Posts

Showing posts from December, 2020

SJK(T) MENGLEMBU - பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் 3 விருதுகள் வென்று ஆசிரியர்கள் சாதனை

Image
பேரா, வட கிந்தா மாவட்டம், மகிழம்பூ தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் நடைப்பெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் [ Malaysia GPM Sustainability Awards - School & STEM Curriculum 2020]   மூன்று விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. மகிழம்பூ தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழுவினர்  இப்போட்டியில் பங்கெடுத்து தங்களின் சிறப்பான படைப்புகளை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர். Kumpulan Guru SJK(T) Menglembu, Daerah Kinta Utara, Perak menang 3 Award dalam Pertandingan Malaysia GPM Sustainability Awards - School & STEM Curriculum 2020 peringkat kebangsaan. சஸ்னெட் [SustNET] எனப்படும் தனியார் நிறுவனம் நடத்திய இப்போட்டியில் பேரா மாநில அளவில் 25 பள்ளிக்கூடங்கள் பங்கெடுத்தன. அதில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி,  மூன்று பிரிவுகளில் [ Innovator Eco Brick, 5R Herbal Garden Without Waste மற்றும் Solar Energy Light (SEL)]  வெற்றிப் பெற்று விருதுகளை வென்றுள்ளது.    கடந்த 30.11.2020 நடைபெற்ற இப்போட்டிக்கான மதிப்பபீடு கூகிள் தொடர்பு வழித்தடத்தில்  இயங்கலை வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.  இப்பள்ளியின் த

SJK(T) LDG.SUNGAI KRUIT - ஆஸ்மோ ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் சாதனை

Image
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஐந்து மாணவர்கள் ஆஸ்மோ ஒலிம்பியாட் (ASMO OLYMPIAD STATE LEVEL) மாநில நிலை கணிதப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்வழி  தேசிய நிலை போட்டிக்குத்  தேர்வு பெற்று சாதனையும் புரிந்துள்ளனர். 5 orang murid SJK(T) Ldg.Sg.Kruit, Daerah Batang Padang, Perak mencatatkan pencapaian 2 Pingat Gangsa & 3 Sijil Merit dalam Pertandingan Asmo Olympiad Peringkat Negeri 2020 dan melayakan diri ke Pertandingan Peringkat Kebangsaan. பேரா மாநில அளவில் இந்தப் பள்ளியிலிருந்து கலந்து கொண்ட ஏழு மாணவர்களில்  ஐந்து மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்குத்  தேர்வு பெற்று சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இருவர் வெண்கலப் பதக்கமும் (Bronze Award) மூவர் நன்மதிப்பெண் சான்றிதழும் (Merit) பெற்றுள்ளனர். இந்த மகத்தான சாதனையைப் படைத்த மாணவர்கள் செல்வி யுவஸ்ரீ ஆண்டு 2 (வெண்கலப் பதக்கம்), செல்வி காவியா ஆண்டு 2 (வெண்கலப் பதக்கம்), செல்வி லோகராணி ஆண்டு 5 (நன்மதிப்பெண் சான்றிதழ்), செல்வன் ஸோமேஸ

SJK(T) LDG.PERAK RIVER VALLEY - எந்திரவியல் தேசிய நிலைப் போட்டியில் முதல்பரிசு

Image
பேரா, கோல கங்சார் மாவட்டம், பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  தேசிய நிலை எந்திரவியல் இயங்கலைப் போட்டியில் [Online National Robotic Competition (ONRC)] போட்டியில்  கலந்துகொண்டு பேரா மாநில அளவில் முதல் நிலை வெற்றி பெற்றுள்ளனர்.  3 orang murid SJK(T) Ldg.Perak River Valley, Daerah Kuala Kangsar, Perak menang sebagai Johan dalam Online National Robotic Competition (ONRC). 2019ஆம் ஆண்டில் இதே போட்டியில் 5-ஆவது இடத்தைப் பிடித்த இப்பள்ளி இந்த 2020இல் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப்பள்ளியானது, கடந்த இரு ஆண்டுகளில் இப்போட்டியில் கலந்து கொண்ட பேரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே தமிழ்ப்பள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாவியா ஶ்ரீ த/பெ ரிச்சட் ஜேசன் (ஆண்டு 3), ஶ்ரீ தர்சினி த/பெ குணசேகரன் (ஆண்டு 2) மற்றும் கவிஷன் த/பெ இராமன் ஆகிய மூன்று மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய வீ.மோகன்குமார் மற்றும் ஆசிரியர்களுக்கும் தமது வாழ்த்துகளைப் பள்ளியில் தலைமையாசிரியர் திரு.ஆந்திரா காந்தி தெரிவித்