GOOGLE CLASSROOM - மலேசிய ஆசிரியர்கள் உலகத்தில் முதல் இடம் பிடித்தனர்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்குக் கூகில் வகுப்பறையைப் பயன்படுத்தும் நாடுகளில் மலேசியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கூகில் வகுப்பறை - உலக நாடுகளின் நிலவரம் [18.04.2020@2:30pm] |
உலக நாடுகள் முடங்கிக் கிடக்கும் காலக்கட்டத்தில், மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்குக் கூகில் வகுப்பறை அதிகமாகப் பயன்படுகிறது.
கூகில் வகுப்பறையை அதிகமாகத் தேடிப் பயன்படுத்தும் நாடுகளில் மலேசியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பெருமை மலேசிய ஆசிரியர்களையே சாரும் என்றால் மிகையில்லை.
இல்லிருப்புக் கற்றலை மலேசிய ஆசிரியர்கள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள்; மின்னியல் கற்றலுக்கு மலேசிய ஆசிரியர்கள் கூகில் வகுப்பறையை நிறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
கூகில் வகுப்பறை - மாநிலங்களின் நிலவரம் [18.04.2020@2:30pm] |
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்; வீட்டில் ஓய்வு எடுக்கிறார்கள்; வேலை எதுவும் செய்யாமல் வெறுமனே இருக்கிறார்கள்; தண்ட ஊதியம் வாங்குகிறார்கள் என்றெல்லாம் குறை பேசியவர்களுக்குக் கூகில் நிலவரம் [GOOGLE TRENDS] தக்க பதில் கூறிவிட்டது.
“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”
என்பதுபோல எந்த அவதூறுக்கும் கலங்காமல், புறப் பேச்சுக்கும் செவிசாய்க்காமல் தங்களின் கல்விப் பணிகளைச் செய்யனே செய்யும் மலேசிய ஆசிரியர்களை மனதாரப் பாராட்டுவோம்.
கூகில் நிறுவனம் தனது அதிகாரப்படியான [GOOGLE TRENDS] பக்கத்தில் வெளியிடும் தகவலைக் காண இங்கே சொடுக்கவும்.
"நன்றி ஆசிரியர்களே.."
Comments
Post a Comment