Posts

Showing posts from September, 2018

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு 2018 - நல்வாழ்த்தும் நனிநன்றியும்

Image
20.09.2018 தொடங்கி 27.09.2018 வரை ஆறாம் ஆண்டு மாணவருக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு நடைபெறவுள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த நமது மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வுக்காக அமரவுள்ளனர். நமது மாணவர்கள் அனைவரும் நனிச்சிறந்த முறையில் இந்தத் தேர்வினை எழுதுவதற்கும் எதிர் கொள்வதற்கும் நமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம். கடந்த 6 ஆண்டுகளாக இந்த மாணவர்கள் நமது தமிழ்ப்பள்ளிகளில் நன்முறையில் கல்வி பயின்று வந்தவர்கள். குறிப்பாக , இவ்வாண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வினைக் குறியாகக் கொண்டு கண்ணும் கருத்துமாகப் பாடங்களைப் படித்தவர்கள் ; பயிற்சிகள் செய்தவர்கள் ; அயராத முயற்சியில் இடையறாமல் உழைத்தவர்கள். இந்த மாணவர்களின் கடுமையான உழைப்புக்கும் முயற்சிக்கும் நல்லதொரு பலன் கிடைக்க வேண்டுவோம். இளமை வயதின் மனமகிழ்வுகள் அனைத்தையும் கடந்த 9 மாதங்களாகத் தியாகம் செய்திருக்கும் நமது மாணவர்களின் ஈகத்திற்கு எல்லாம் வல்ல இறைமை இனியதொரு வெற்றியை நல்கிட இறைஞ்சுவோம். நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் சிறப்புத் தேர்ச்சி பெறவும் சிறந்த அடைவை பெறவும் மனதார அவர்களை வாழ்த்துவோம் ; அன்ப

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - தங்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Image
அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி 2018 இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில், செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பேராக் மாநிலம், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முகமது பைசுல், விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக நிலையில்தங்கப் பதக்கம் வென்ற சாதனை மாணவர்கள் 14.9.2018ஆம் நாள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தனர்.  மாணவர்கள் முகமது பைசுல், விலோசினி மற்றும் அவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்வி கண்மணி திருமலை, செல்வி சங்கீதா மாதவன் ஆகியோர் அடங்கிய இந்தச் சாதனைக் குழுவினர் நேராக மனிதவள அமைச்சர் மாண்புமிகு திரு.குலசேகரன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். மாண்புமிகு அமைச்சர் இவர்களைத் தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்து உற்சாக வரவேற்பு வழங்கினார்.  தங்கப் பதக்கம் பெற்று மலேசியா திரும்பிய குழுவினருக்கு மாண்புமிகு குலசேகரன் பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்ட

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - அனைத்துல அறிவியல் போட்டியில் தங்கப் பதக்கம்

Image
விசாகப்பட்டினம் – இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள  விசாகப்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் பேராக், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர். ஆசிரியர் சங்கீதா, மாணவன் பைசுல், மாணவி விலோசினி, ஆசிரியர் கண்மணி முகமது பைசுல் பின் முகமது பர்து, விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மறுசுழற்சி தொடர்பாக புதிய ஆய்வினை இம்மாணவர்கள் படைத்தார்கள். இந்த மாணவர்களின் ஆய்வு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது. மகாத்மா காந்தி கலாசாலை வரலாற்றில் இதுவொரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியாவிலுள்ள பல தமிழ்ப் பள்ளிகள் இதுபோன்று தொடர்ந்து அனைத்துலக அளவில் வெற்றிகளைக் குவித்து வருவதும் தமிழ்ப் பள்ளிகளின் தோற்றத்தை உயர்த்தியுள்ளது. இந்த அனைத்துலக வெற்றியைப் பற்றி கூறுகையில், “மாணவர்களி

விழி - மடல் 9 : ஆசிரியராக வாழப் பழகிக் கொண்டால்..

Image

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - 2 மாணவர்கள் அறிவியல் போட்டிக்காக இந்தியா பயணம்

Image
அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி 2018 இந்தியா , ஆந்திராவில் உள்ள விசாகப் பட்டிணத்தில் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பேரா மாநிலம் , சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முகமது பைசுல் , விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் கலந்துகொள்ளும் இவ்விரு மாணவர்களையும் வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடந்தது. மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் இந்தப் வழியனுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் , இரண்டு மாணவர்களின் சாதனையைப் பாராட்டிப் பேசியதுடன் மாணவர்களின் பயணத்திற்கான செலவுத் தொகையைத் தாம் ஏற்றுக்கொள்வதாக பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நிலையில் சாதனை படைக்கும் தகுதிக்கு உயர

SJK(TAMIL) KHIR JOHARI - தேசிய நாள் கோலம் உருவாக்கிச் சாதனை

Image
பேரா, தாப்பா ரோட், கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளியில் 61ஆவது தேசிய நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் உருவாக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து 35 X 20 சதுர அடி கொண்ட இந்த மாபெரும் கோலத்தை அமைத்துச் சாதனை செய்துள்ளனர். இந்தக் கோலத்தை அமைப்பதற்கு 300 கிலோ கிராம் அரிசி பயன்படுத்தப்பட்டது. கோலம் உருவாக்கம் பணி காலை மணி 8:00 தொடங்கி மூன்று மணி நேரத்திற்குப் பிறகு காலை மணி 11:00க்கு நிறைவடைந்தது. மாணவர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த மாபெரும் கோலம் உருவாக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகத் திகழும் கோலத்தை அமைத்ததன் வழி, கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி வரலாற்றுச் சாதனை ஒன்றனை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. காணொலி இணைப்பு