Posts

Showing posts with the label HAL EHWAL MURID

மாணவர் முழக்கம் 2022 - பேராவின் 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Image
மாணவர் முழக்கம் 2022 தேர்வுச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியாளர்கள் தங்களின் பேச்சினை 1 நிமிடம் 30 வினாடிக்குக் காணொலியாகப் பதிவுசெய்து ஏற்பாட்டளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறப்பான காணொலிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். அதன்  அடிப்படையில், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பேரா மாநிலத்தின் 18 வெற்றியாளர்களின் பட்டியலைக் கீழே காணலாம். மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பாடாற்றிய தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். காலிறுதிச் சுற்றில் பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறப்பான படைப்பினை வெளிப்படுத்த வாழ்த்துகள்.

SJK(T) CHETTIARS, IPOH - INTOC அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம்

Image
பள்ளி- பெயர் / Nama Sekolah: செட்டியார் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJK(TAMIL) CHETTIARS, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan: INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவுநிலை / Pencapaian: தங்கப் பதக்கம் / GOLD AWARD நாள் /  Tarikh: 28 MEI 2022 ஏற்பாட்டாளர் / Penganjur: INTOC - GLOBAL INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY தலைமையாசிரியர் / Nama Guru Besar: PN. PACHAYAMMAL   A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat: திருமதி செல்வி முருகையா PN. CHELVI   A/P MURUGAYYA சாதனை மாணவர்கள் / M urid Terlibat: 1. லோகேந்திரன் சிவக்குமார் / LOHENDRAA A/L SIVAKUMAR 2. சர்வின் விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN 3. அமரேஸ் / மகேஸ்வரன் / AMARESS A/L MAGESWAREN 4. தீபிகா விஜயராமன் / THIPIKAA A/P VIJAYA RAMAN

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

Image
பேரா, கிரியான் மாவட்டம், கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பியர் அறிவகம், உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா கண்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தோட்ட மேலாளர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.   இத்திறப்பு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரியைப் படிநிகர்த்து Pegawai SISC+ திரு.மயூடின் பின் சஹாரி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வகுப்பறையினைப் பள்ளி மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இது போன்ற முயற்சிகள் ஒவ்வொரு பள்ளியிலும் முடுக்கிவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் சிந்தனைத் திறன் தொடர்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை அறிந்து வைத்திருப்பதுடன் அதனைச் சிறந்த முறையில் மாணவருக்குக் கொண்டு சேர்க்க வழிவகை காண வேண்டும் என்றார்.   மாணவரிடையே சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்பில் பல்வேறு வகையான சிந்தனைத் திறன் தொடர்பான நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்ட மேலாளர் திரு.பிரபாகரன் தண்ணீ...

SJK(T) MAHA GANESA VIDYASALAI - 2021 ஆம் ஆண்டின் செயல் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

Image
மகா கணேசா வித்யாசாலை, மஞ்சோங் மாவட்டத்தில் மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாகும். தொடர்ச்சியாகப் பல கல்வித் திட்டங்களும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளும் போட்டிகளும் சிறப்பாக இப்பள்ளியில் நடந்து வருகின்றன. மேலும், மாவட்டம், மாநிலம், தேசிய நிலை மட்டுமின்றி அனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டத்தக்க வெற்றிகளை இப்பள்ளி மாணவர்கள் அடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியோடு மாணவர் உருவாக்கத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படும் இப்பாள்ளியின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள். பள்ளிக்கு தலைமைப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி அவர்களுக்கும் நல்வாழ்த்துகள். தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி  இப்பள்ளியின் வெற்றிக்கதைகளும் சாதனைகளும் மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளதைக் கீழே காணலாம். Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும் முடிந்த 2021ஆம் ஆண்டில் மகா கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற செயல்நடவடிக்கைகள் கீழே உள்ள மின்னூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும்

SJK(T) KERUH - 2021ஆம் ஆண்டுத் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

Image
பேரா மாநிலம், மேல்பேரா மாவட்டத்தில் அமைந்துள்ளது குரோ தமிழ்ப்பள்ளி, கல்வி, இணைப்பாடம், மாணவர் உருவாக்கம், ஆசிரியர் மேம்பாடு என இப்பள்ளி பல வகையிலும் சிறப்புக்குரிய ஒரு பள்ளியாகத் திகழ்கின்றது. Aktiviti & Pencapaian SJK(T) Keruh Tahun 2021 கொரோனா கோரணி நச்சில் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதிலும் இயங்கலை வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளும், செயல் நடவடிக்கைகளும் இப்பள்ளியில் நடைபெற்றுள்ளன. மாறுபட்ட கோணத்தில் மாணவர்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தவிர, மாநில, தேசிய, அனைத்துலக நிலைகளில் இயங்கலை வாயிலாக நடந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர். அதுமட்டுமல்லாது, குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் உயரிய விருதுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர். இப்பள்ளியின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் நன்முறையில் வழிநடத்தி வெற்றிகளைக் குவித்துவரும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செல்வராணி அவர்கள் வெகுவாகப் பாராட்டலாம். தலைமைய...

