்துள்ளார். மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. அதில் 20 மாணவர்கள் அறையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். அவர்களுள்  4 போட்டியாளர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் . செல்வன்  ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுகள்; பயிற்றுவித்த  பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.  

SJK(T) LDG.JENDERATA BHG.3 - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

Image
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020இல் நடைபெற்றது. இப்புத்தாக்கப் போட்டியில் பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா பிரிவு 2 தோட்டத் தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆசிரியர் அர்வினாவின் முயற்சியாலும் பயிற்சியாலும் இப்பள்ளியின் 4 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர். SJK(T) Ldg.Jenderata Bhg.3 menang Pingat Gangsa dalam  International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya மக்கள் ஓசை - 30.07.2020

SJK(T) LDG.NEW COCONUT : JAN - MAC காலப் பள்ளி நடவடிக்கைகள்

Image
பேரா,   பாகான் டத்தோ மாவட்டம், நியூ கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த  நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. நியூ கொக்னட்  தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப்  பள்ளி நடவடிக்கைகள் [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]

SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

Image
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில்   அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020 நடைபெற்றது.  இப்புத்தாக்கப் போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி  வெண்கலப் பதக்கத்தை வென்றது . SJK(T) Ldg.Buluh Akar menang Pingat Gangsa dalam International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya 2 020 ஆ ம்  ஆண்டில்   இது     இரண்டாவது   அனைத்துலக  வெற்றியாகும்.  இவ்வருடம் (2020) பிப்ரவரி மாதம் 2 – 6 வரை   போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்ற புத்தப்போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தை வென்று வந்தது . மாணவி சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா   நந்தகுமார் ஆகிய இருவரும் இப்போட்டியில் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் திருமதி அனுராதா மற்றும் ஆசிரியை திருமதி நிர்மலா தேவி   செய்தனர் . நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இயங்கலை முறையில் இப்போட்டி நடைபெற்றது .

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI – மாநில நிலை ‘ஸ்குவாஷ்’ போட்டியில் இரட்டை வெற்றி

Image
பேரா மாநில நிலை ‘ ஸ்குவாஷ் ’ [ SKUASY] போட்டியில் பேரா , கோலா கங்சார் மாவட்டம் , மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் இருவர் இரட்டை வெற்றியை அடைந்து பெருமை சேர்ந்த்துள்ளனர். இந்தப் போட்டியானது கடந்த 18.02.2020 செவ்வாய்க்கிழமை, சுங்காய், பெல்டாஜெயா மாரா இளம் அறிவியல் கல்லூரியில் [MRSM FELDAJAYA TROLAK, SUNGKAI] நடைபெற்றது. Adik Harithra menang Johan dan Adik Kirthana menang Naib Johan dalam Pertandingan Skuasy Peringkat Negeri Perak 2020. Kedua-dua murid tersebut mewakili SJK(T) Mahathma Gandhi Kalasalai, Daerah Kuala Kangsar, Perak.   இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரித்ரா முதல்நிலை பரிசையும் மாணவி கீர்த்தனா இரண்டாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர். ஒரே பள்ளியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இறுதியாட்டத்தில் களம்கண்டு இந்த இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகவும் அரிதாக ஈடுபடும் இவ்விளையாட்டில் இவ்விரு மாணவிகளும் மாநில நிலையில் இப்படியொரு சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்றால் மிகையில்லை.

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

Image
தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டங்களும் [DSKP] அண்டுத் திட்டங்களும் [RPT] இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த அரும்பணியைச் செய்துள்ளார். ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான கலைத்திட்டங்கள் தமிழ்மொழியில் இங்கு கிடைக்கும். [படத்தைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்] [sila klik gambar diatas untuk DOWNLOAD] தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மை கருதி ஐயா அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் பல்வேறு ஆவணங்கள், கலைத்திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள், வினாத் தாள்கள், பயிற்றிகள் ஆகியவற்றைத் தமது வலைப்பதிவில் தொகுத்து வைத்துள்ளார்.  தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திரு.முனியாண்டி ராஜ் - En.Muniandy Raj, Guru Cemerlang Bahasa Tamil SJK(T) Telok Panglima Garang, Selangor. தமிழ்ப்பள்ளி நலன்கருதி தமிழ் உள்ளத்தோடும் தொண்டு மனப்பான்மையோடும் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த நற்பணியைப் போற்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்.  அவருடைய வலை...

BAGAN DATUK, HILIR PERAK மாவட்ட நிலை விளையாட்டு விழா

Image
கடந்த 17.11.2019ஆம் நாள் ஞாயிறு காலை மணி 8:00 தொடங்கி பாகான் டத்தோ மாவட்டம் , ஊத்தான் மெலிந்தாங் , பாரதி தமிழ்ப்பள்ளித் திடலில் மாவட்ட நிலை விளையாட்டு விழா நடைபெற்றது. இது 10ஆவது ஆண்டாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் ஐவர் காற்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய 2 போட்டிகள் நடந்தன. ஐவர் காற்பந்து போட்டியில் 16 குழுக்களும் கைப்பந்து போட்டியில் 9 குழுக்களும் கலந்துகொண்டன.   ஐவர் காற்பந்து போட்டி (ஆண்கள்) வெற்றியாளர்கள்:- முதல் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 2ஆம் நிலை :- ஊலு பெர்னாம் தோட்டம் 2 தமிழ்ப்பள்ளி 3ஆம் நிலை :- நோவா ஸ்கோசியா தோட்டம் 1 தமிழ்ப்பள்ளி 4 ஆம் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி கைப்பந்து போட்டி (பெண்கள்) வெற்றியாளர்கள்:- முதல் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி 2ஆம் நிலை :- காமாட்சி தோட்டம் தமிழ்ப்பள்ளி 3ஆம் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 4 ஆம் நிலை :- செலாபா தமிழ்ப்பள்ளி பாகான் டத்தோ , கீழ்ப்பேரா ஆகிய 2 மாவ...