Posts

Showing posts with the label TRANSFORMASI PENDIDIKAN

SJK(T) KERUH - 2021ஆம் ஆண்டுத் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

Image
பேரா மாநிலம், மேல்பேரா மாவட்டத்தில் அமைந்துள்ளது குரோ தமிழ்ப்பள்ளி, கல்வி, இணைப்பாடம், மாணவர் உருவாக்கம், ஆசிரியர் மேம்பாடு என இப்பள்ளி பல வகையிலும் சிறப்புக்குரிய ஒரு பள்ளியாகத் திகழ்கின்றது. Aktiviti & Pencapaian SJK(T) Keruh Tahun 2021 கொரோனா கோரணி நச்சில் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதிலும் இயங்கலை வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளும், செயல் நடவடிக்கைகளும் இப்பள்ளியில் நடைபெற்றுள்ளன. மாறுபட்ட கோணத்தில் மாணவர்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தவிர, மாநில, தேசிய, அனைத்துலக நிலைகளில் இயங்கலை வாயிலாக நடந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர். அதுமட்டுமல்லாது, குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் உயரிய விருதுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர். இப்பள்ளியின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் நன்முறையில் வழிநடத்தி வெற்றிகளைக் குவித்துவரும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செல்வராணி அவர்கள் வெகுவாகப் பாராட்டலாம். தலைமைய...

SJK(T) LDG.GLENEALY - IIMOS 2021 இளம் ஆய்வாளர்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டி VIRTUAL YOUNG INNOVATOR COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 30-11-2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான், இந்தோனேசியா அல் அசார் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தேசிய நூலகம் UITM KELANTAN, UNIVERSITI AL-AZHAR INDONESIA & PERSATUAN PUSTAKAAN MALAYSIA தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY செல்வி.கஸ்தூரி / CIK.KASTURI திருமதி.சரஸ்வதி / PN.SARASWATHY திருமதி.தேன்மொழி / PN.THENMOLI திருமதி.தவமணி / PN.TAVAMANI சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வன் கேசவன் / K. KESAVAN செல்வன் லிங்கேஸ்வரன் / G. LINGESWARAN செல்வன் உதயசூரியா / V. UTHAYA S...

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - INNOCOM புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah : துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT Tun Sambanthan,Bidor, Daerah Batang Padang, Perak விருது / Nama Anugerah : Anugerah Emas dalam kategori Pendidikan dan Pengajaran  தங்கப் பதக்கம் - கல்வி மற்றும் கற்பித்தல் பிரிவு நிலை / Peringkat : அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh : 18/10/2021 ஏற்பாடு / Penganjur : Academic International Dialogue (AID Conference)  அனைத்துலகக் கல்விக் கருத்தாடல் அரங்கம் தலைமையாசிரியர் / Nama Guru Besar : திருமதி வாசுகி முனியாண்டி Pn Vasagi A/P G.Muniandy சாதனை ஆசிரியர்கள் / Nama Guru Terlibat : செல்வி வளர்மதி வேலு / Cik Valarmathi A/P Valoo செல்வி சாந்தி ரெங்கசாமி / Cik Santhy A/P Rengasamy  திரு.சரவணன் பத்துமலை / En Saravanan A/L Batumalai திருமதி கோமதி இலெட்சுமணன் / Pn Komathi A/P Letchamanan திரு.குமரன் காந்திபன் / En Kumaran A/L Gandippan

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் வென்று சாதனை

Image
  பள்ளிப் பெயர் /  Nama Sekolah: துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) Tun Sambanthan, Bidor, Daerah Batang Padang, Perak போட்டி / Pertandingan: பன்னாட்டு மெய்நிகர் புத்தாக்கப் போட்டி  Virtual Innovation Competition (VIC) நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa   நாள் / Tarikh: 29-09-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,  கிளந்தான்,   UITM Kelantan தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி வாசுகி முனியாண்டி / Puan Vasugi A/P G.Muniandy விருது / Anugerah 1: தங்கப் பதக்கம் / Gold Award சிறப்பு விருது / Special Award  Merit Of Achievement பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திரு.நா.மீனாட்சி சுந்தரம் / EN MEENACHI SUNDRAM A/L NAGARAJAN செல்வி.சாந்தி ரெங்கசாமி / CIK SANTHY A/P RENGASAMY செல்வி வளர்மதி வேலு / CIK VALARMATHI A/P VALOO சாதனை மாணவர்கள் / Murid Terlibat: சாமினி சுப்பிரமணி / SHAMINI A/P SUBRAMANI பவித்ரா திருவரசு / PAVINTRA A/P TERUVARASU பிரியாராமன் ஞானசேகர் / PIRIYARAMAN A/...

