Posts

Showing posts from June, 2018

SJK(TAMIL) KG.TUN SAMBANTHAN - அருமையான பாடம் சொல்லும் அழகான ஓவியங்கள்

Image
பேரா, ஆயர் தாவார் கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் சுவரோவியங்கள் மிகவும் அழகாக வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவரோவியமும் ஒவ்வொரு கருத்தை மிக அருமையாகச் சொல்லுவதாய் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாது தமிழ்ச் சான்றோர்களையும் மாமனிதர்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவும் திகழ்கின்றது. இதற்கான முயற்சியை மேற்கொண்ட பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பரிமளா வடிவேலு, பள்ளியின் ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கம் மற்றும் ஓவியங்களை அன்பளிப்புச் செய்த நன்கொடையாளர்களுக்கும் பாராட்டுகள்.

SJK(TAMIL) PANGKOR - விழாக் கோலம் கண்ட விளையாட்டுப் போட்டி

Image
பேரா மாநிலத்தில் நாற்புறமும் கடல்சூழ்ந்த பங்கோர் தீவில் உள்ள ஒரே தமிழ்ப்பள்ளியில் கடந்த 07.06.2018 வியாழனன்று விளையாட்டுப் போட்டி விழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் குமாரி.தனலட்சுமி இரோசன் தலைமையில் , மாலை மணி 2:30க்குத் தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டி விழாவில் பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் மதுரைமுத்து கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் முனியாண்டி , பெ.ஆ.சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள் , பங்கோர் பத்திரகாளியம்மன் ஆலயப் பொறுப்பாளர்கள் , முன்னாள் தலைமையாசிரியர்கள் எனப் பலரும் இவ்வாண்டின் விளையாட்டுப் போட்டி விழாவில் வந்து கலந்து சிறப்பித்தனர். மஞ்சல் , நீலம் , சிவப்பு என மூன்று இல்லங்கள் வாரியாகப் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பங்கோர் வாழ் பெற்றோர்களும் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் திரளாக வருகை தந்ததால் விளையாட்டுப் போட்டியானது விழாக் கோலம் கண்டது என்றா

SJK(TAMIL) PERAK SANGGETHA SABAH - மாணவர் தன்னெழுச்சி முகாம் 2018

Image
ஈப்போ, பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் கடந்த 11.06.2018 & 12.06.2018 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாணவர் தன்னெழுச்சி முகாம் 2018 நடைபெற்றது. பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பெற்றோர்கள் ஆகிய மூன்று தரப்பினரின் கூட்டு முயற்சியாக இந்த முகாம் முறையாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது. பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஓரிரவு பள்ளியிலேயே தங்கி இந்த 2 நாள் முகாமில் கலந்துகொண்டனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு மாணவர் தன்னெழுச்சி முகாமினை அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார். அதுமட்டுமல்லாது மாணவர்களுக்காகச் சிறுகதை பட்டறையையும் நடத்திக்கொடுத்தார். திறப்புரை - சுப.சற்குணன் தேர்ந்த ஆசிரியர்களின் பாட விளக்கவுரைகள், வழிகாட்டிகள், பட்டறைகள் ஆகியன நடைபெற்றதோடு தன்முனைப்பு உரை, யோகப் பயிற்சி, மாந்த வளப்பயிற்சி முதலான அங்கங்களும் இந்த முகாமில் இடம்பெற்றன. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சந்திரிகா அப்பு தலைமையில் பள்ளியின் ஆசிரியர்கள் மிகவும் சிறந்த முறையில் இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். பெ.ஆ.சங்கத்தின் தலை

SJK(TAMIL) MENGLEMBU - நம்பிக்கை நிதிக்காக மாணவர்கள் நன்கொடை வழங்கினர்

Image
பேரா , ஈப்போவில் உள்ள மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் நம்பிக்கை நிதிக்கு தாங்கள் சொந்தமாகச் சேகரித்த நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி நாடே பாராட்டும் நற்பணியைச் செய்துள்ளார்கள் . அரசாங்கத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்காக மலேசியப் பிரதமர் துன்   மகாதீர் முகமது நம்பிக்கை நிதியை அறிவித்திருந்தார் . அதற்காக நாட்டு மக்கள் மிகவும் ஆர்வத்தோடும் நாட்டுப் பற்றோடும் நன்கொடை வழங்கி வருகின்றனர் . இந்தத் தருணத்தில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும் பெற்றோர்களின் அனுமதியோடும் சொந்தப் பணத்தைச் சேகரித்து நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி தங்களின் அபரிமிதமான நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர் . மாணவர்களுடன் தலைமையாசிரியர் திருமதி மாரியம்மா ஒரு தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாட்டின் நெருக்கடியை உணர்ந்துகொண்டு தாங்களாகவே முன்வந்து இப்படி ஒரு நற்செயலைச் செய்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ள