SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்
பேரா, பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த உருமாற்றுப் பள்ளியாக உருவாகியுள்ளது. அப்பள்ளிக்குக் கடந்த 08.06.2018 வெள்ளிக்கிழமை ஜொகூர் மாநிலத்தின் ஆசிரியர்கள் அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்தனர்.
ஜொகூர், பத்து பகாட் ஸ்ரீ பெலங்கி தமிழ்ப்பள்ளியைச் (SJKT Seri Pelangi, Batu Pahat, Johor) சேர்ந்த 12 ஆசிரியர்கள் இப்பயணத்தில் பங்கேற்றனர். காலை மணி 8:00 தொடங்கி மாலை மணி 2:30 வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது.
உருமாற்றுப் பள்ளி தொடர்பான பல்வேறு தகலவ்களும், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக் கதைகளும் இந்தப் பயிற்சியில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையாவும் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் இந்தப் பயிற்சியைச் சிறப்பாக வழிநட்த்தினார்கள்.
Comments
Post a Comment