SJK(T) THIRUVALLUVAR - [WYIIA2021] இளையோர் புத்தாக்கப் போட்டியில் தனியொருவனாகச் சாதித்த மாணவன்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான், கீழ்ப்பேரா மாவட்டம், பேரா SJKT THIRUVALLUVAR, TELUK INTAN,  PERAK போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa விருது / Anugerah: வெண்கலப் பதக்கம் / Bronze Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி சகுந்தலா கிருஷ்ணன் / Puan Sakunthala Krishnan பொறுப்பாசிரியர் /  Guru Terlibat: திருமதி சத்யபிரியா குமார் / PN.SATYAPRIYA KUMAR சாதனை மாணவர் / Murid Terlibat: சுஜேந்திரன் செல்வக்குமார்/ SHUJENTHRAN SELVAKUMAR

SJK(T) BERUAS - வடமலேசியப் பல்கலைக்கழக மின்கற்றல் விழா: 2 தங்கம் 1 வெள்ளி வென்று மகத்தான சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah : பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT BERUAS, DAERAH MANJUNG, PERAK போட்டி / Nama Pertandingan :  வடமலேசியப் பல்கலைக்கழக மின்கற்றல் பன்னாட்டு விழா INTERNATIONAL UNIVERSITY CARNIVAL ON E-LEARNING (IUCEL 2021) நிலை / Peringkat : அனைத்துலக நிலை / ANTARABANGSA நாள் / Tarikh : 15 JUN 2021 - 16 JUN 2021 ஏற்பாட்டாளர் / Penganjur : வட மலேசியப் பல்கலைக்கழகம் UNIVERSITI UTARA MALAYSIA (UUM) தலைமையாசிரியர் / Guru Besar : PN. RAHMATHUNISA BEAHAM BINTI ABDUL RAHIMAN திருமதி ரஹ்மதுனிஸா அப்துல் ரஹிமான் அடைவு / Pencapaian : [குழு / Kumpulan 1] தங்கப் பதக்கம் / GOLD AWARD பொறுப்பாசிரியர் / Guru Terlibat : அனஷ்தாஷியா வால்கர் CIK ANNASTAZCIA WALKER சாதனை மாணவர்கள் / Murid Terlibat :    1)தீபாசினி மூர்த்தி / DEEPASHINE A/P  MUMURDI 2)திவாசினி மூர்த்தி / DIVYASHINI A/P MUMURDI   3)பர்மிதா லோகேந்திரன் / PARMITA A/P LOKENTERAN   4)ஹீதிஸ் பிரபு / HITESH A/L PERABU அடைவு / Pencapaian : [குழு / Kumpulan 2] தங்கப் பதக்கம் / GOLD A...

பேரா மாநிலக் கற்றல் புத்தாக்க விழா - KIPP 2021

Image
பேரா மாநிலக் கற்றல் புத்தாக்க விழா 2021இல் நமது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் கலந்துகொண்டது மிகவும் பெருமைக்குரிய செய்தி.  கல்வி அதிகாரிகள், இடைநிலைப்பள்ளி, மலாய்பள்ளி, சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 202 புத்தாக்கப் பங்கேற்புகள் இந்தப்  போட்டிக்கு அனுப்பப்பட்டன. ஆசிரியர்கள் இந்தப் புத்தாக்கப் போட்டியில் தனிநபராகவும் குழுவாகவும் கலந்துகொண்டனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டனர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 20 பேர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சிறப்பான கற்றல் புத்தாக்கங்களை உருவாக்கி சாதனை ஆசிரியர்களாக மிளிரும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்; மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 📌ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்களின் கற்றல் புத்தாக்கம் & பதக்க விவரங்களையும் கீழே காண்க. [படத்தைச் சொடுக்...

SJK(T) KERUH - ஆசிரியை செல்வி.சீதாலட்சுமிக்கு அனைத்துலக கட்டுரைப் படைப்பாளர் விருது

Image
கனடாவில் நடைபெற்ற 5th International Invention Innovation Competition In Canada ( iCAN 2020) எனும் அனைத்துலக புத்தாக்கப் போட்டியின் சிறந்த புத்தாக்கக் கட்டுரைப் படைப்பாளர் விருது ஆசிரியை செல்வி சீதாலட்சுமிக்கு வழங்கப்பட்டது. Cikgu Cik.Cheetalakchumy Balu, Guru SJK(T) Keruh, Daerah Hulu Perak, Perak dianugerahkan Sijil Kepujian untuk Penulisan Ilmiah Inovasi dalam 5th International Invention Innovation Competition In Canada (iCAN 2020) இவருடைய புத்தாக்கக் கட்டுரை தெரிவு செய்யப்பட்டு போட்டியின் வெற்றியாளர் ( Award Winner of iCAN 2020 ) எனும் சிறப்பு விருதினை வாகைச் சூடியுள்ளார்.  ஆசிரியை செல்வி சீதாலட்சுமி பாலு பேரா, குரோ தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் இளம் ஆசிரியராவார். இவர் தமது தந்தையார் திரு. பாலு மாணிக்கம் அவர்களுடன் இணைந்து இந்த கட்டுரைப் படைப்பினை இயங்கலை மூலம் படைத்துள்ளார். அவருடைய தந்தையாரும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் தனித்துவமான கட்டுரைப் படைப்பினைப் பாராட்டி ஏற்பாட்டுக் குழு சிறப்பாக இந்த விருதினை வழங்கியதோடு மட்டுமல்லாமல் சிறந்த கட்டுரை படைப்...

