Posts

Showing posts from October, 2018

மலேசியாவில் தமிழ்க்கல்வி 202ஆம் ஆண்டு நிறைவை அடைகிறது

Image
(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளருமான சுப.நற்குணன் வழங்கும் சிறப்புக் கட்டுரை இது)  2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21அம் நாள், நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 202 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 202 ஆண்டுகளாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் மிகையாகாது. மலேசியாவில் 202 ஆண்டுகள் நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை. மேலும் படிக்க..

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - இந்தியத் தூதரின் சிறப்பு வருகை

Image
“இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும் பெருமை அடைந்தேன். இந்த மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளிக்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக உதவிகள் வழங்கப்படும்” என கடந்த புதன்கிழமை அக்டோபர் 17-ஆம் தேதி இப்பள்ளிக்கு அதிகாரபூர்வ சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுள்  குமார் தெரிவித்தார். இந்தியத் தூதருடன் தோ புவான் உமா சம்பந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்   மேலும் படிக்க..

SJK(TAMIL) BULUH AKAR - இணைப்பாட நன்மதிப்பு விருது

Image
பேரா ஆட்சிக்குழு உறுப்பினரிடம் விருது பெறுகிறார் தலைமையாசிரியர் மனஹரன்

SJK(TAMIL) GERIK - இளம் வடிவமைப்பாளர் பட்டறை

Image
கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மலேசிய வானொலி மின்னல் பண்பலையுடன் இணைந்து இளம் வடிவமைப்பாளர் பட்டறையை வெகுச்சிறப்புடன் நடத்தியது. கடந்த 5 – 6 அக்டோபர் 2018 ஆகிய இரண்டு நாட்கள் இந்தப் பட்டறை நடந்தது. முனைவர் வேலு, தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் முதல் நாளன்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்ட வேளையில் , மறுநாள் மாணவர்களுக்குப் பட்டறை நடத்தப்பட்டது.  வடிவமைப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் வேலு பெருமாள் இந்தப் பட்டறையை செவ்வனே வழிநடத்தினார். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெற்றோர்கள் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் வடிவமைப்பு பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பெற்றது என்று பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள் கூறினார். மேலும் , மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியினை வழிநடத்தியதோடு மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். செல்லமே செல்வமே வானொலி நிகழ்ச்சிக்காக மாணவர்களின் நேர்க்காணலும் படைப்புகளும் பதிவு செய்ய

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

Image
கடந்த அக்டோபர் 1 முதல் 3ஆம் திகதி வரையில் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் உருமாற்றுப் பள்ளித் திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் தங்களின் ஆய்வுகளையும் படைப்புகளையும் புத்தாக்கங்களையும் வெளிப்படுத்துவதற்காக இம்மாநாடு நடத்தப்பட்டது. அதில் இரண்டே தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே கலந்துகொண்டன. மேலும் படிக்க..    

SJK(TAMIL) LDG.SIN WAH - சிறந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருதுகள்

Image
காலஞ்சென்ற சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் உங்கள் குரல் ஆசிரியர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு விருது வழங்கப்பட வேண்டும் என டத்தோ ஹாஜி தஸ்லிம் குடும்ப நண்பரும் தகவல் அதிகாரியுமான க.அப்துல் ஜபார் தெரிவித்தார். மேலும் படிக்க..  

SJK(TAMIL) GERIK - யுனெசுகோ நாள் புத்தாக்கக் கண்காட்சி 2018

Image
செப்டம்பர் 28 – 30 வரை ஈப்போவில் நடைபெற்ற யுனெசுகோ மலேசியா நாளையொட்டி ( HARI UNESCO MALAYSIA 2018) புத்தாக்கக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களான சில்வியா மித்ரா (ஆண்டு 5) , சூர்யா கண்ணன் (ஆண்டு 3) , ஹரிஷ் கென்னடி (ஆண்டு 3) ஆகிய மூவரும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைக் கொண்டு தங்களின் புத்தாக்கத்தை உருவாக்கியிருந்தனர். மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள் , ஆசிரியர்கள் திருமதி சுகுனா மணியம் , செல்வி ஈஸ்வரி அர்ஜுணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அனைத்துலகத் தரத்தில் நடைபெற்ற இந்தப் புத்தாக்கக் கண்காட்சியில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி என்ற சிறப்பினைக் கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி இதன்வழி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SJK(TAMIL) TAPAH - மெய்நிகர் கற்றல் வகுப்பறை (FROG VLE CLASSROOM)

Image
தமிழ் நேசன் நாளிதழ் 29.9.2018 சிறப்பு விருந்தினர்களும் ஆசிரியர்களும்

சாதனைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்மதிப்புச் சான்றிதழ்

Image