TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்


21ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st CENTURY EDUCATION) உருமாற்றத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதற்கேற்ப ஒட்பம் நிறுவனம் 25 தமிழ்க்கல்விச் செயலிகளைத் (TAMIL EDUCATIONAL MOBILE APPS) தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக வெளியீடு செய்துள்ளது.

 

தமிழ் இலக்கணம், மொழி விளையாட்டு, திருக்குறள், செய்யுள், அறிவியல், மலாய், நன்னெறி, வரலாறு போன்ற பாடங்கள் தொடர்பான 25 குறுஞ்செயலிகள் (APPS) இதில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் வகுப்பறைக் கற்றல் எளிமையாக்கல் நடவடிக்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றால் பொய்யில்லை. அதோடு, மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்தச் செயலிகளைத் திறன் கருவிகளில் (GADGETS) பயன்படுத்தவும் முடியும்.


ஒட்பம் நிறுவனத்தின் தமிழ்க்கல்விச் செயலிகளைக் கீழ்க்காணும் முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கூகிள் பிளேவுக்குச் (GOOGLE PLAY) சென்று அங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்ய / DOWNLOAD

மலேசியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ்க்கல்விக் குறுஞ்செயலிகளை (APPS) ஆசிரியர் கல்விக் கழகத்தின் பயிற்சி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். ஈப்போ, சிரம்பான், கோலா லீப்பீசு, நீலாய் ஆசிரியர் கல்விக் கழகப் பயிற்சி ஆசிரியர்களே இந்த அருஞ்செயலைச் செய்தவர்கள்.


ஒட்பம் நிறுவனத்தின் திட்டமாகிய இதற்கு மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) முழு ஆதரவினை வழங்கியுள்ளது. தொழில்நுட்பர்களான முகிலன், முல்லை ஆகிய இருவரும் இந்தத் திட்டத்தினை நேர்த்தியாக வடிவமைப்புச் செய்து மலேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டுக்காக வழங்கியுள்ளனர்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்வழியில் தமிழ் கற்க விரும்புகின்ற அனைவரும் இந்தச் செயலிகளைப் பயன்படுத்தி மகிழ்ச்சி கொள்ளலாம்.

Comments

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WEBINAR STPK / வலையரங்கம் #17 : மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 3]

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(T) KLEBANG - PdP PITCHING போட்டியில் ஆசிரியை காமினி முதல் நிலை வெற்றி

பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகப் பொதுக்கூட்டம்