Posts

Showing posts from March, 2019

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

Image
2019ஆம் ஆண்டு  மார்ச்சு   மாதத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நடடிக்கைகள், போட்டிகள், வெற்றிகள், சாதனைகள் ஆகியவை மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. படத்தைச் சொடுக்கவும் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி   'வெள்ளி மலர்-3'   மின்னூலைப்   பார்க்கலாம்.

வெள்ளி மலர் 2 [Velli Malar Februari 2019]

Image
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நடடிக்கைகள், போட்டிகள், வெற்றிகள், சாதனைகள் ஆகியவை மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. படத்தைச் சொடுக்கவும் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி   'வெள்ளி மலர்-2'   மின்னூலைப்   பார்க்கலாம்.

விழி - மடல் 15 : புதுமைகள் செய்க முனைந்து..

Image

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI : மாநில அரசாங்கக் கட்டடத்திற்கு மாணவர்கள் வருகை

Image
தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்விக் கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்க ஆசிரியர்களின் சேவையை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் பாராட்டினார். சிறந்த நிலையில் உருவாக்கப்பட்டு வரும் மாணவர்கள் பொது அறிவு ஆற்றல் உள்ளவர்களாகவும் விளங்கச் செய்வதின் வழி அது அவர்களின் திறமை மேலும் வலுப்படுத்தும் என்றார். மாநில அரசாங்க செயலகத்திற்கு வருகை புரிந்த சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் படிக்க..

SJK(TAMIL) MENGLEMBU : மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கூட புதிய கட்டடத்திற்கு சிவநேசன், சிவகுமார் நிதி வழங்கினர்

Image
இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளில் நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய கட்டட நிதிக்கு அறிவித்தபடி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் வெ. 50,000 மற்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் வெ. 20,000 வழங்கினர். இப்பள்ளிக் கூடம் வெ.35,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்தது. அதன் நிர்மாணிப்பு பணி நிதிப்  பிரச்சனையால் திட்டமிட்டப்படி நிறைவு செய்ய இயலாத காரணத்தால் பள்ளி நிர்வாகம் நிதி கோரிக்கையை முன் வைத்தது. இப்பள்ளிக்கு வருகை புரிந்த மேல் குறிப்பிட்ட இருவரும் செய்த நிதி அறிவிப்பை இன்று  ஒப்படைத்தனர். மேலும் படிக்க..

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT : அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

Image
தேசிய வகை புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் அனைத்துலக மகளிர் தினம் பள்ளி அளவில் மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டது. பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் தலைமையாசிரியை உட்பட மேலும் ஆறு ஆசிரியைகள், மிக சிறந்த பெண்மணிகளாக சிறப்பிக்கப்பட்டனர். தங்கள் பிள்ளைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கூடங்களில் கல்வி கற்கும் அளவிற்கு கொண்டு சேர்த்த ஆசிரியைகள் தலைமையாசிரியையால் சிறப்பு செய்யப்பட்டனர். மேலும் படிக்க..

SJK(TAMIL) TAMAN DESA PINJI : தாய்மொழி நாள் விழா

Image
தேசிய வகை தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளியில் அனைத்துலகத் தாய்மொழி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட/தென் கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் கண்காணிப்பாளர் தவமணி, திரு.செ.பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரிய தலைவர் மதிப்பிற்குரிய டத்தோ ந.மாரிமுத்து அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் படிக்க..

SJK(TAMIL) PERAK SANGEETHA SABAH : விளையாட்டுப் போட்டி விழா 2019

Image
பழமை வாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் கண்ட  பேரா சங்கீத தமிழ்ப்பள்ளிக்கூடம் திடல் வசதிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வசதிகள் கொண்டப் பள்ளியாக உருமாறி வருகிறது. ஆனால் திடல் இல்லா குறை நிலவி வருகிறது. பள்ளியின் 65ஆவது ஆண்டு திடல் தடப்போட்டியை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியம் இந்த திடல் விவகாரம் குறித்துத் பேசினார். இப்பள்ளிக கூடம் அருகில் கேடிஎம்மிற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஏற்கனவே பலமுறை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. மேலும் படிக்க. .

SJK(TAMIL) LADANG GAPIS - தலைமையாசிரியர் ஐயை பொ.பொன்னி அவர்களின் பணி ஓய்வு

Image

தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்

Image
பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம். அந்தவகையில் பல்வேறு அமைப்புகள் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளும் இந்தத் தாய்மொழி நாளை முன்னிட்டு விழாக்களை நடத்தியுள்ளன. மாணவர் மனங்களில் தாய்மொழி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி மொழிப்பற்றை விதைக்கும் நோக்கில் பல பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேராக் மாநிலத்தில் அதிகமான பள்ளிகளில் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பேராக் மாநிலத்தில் முதன் முறையாக 56 பள்ளிகளில் தாய்மொழி நாள் நடந்துள்ள வேளையில் இவ்வாண்டில் 70 தமிழ்ப்பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தெரிவித்தார். மேலும் படிக்க..