Posts

Showing posts with the label DAERAH L.M & SELAMA

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

Image
கடந்த 17.09.2022 ஆம் நாள் மாணவர் முழக்கம் 2022 காலிறுதிச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டி இயங்கலை முறையில் நடந்தது. பேரா மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ஒருவர் மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சூரியவேந்தன். மற்றொரு வெற்றியாளர் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவி ரக்‌ஷிதா. சிறப்பான படைப்பினை வழங்கியதோடு, நல்ல வாதத் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் வினாக்களுக்கும் தகுந்த பதிலை வழங்கி  இவர்கள் இருவரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

பேரா மாநிலத்தின் சிறந்த நூலகப் போட்டியில் 2 தமிழ்ப்பள்ளிகள் வெற்றி

Image
2021ஆம் ஆண்டுக்கான பேரா மாநில நிலையில் சிறந்த 13 நூலகங்கள் அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில நிலையில் சிறந்த நூலகப்  போட்டியில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன. குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவுக்கான போட்டியில், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தின் தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் பரிசை வென்றுள்ளது. இதே பிரிவில் மூன்றாம் பரிசினை பத்தாங் பாடாங் மாவட்டத்தின் பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது. மாநில நிலையில் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். நமது தமிழ்ப்பள்ளிகளும் மற்ற பள்ளிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக மிளிர்கின்றன என்பதற்கு இந்த வெற்றியானது நல்லதொரு சான்றாகும். பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 2ஆம் பரிசினை வாகை சூடிய தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே காணலாம். தலைமையாசிரியர் திருமதி ஐ.சந்தனமேரி நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தா.மோகனவள்ளி பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 3ஆம் பரிசினை வாகை சூடிய பனோப்டன் தோட்டத்   தமிழ்ப்பள்ளி நூலக...

SJK(T) KG.JEBONG LAMA - காரம் குறையாத கடுகுப் பள்ளியின் சாதனைகள்

Image
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் செயல்படும் கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி குறைந்த மாணவர் கொண்ட (SKM) பள்ளியாகும். கடுகுக் குறைந்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஒப்ப சிறு பள்ளியாக இருந்தாலும் கீர்த்தி மிகுந்த பள்ளியாக மிளிர்கின்றது. 2021ஆம் ஆண்டு முழுவதும் இப்பள்ளி பல சிறப்பான நடவடிக்கைளையும் மாணவர் வளப் பணிகளையும் நடத்தியுள்ளது. மேலும், மாவாட்ட மற்றும் மாநில நிலையில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பெயர் பொறித்துள்ளது. கல்விப் பணியோடு மாணவர் உருவாக்கமும் இப்பள்ளியில் நன்முறையில் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கி.சந்திரிகா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தில் மிகவும் துடிப்பாகச் செயல்படும் பள்ளியின் ஆசிரியர்களையும் நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும். தலைமையாசிரியர் திருமதி கி.சந்திரிகா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மின்னும் நடசந்திரங்களாக உருவாக்கியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிறப்பான அடைவுகளையும் சாதனைகளையும் தொகுத்து  '2021இன் ...

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 தகுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது. இதில், அதிக எண்ணிக்கையில் பேரா மாநிலத்தின் மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. 10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன்  இப்போட்டி நடைபெறுகிறது. தகுதிச் சுற்றில் போட்டியாளர்கள் பேசி  காணொலியாகப் பதிவுசெய்து  போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதிலிருந்து நடுவர் குழுவினர் சிறந்த 120 மாணவர்களைக்  காலிறுதி சுற்றுக்குத் தெரிவுசெய்துள்ளனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் விவரங்களைக் பின்வரும் அட...

அறிவியல் விழா [SCIENCE FAIR] 2021 - வெற்றிபெற்ற தமிழ்ப்பள்ளிகளின் நிலவரம்

Image
2021ஆம் ஆண்டுக்கான மாநில நிலை அறிவியல் விழா [ZONE LEVEL SCIENCE FAIR FOR YOUNG CHILDREN 2021] நன்முறையில் நடந்தேறி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேரா மாநில நிலையில் 10 தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு பெற்றுள்ளன. பேராவில் உள்ள 23 தமிழ்ப்பள்ளிகள் தேசிய நிலை அறிவியல் விழாப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. பேரா மாநில நிலையில் முதல் பரிசை வாகை சூடிய பள்ளி, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தைச் சேர்ந்த செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். 2ஆம் பரிசை வெற்றிகொண்ட பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி. 3ஆம் பரிசுக்குரிய பள்ளியாக மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி கண்டுள்ளது. முதல் 10 இடங்களில் வெற்றிபெற்ற பள்ளிகளின் பட்டியல்:- தேசிய நிலை அறிவியல் விழாப் போட்டிக்குத் தேர்வு பெற்ற பள்ளிகளின் பட்டியல்:- மகத்தான வெற்றியை ஈட்டியுள்ள பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள், தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், சாதனை மாணவர்கள் மற்றும் வீட்டில் மாணவர்களுக்கு வழிகாட்டி உதவிய அருமை பெற்றோர்கள் அனைவருக்கு...

மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

Image
பேரா மாநில விளையாட்டு மன்றம் [MAJLIS SUKAN SEKOLAH-SEKOLAH NEGERI PERAK]   2021ஆம் ஆண்டுக்கான  மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியை நடத்தியது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இவ்வாண்டுக்கான சதுரங்கப் போட்டி இயங்கலை முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பேரா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களையும் சேர்ந்த மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளோடு இடைநிலைப் பள்ளிகளும் இப்போட்டியில் கலந்துகொண்டன.   பாகான் டத்தோ மாவட்டப் போட்டியில் , 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் அதிரடியான வெற்றியைப் பதிவுசெய்து பாரதி தமிழ்ப்பள்ளி மகத்தான சாதனை படைத்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 10 இடங்களில் முதல் 3 பரிசுகள் உள்பட 6 பரிசுகளை வென்று பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளனர். முதல் பரிசு, 2ஆவது, 3 ஆவது, 7ஆவது, 8ஆவது மற்றும் 10ஆவது ஆகிய 6 பரிசுகளை ஒருசேர வென்றுள்ளனர். அதோடு நில்லாமல், 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்  10 இடங்களில் முதல் 2 பரிசுகள் உள்பட 5 பரிசுகளை வென்று பாரதி தமிழ்ப்பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளனர் என்பது...