SJK(T) KG.JEBONG LAMA - காரம் குறையாத கடுகுப் பள்ளியின் சாதனைகள்

Image
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் செயல்படும் கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி குறைந்த மாணவர் கொண்ட (SKM) பள்ளியாகும். கடுகுக் குறைந்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஒப்ப சிறு பள்ளியாக இருந்தாலும் கீர்த்தி மிகுந்த பள்ளியாக மிளிர்கின்றது. 2021ஆம் ஆண்டு முழுவதும் இப்பள்ளி பல சிறப்பான நடவடிக்கைளையும் மாணவர் வளப் பணிகளையும் நடத்தியுள்ளது. மேலும், மாவாட்ட மற்றும் மாநில நிலையில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பெயர் பொறித்துள்ளது. கல்விப் பணியோடு மாணவர் உருவாக்கமும் இப்பள்ளியில் நன்முறையில் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கி.சந்திரிகா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தில் மிகவும் துடிப்பாகச் செயல்படும் பள்ளியின் ஆசிரியர்களையும் நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும். தலைமையாசிரியர் திருமதி கி.சந்திரிகா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மின்னும் நடசந்திரங்களாக உருவாக்கியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிறப்பான அடைவுகளையும் சாதனைகளையும் தொகுத்து  '2021இன் ...

SJK(T) LDG.GLENEALY - IIMOS 2021 இளம் ஆய்வாளர்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டி VIRTUAL YOUNG INNOVATOR COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 30-11-2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான், இந்தோனேசியா அல் அசார் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தேசிய நூலகம் UITM KELANTAN, UNIVERSITI AL-AZHAR INDONESIA & PERSATUAN PUSTAKAAN MALAYSIA தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY செல்வி.கஸ்தூரி / CIK.KASTURI திருமதி.சரஸ்வதி / PN.SARASWATHY திருமதி.தேன்மொழி / PN.THENMOLI திருமதி.தவமணி / PN.TAVAMANI சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வன் கேசவன் / K. KESAVAN செல்வன் லிங்கேஸ்வரன் / G. LINGESWARAN செல்வன் உதயசூரியா / V. UTHAYA S...

SJK(T) LDG.GLENEALY - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் புத்தாக்கப் போட்டி VIRTUAL INNOVATION COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 3 OKTOBER 2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான் UNIVERSITI TEKNOLOGI MARA KELANTAN தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY திருமதி புவனேஸ்வரி / PN.PUVANESWARI திருமதி நிவேதா / PN.NIVETHA திருமதி.கேமாமாலினி / PN.KEMAMALINI திருமதி.பிரியங்கா / PN.PRIYANGKA சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வி தஷ்வினி / M. THASHVINI செல்வி யுவனேஸ்வரி / B. YUWANEAWARI செல்வி கீர்த்திகா / M. KIRTHIKA

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி

Image
18.12.2021 ஆம் நாள் அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இரட்டை வெற்றியைக் கண்டு மலேசியப் போட்டியாளர்கள் மாபெரும் சாதனை படைத்தனர். Adik Johnnes Abisya Edwin (SJKT Perak Sangetha Sabah, Ipoh) dinobatkan sebagai Johan dan Adik Darshini Kumaran (SJKT Ldg.Batak Rabit, Teluk Intan) menjadi Naib Johan dalam Pertandingan Pidato bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Antarabangsa pada 18.12.2021 வணக்கம் மலேசியா நிறுவனம் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர் மையமும் இணைந்து 7ஆவது ஆண்டாக நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிப் போட்டி இயங்கலை வாயிலாக நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த 2 போட்டியாளர், இலங்கையிலிருந்து ஒருவர், டென்மார்க் நாட்டிலிருந்து ஒருவர் என 4 பேர் இறுதிப் போட்டியில் களமிறங்கினர். அமைதியான உலகம் வேண்டும். அதற்கு என் உடனடி ஆணை வேண்டாம் ஆயுதம், வேண்டாம் கைப்பேசி, வேண்டாம் மது, வேண்டாம் நகரமயம் எனும் 4 நிலைப்பாடுகளில் ஒவ்வொரு போட்டியாளரும் பேசினர். வேண்டாம் நகரமயம் என்ற நிலைப்பாட்டில் மிகச் சிறப்பாகப் பேசியதோடு மிக இலாவ...