பேரா , கிரியான் மாவட்டம் , செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உருமாற்றத் திட்டத்தினைப் பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டாக்டர் முகமது சுகைமி பின் முகமது அலி அவர்கள் அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்து, 12 கருப்பொருள் வகுப்பறைகளைத் திறந்துவைத்தார். Pengarah Pendidikan Negeri Perak Dr.Mohd.Suhaimi Bin Mohamed Ali, merasmikan 12 bilik darjah transformasi bertema dan memenuhi hasrat PAK21 di SJK(T) Saint Mary's, Daerah Kerian, Perak. Ini merupakan projek transformasi bilik darjah yang pertama seumpama ini di negeri Perak yang pernah dilakukan. இந்தத் திட்டத்தின்கீழ் இப்பள்ளியில் உள்ள 12 வகுப்பறைகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் (THEME CLASSROOM) அழகாகவும் நேர்த்தியாகவும் உருமாற்றம் கண்டுள்ளன. மேலும் , 21ஆம் நூற்றாண்டு வகுப்பறைக்கான கூறுகள் அனைத்தும் கூடவே இடம்பெற்றுள்ளன. பேரா மாநிலத்தில் இந்த வகையில் உருமாற்றம் கண்டுள்ள முதலாவது பள்ளியாகச் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி சிறப்புப் பெற்றுள்ளது. தேசிய, சீன, இடைநிலைப் பள்ளிகளில்கூட இம்மாதிரியான உருமாற்றம் இதுவரையில் ந...