Posts

Showing posts with the label PENANDA ARASAN

SJK(T) SAINT MARY'S - 40 கல்வியாளர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டனர்

Image
 காணொலி இணைப்பு  ⏭ கிரியான் மாவட்டம் , பாரிட் புந்தார் , செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் அண்மையில் கருப்பொருள் அடிப்படையில் வகுப்பறை உருமாற்றத் திட்டம் நிகழ்ந்தது. பேரா மாநிலக் கல்வி இயக்குநர் முனைவர் முகமது சுகைமி பின் முகமது அலி அவர்கள் இப்பள்ளியில் 12 உருமாற்ற வகுப்பறைகளையும் அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Lawatan Penanda Arasan ke SJK(T) Saint Mary's, Daerah Kerian, Perak. 40 orang Pensyarah IAB, Pengetua dan Guru Besar yang sedang berkursus TS25 Kohort 5 di IAB Jitra, Kedah membuat lawatan ini. Tuan Ketua PPD Kerian dan Pegawai-pegawai PPD turut mengiringi rombongan ini.   04.03.2020 புதன்கிழமை செயிண்மேரியின் உருமாற்ற வகுப்பறைகளை நேரில் காண்பதற்கு 40 பேர் அடங்கிய கல்வியாளர் குழுவினர் வந்தனர். கிரியான் மாவட்டத் தலைமைக் கல்வி அதிகாரி ஹாஜா செப்பியா இந்த அடைவுக் குறியீட்டுப் பயணத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கெடா , ஜித்ரா அமினுடின் பாக்கி கல்விக் கழகத்தைச் [ INSTITUT AMINUDIN BAKI, JITRA, KED...

SJK(T) BANDAR SRI SENDAYAN - எதிர்காலத் தமிழ்ப்பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம்

Image
நெகிரி செம்பிலான், பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளிக்குப் பேரா, பத்தாங் பாடாங் மாவட்ட ஆசிரியர் குழுவினர் அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டனர். பத்தாங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. 03.10.2019 வியாழக்கிழமை இந்த ஒரு நாள் பயணம் நடைபெற்றது. பள்ளியின் தோற்றுநர் டத்தோ யோகேந்திரன் நாராயணசாமி, தலைமையாசிரியர் திருமதி சாந்தி அச்சுதன் இருவருடன் பயணக் குழுவினர் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள 19 தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் துணைத் தலைமை ஆசிரியர்களுமாக மொத்தம் 38 பேர் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்திலிருந்து அமைப்பாளர் திரு,சுப.சற்குணன் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் சீனப்பள்ளி கண்காணிப்பாளர் திருமதி.சாவ் வேய் திங் ஆகிய இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மலேசியாவில் மிக நவினமான பள்ளியாகவும் 'எதிர்காலப் பள்ளி' (FUTURE SCHOOL) என்ற புகழைப் பெற்ற பள்ளியாகவும் திகழும் பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியின...

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

Image
27.08.2019 –ஆம் நாள் பேரா, பத்தாங்  பாடாங் மாவ ட் டம், தேசிய வகை கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளிக்கு இந்திய கல்வியாளர் திட்டத்தின் கீழ் அறுவர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து அதிகாரப்படியான வருகை மேற்கொண்டனர். இந்தியா மஹாராஷ்டிரா, பெங்களூரு  மற்றும் குஜராத் மாநிலங்களைப் பிரதிநிதித்து இக்கல்வியாளர்கள் வந்திருந்தனர். வருகை புரிந்த பேராசிரியர், பள்ளியின் முதல்வர்,  அனைத்துலக கணித ஆசிரியர், இந்திய அரசாங்க நிகராளி, பொருளக மற்றும் காப்புறுதிச் சேவையாளர்கள்  அடங்கிய இந்தக் குழுவினரைப்   பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன், துணைத்தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.  மலேசியாவில் தொடக்கப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிந்து கொள்ள வந்தவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள் விளக்கப்பட்டன. மேலும் அவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறைகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்களைப் பாலர் பள்ளி ஆசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்களும் அளித்தனர். அவர்கள் மாணவர...

SJK(TAMIL) TAPAH - உருமாற்றுப் பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம்

Image
கடந்த 09.06.2018 சனிக்கிழமையன்று சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் பேரா, தாப்பா உருமாற்றுத் தமிழ்ப்பள்ளிக்கு (Sekolah Transformasi - TS25 Kohort 2)  அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை புரிந்தனர். சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி, பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி, நைகல் கார்டன் தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் உள்பட மொத்தம் 40 ஆசிரியர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். மாலை மணி 2:30 தொடங்கி 6:00 வரையில் அவர்கள் தாப்பா தமிழ்ப்பள்ளியில் நேரத்தைச் செலவிட்டு நல்ல பயனைப் பெற்றனர். தாப்பா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஐயை வனஜா, துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வருகை புரிந்த சிலாங்கூர்  மாநில ஆசிரியர்களை மகிழ்வோடு வரவேற்று வாழை இலை போட்டு மதிய உணவு விருந்தோம்பல் செய்தார்கள். தப்பா தமிழ்ப்பள்ளியின் சிறப்புகள் பற்றியும் பள்ளியின் சிறப்பான அடைவுகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உருமாற்றுப் பற்றி, 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை, கற்றல் எளிமையாக்கல் ஆகியவை குறித்து பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்...

SJK(TAMIL)ST.PHILOMENA CONVENT - சிலாங்கூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

Image
கடந்த 09.06.2018 சனிக்கிழமையன்று சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் பேரா, ஈப்போவிலுள்ள புனித பிலோமினா கான்வணட் தமிழ்ப்பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்தனர். சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி, பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி, நைகல் கார்டன் தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட 40 ஆசிரியர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகை புரிந்தனர். காலை மணீ 10:00 தொடங்கி பிற்பகல் மணி 1:00 வரையில் இந்த நிகழ்ச்சி நன்றே நிகழ்ந்தது. புனித பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஐயை சங்கரி, துணைத் தலைமையாசிரியர்கள், பெ.ஆ.சங்கத் தலைவர் ஜெயசீலன், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மருத்துவர் சுப்பிரமணியம் ஆகியோர் வருகை புரிந்த சிலாங்கூர்  மாநில ஆசிரியர்களை இன்முகத்தோடு வரவேற்றனர். புனித பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளியின் சிறப்புகள் பற்றியும் பள்ளியின் சிறப்பான அடைவுகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வரையறுத்த கற்றல் நேரம் (Melindungi Masa Instrusional - MMI) குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கவுரை...

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

Image
பேரா, பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த உருமாற்றுப் பள்ளியாக உருவாகியுள்ளது. அப்பள்ளிக்குக் கடந்த 08.06.2018 வெள்ளிக்கிழமை ஜொகூர் மாநிலத்தின் ஆசிரியர்கள் அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்தனர்.  ஜொகூர், பத்து பகாட் ஸ்ரீ பெலங்கி தமிழ்ப்பள்ளியைச் (SJKT Seri Pelangi, Batu Pahat, Johor) சேர்ந்த 12 ஆசிரியர்கள் இப்பயணத்தில் பங்கேற்றனர். காலை மணி 8:00 தொடங்கி மாலை மணி 2:30 வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது. உருமாற்றுப் பள்ளி தொடர்பான பல்வேறு தகலவ்களும், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக் கதைகளும் இந்தப் பயிற்சியில் பரிமாறிக்கொள்ளப்பட்டன. துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையாவும் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் இந்தப் பயிற்சியைச் சிறப்பாக வழிநட்த்தினார்கள்.