SJK(T) Daerah LMS - கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை

Image
லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 12.09.2020ஆம் நாள் ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை [Bengkel Perkongsian Pintar PdPc SJK(T) Daerah Larut Matang dan Selama] சிறப்புடன் நடந்தது.   லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் உள்ள 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 32 தமிழ்மொழி ஆசிரியர்கள் மற்றும் 14 தலைமையாசிரியர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர். பட்டறையில் நடைபெற்ற பகிர்வுகளின் விவரம்:-   1.திட்ட அடிப்படையிலான கற்றல் [Project Based Learning] பயிற்றுநர் : திரு.முத்தரசன் செல்லையா,  லாருட் மாத்தாங் செலாமா மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரி   2.தலைகீழ் வகுப்பு [Flipped Classroom] பயிற்றுநர் ஆசிரியர் திரு.சிவபாலன் திருச்செல்வம்,  இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்   3.நேரலைப் பயிற்சித்தாள் [Live Worksheets] பயிற்றுநர் : ஆசிரியர் திருமதி ஶ்ரீதேவி,  தைப்பிங் இரப்பர் தோட்டத் தமிழ்ப்பள்ளி                       ...

SJK(T) ST.THERESA'S CONVENT - ஶ்ரீலங்கா புத்தாக்கப் போட்டியில் இரட்டைத் தங்கம் வென்று சாதனை

Image
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இலங்கை அனைத்துலகப் புத்தாக்க மற்றும் வடிவமைப்பு போட்டி 2020-இல்  இரட்டைத் தங்கப்பதகங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். Murid-murid SJK(T) St.Theresa's Convent menang 2 Pingat Emas dalam Pertandingan International Invention and Innovation Competition Sri Lanka 2020 yang diadakan atas talian. இணையம் வழியாக இப்போட்டியில் கலந்துகொண்டு செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் : குழு 1 தலைப்பு :தீடீர் வெள்ள எச்சரிக்கை கருவி (Flash Flood Alarm) 1.தமிழ்ச்செல்வன் கனகநாதன், 2.தான்யலெட்சுமி விக்னேஸ்வரன்,  3.மேத்ரா கணேசன்  4.தயகுமரன் விக்னேஸ்வரன் குழு 2 தலைப்பு : தூக்கம் மற்றும் சோர்வைப் போக்கும் மூலிகை நிவாரணி (Anti-Drowsy Herbal remedy) 1.பிரவின்ராஜ் லோகநாதன், 2.கவினா ஸ்ரீ சங்கர் 3.அவினாஷ் மனோகரன் 4.பூவன் சுகுமாறன் தங்களின் புத்தாக்கம் மூலம் அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்துவரும் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ...

SJK(T) LDG.SUNGAI BOGAK - Wordwall & Edpuzzle கூகிள் வகுப்பறையில் தமிழ்மொழிப் பயிற்சிகள்

Image
பேரா, கிரியான் மாவட்டம், சுங்கை போகாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2  தமிழ்மொழி மின்னியல் பயிற்சிகளை உருவாக்கி தமது கூகிள் வகுப்பறையில் [Google Classroom] வழங்கியுள்ளார். எட்படல் (edpuzzle) பயிற்றுராகத் தகுதி பெற்ற இவர் இந்தச் செயலியை மற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டு 1 தமிழ்மொழிக் கலைத்திட்டத்தில் உள்ள அனைத்துத் திறன்களையும், ஆண்டு 2 தமிழ்மொழி கலைத்திட்டத்தின் இலக்கணத் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு முழுமையான மின்னியல் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். Wordwall & Edpuzzle ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி பயிற்சிகள் அனைத்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தம்முடைய கூகிள் வகுப்பறையில்  ஒருங்கிணைத்துள்ளார்.  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2 மாணவர்கள் இந்தக் கூகிள் வகுப்பறையில் இணைந்து பயன்பெறலாம். ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் உருவாக்கியுள்ள கூகிள் வகுப்பறைக்கான கடவுச்சொல் பின்வருமாறு:- ஆண்டு 1 :  nbvs3kt ஆண்டு 2 :...

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலண்டன் மாநகரில் ஏறக்குறைய 200 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. தற்போது இலண்டனிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் உள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இதேபோல, நம் மலேசியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிருந்தே இல்லிருப்புக் கற்றல் முறைகளை இணையம் வழி மேற்கொண்டனர். அந்த வகையில், பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ‘இயங்கலை பயில்களம்’ என்ற பெயரில் இணையம் வழி பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு, தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை என்ற தலைப்பில் இயங்கலையில் பல்வேறு பயிற்சிகளைத் தமிழ்ப்...

SJK(T) LDG.JENDERATA BHG.3 - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

Image
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020இல் நடைபெற்றது. இப்புத்தாக்கப் போட்டியில் பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா பிரிவு 2 தோட்டத் தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆசிரியர் அர்வினாவின் முயற்சியாலும் பயிற்சியாலும் இப்பள்ளியின் 4 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர். SJK(T) Ldg.Jenderata Bhg.3 menang Pingat Gangsa dalam  International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya மக்கள் ஓசை - 30.07.2020