Posts

Showing posts from March, 2020

SJK(T) LDG.SOON LEE - புதிய கருவள நடுவம் திறப்புவிழா

Image
பேரா, கிரியான் மாவட்டம், சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள கருவள நடுவம் திறப்புவிழா கண்டது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் இந்தக் கருவள நடுவத்தை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.   Majlis Perasmian Pusat Sumber SJK(T) Ldg.Soon Lee telah disempurnakan oleh Sargunan Subramaniam, Pen.Pengarah SJK(T) pada 09.03.2020   தமது திறப்புரையில் பேசுகையில், தாம் பணியாற்றிய பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள கருவள நடுவத்தைத் திறந்து வைப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார். இந்த நூலகம் மிகவும் அழகாகவும் மாணவரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது. மாணவர்கள் விரும்பி வந்து வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வழிவகுக்கும். இன்றைய சூழலுக்கு ஏற்ப புத்தகங்களைத் தவிர்த்து கணினி வழியாக வாசிப்பதையும் பாடங்களைக் கற்பதையும் அதிகம் மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப கணினி மூலை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலத்திற்கு ஏற்ப மாணவர்களைக் கல்வியின்பால் ஈர்க்கும் வகையில் இந்த நடுவத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ள பொறுப்பாசிரியர் சனா காயத்திரிக்க

SJK(T) LDG SUNGAI SAMAK - MSSD 2020 திடல்தடப் போட்டியில் சாதனை

Image
பாகான் டத்தோ மாவட்ட நிலை திடல்தடப் போட்டியில் [KEJOHANAN MSSD BAGAN DATUK] சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான மூன்றாவது பரிசை வெற்றிபெற்றது. SJK(T) LDG.SUNGAI SAMAK, DAERAH BAGAN DATUK MENANG TEMPAT KE-3 KESELURUHAN DALAM KEJOHANAN MSSD TAHUN 2020 கடந்த மார்ச்சு 2-5 , 2020இல் இந்த மாவட்ட நிலை போட்டி சாபாக் பெர்னாம் விளையாட்டரங்கத்தில் நடந்தது. பாகான் டத்தோ மாவட்டதைச் சேர்ந்த தேசிய , சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் இப்போட்டியில் கலந்துகொண்டன. சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் [TEMPAT KE-3 KESELURUHAN] பிடித்தது. இப்பள்ளியின் நிகராளியாக 9 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். வெற்றி மாணவர்கள் விவரம்:- 1.அலீனா – தங்கப் பதக்கம்  [குண்டெறிதல் பெ12] 2.தமயந்தி – தங்கப் பதக்கம்  [நீளம் தாண்டுதல் பெ12] 3.அர்வின் ராவ் – தங்கப் பதக்கம்  [நீளம் தாண்டுதல் ஆ10] 4. வெள்ளிப் பதக்கம் அஞ்சலோட்டம் 4 X 100மீ பெ12 5. வெள்ளிப் பதக்கம்

SJK(T) SAINT MARY'S - 40 கல்வியாளர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டனர்

Image
 காணொலி இணைப்பு  ⏭ கிரியான் மாவட்டம் , பாரிட் புந்தார் , செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் அண்மையில் கருப்பொருள் அடிப்படையில் வகுப்பறை உருமாற்றத் திட்டம் நிகழ்ந்தது. பேரா மாநிலக் கல்வி இயக்குநர் முனைவர் முகமது சுகைமி பின் முகமது அலி அவர்கள் இப்பள்ளியில் 12 உருமாற்ற வகுப்பறைகளையும் அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Lawatan Penanda Arasan ke SJK(T) Saint Mary's, Daerah Kerian, Perak. 40 orang Pensyarah IAB, Pengetua dan Guru Besar yang sedang berkursus TS25 Kohort 5 di IAB Jitra, Kedah membuat lawatan ini. Tuan Ketua PPD Kerian dan Pegawai-pegawai PPD turut mengiringi rombongan ini.   04.03.2020 புதன்கிழமை செயிண்மேரியின் உருமாற்ற வகுப்பறைகளை நேரில் காண்பதற்கு 40 பேர் அடங்கிய கல்வியாளர் குழுவினர் வந்தனர். கிரியான் மாவட்டத் தலைமைக் கல்வி அதிகாரி ஹாஜா செப்பியா இந்த அடைவுக் குறியீட்டுப் பயணத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கெடா , ஜித்ரா அமினுடின் பாக்கி கல்விக் கழகத்தைச் [ INSTITUT AMINUDIN BAKI, JITRA, KEDAH] சேர்ந்

அறிவியல் விழா 2020 - தென்பேரா ஆசிரியர்களுக்கான பட்டறை

Image
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழா இந்த ஆண்டிலும் தொடரவுள்ளது. தென் பேரா வட்டார ஆசிரியர்களுக்கான அறிவியல் விழா விளக்கமளிப்பு மற்றும் பட்டறை 04.03.2020 புதன்கிழமை பிற்பகல் மணி 2:00 - 5:00 வரையில் நடைபெற்றது. சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் நடந்த இந்தப் பட்டறையில் தென்பேரா வட்டாரத்தைச் சேர்ந்த  மொத்தம் 26 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டறையைத் தொடக்கி வைத்தார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிகளும் சாதனைகளும் மென்மேலும் தொடர வேண்டும். அதற்காக, ஆசிரியர்கள் மனம்தளாரமல் தொடர்ந்து மாணவர்களைப் பயிற்றுக்க வேண்டும்; ஊக்கமளித்து உருவாக்க வேண்டும் எனத் தமதுரையில் தெரிவித்தார்.  அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கத்தின் தலைவர் முனைவர் முகம்மது யூனூஸ் யாசின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பட்டறையை வழிநடத்தினார். சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் பழனி சுப்பையா நிகழ்ச்சியில் உடன் கலந்துகொண்டார். பேரா மாநில அறிவியல் விழா ஒர