Posts

Showing posts with the label MESYUARAT

முகமை அமைப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்குப் பிரியாவிடை

Image
மலேசியக் கல்வி அமைச்சில், தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்ற சு.பாஸ்கரன் அவர்களுக்குப் பேரா மாநில அளவில் பிரியாவிடை நல்கப்பட்டது. கடந்த 24.05.2018 வியாழக்கிழமை, ஈப்போ எக்செல்சியர் தங்கும் விடுதியில் அவருக்குப் பாராட்டு நிகழ்ச்சி சிறப்புடன் நிகழ்ந்தது. கடந்த 40 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளராகவும் பின்னர் ஓய்வு பெறும் முன்னர் மலேசியக் கல்வி அமைச்சில் தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி தம்முடைய அறுபதாவது வயதில் அவர் பணி ஓய்வு பெற்றார். நல்ல தமிழுணர்வும் தமிழ் உள்ளமும் கொண்ட சு.பாஸ்கரன் கல்வி அமைச்சில் மட்டும் 12 ஆண்டுகள் பணியற்றியுள்ளார். தம்முடைய பணிக்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் தனிக்கவனமும் அக்கறையும் காட்டியவர்.  கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள்,  ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது இயக்கங்கள், தலைவர்கள் என எல்லாத் தரப்பினரிடமும் சுமுகமான உறவைப் பாராட்டி அன்புடன் பழகியவர் இவர். மேலும், உயர்ந்த ...

பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகப் பொதுக்கூட்டம்

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் 26ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 24.05.2018 வியாழக்கிழமையன்று ஈப்போ எக்செல்சியல் விடுதியில் நிகழ்ந்தது. *பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ மாட் வாசிம் பின் இட்ரிஸ் இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறப்புரை ஆற்றினார். *கழகத்தின் தலைவர் ந.பத்மநாதன் தலைமையுரை ஆற்றினார். *ஆலோசகரும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளருமான சுப.சற்குணன் ஆலோசர்கள் உரை வழங்கியதோடு தேர்தலை வழிநடத்தினார். *செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி, பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி, பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின் சாதனைகள் காணொலிக் காட்சியாகப் படைக்கப்பட்டது. *2018ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் அடைந்த வெற்றிகளும் சாதனைக் கதைகளும் திறமுனைக் காட்சியாகப் படைக்கப்பட்டது. *இந்த ஆண்டுக் கூட்டத்தில் பேரா மநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் புதிய தலைவராக பத்மநாதனும் துணைத்தலைவராக மு.அர்ச்சுணனும் தெரிவு செய்யப்பட்டனர். பொருளாளராக இரா.கணேசன் தேர்ந்தெடுக்கப்படார். ...