Posts

Showing posts with the label PERINGKAT SEKOLAH

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

Image
பேரா, கிரியான் மாவட்டம், கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பியர் அறிவகம், உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா கண்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தோட்ட மேலாளர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.   இத்திறப்பு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரியைப் படிநிகர்த்து Pegawai SISC+ திரு.மயூடின் பின் சஹாரி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வகுப்பறையினைப் பள்ளி மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இது போன்ற முயற்சிகள் ஒவ்வொரு பள்ளியிலும் முடுக்கிவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் சிந்தனைத் திறன் தொடர்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை அறிந்து வைத்திருப்பதுடன் அதனைச் சிறந்த முறையில் மாணவருக்குக் கொண்டு சேர்க்க வழிவகை காண வேண்டும் என்றார்.   மாணவரிடையே சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்பில் பல்வேறு வகையான சிந்தனைத் திறன் தொடர்பான நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்ட மேலாளர் திரு.பிரபாகரன் தண்ணீ...

பேரா தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா 2022

Image
கடந்த  பிப்ரவரி 21ஆம் திகதி அனைத்துலகத் தாய்மொழி நாள், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் எளிமையாக ஆனால் தமிழ்மொழி உணர்வோடு கொண்டாடப்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கல்வி அமைச்சு வழங்கியுள்ள தரச்செயல்முறை விதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தாய்மொழி நாள் விழா நடத்தப்பட்டது. தாய்மொழி நாள் விழா 2022 படங்களையும் காணொலிகளையும் கீழே காணலாம்.  புனித பிலோமினா தமிழ்ப்பள்ளி, ஈப்போ சங்காட் தமிழ்ப்பள்ளி, பத்து காஜா செயின்ட் தெரேசா தமிழ்ப்பள்ளி, தைப்பிங் மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி

SJK(T) MAHA GANESA VIDYASALAI - 2021 ஆம் ஆண்டின் செயல் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

Image
மகா கணேசா வித்யாசாலை, மஞ்சோங் மாவட்டத்தில் மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாகும். தொடர்ச்சியாகப் பல கல்வித் திட்டங்களும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளும் போட்டிகளும் சிறப்பாக இப்பள்ளியில் நடந்து வருகின்றன. மேலும், மாவட்டம், மாநிலம், தேசிய நிலை மட்டுமின்றி அனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டத்தக்க வெற்றிகளை இப்பள்ளி மாணவர்கள் அடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியோடு மாணவர் உருவாக்கத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படும் இப்பாள்ளியின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள். பள்ளிக்கு தலைமைப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி அவர்களுக்கும் நல்வாழ்த்துகள். தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி  இப்பள்ளியின் வெற்றிக்கதைகளும் சாதனைகளும் மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளதைக் கீழே காணலாம். Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும் முடிந்த 2021ஆம் ஆண்டில் மகா கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற செயல்நடவடிக்கைகள் கீழே உள்ள மின்னூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும்

SJK(T) KG.JEBONG LAMA - காரம் குறையாத கடுகுப் பள்ளியின் சாதனைகள்

Image
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் செயல்படும் கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி குறைந்த மாணவர் கொண்ட (SKM) பள்ளியாகும். கடுகுக் குறைந்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஒப்ப சிறு பள்ளியாக இருந்தாலும் கீர்த்தி மிகுந்த பள்ளியாக மிளிர்கின்றது. 2021ஆம் ஆண்டு முழுவதும் இப்பள்ளி பல சிறப்பான நடவடிக்கைளையும் மாணவர் வளப் பணிகளையும் நடத்தியுள்ளது. மேலும், மாவாட்ட மற்றும் மாநில நிலையில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பெயர் பொறித்துள்ளது. கல்விப் பணியோடு மாணவர் உருவாக்கமும் இப்பள்ளியில் நன்முறையில் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கி.சந்திரிகா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தில் மிகவும் துடிப்பாகச் செயல்படும் பள்ளியின் ஆசிரியர்களையும் நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும். தலைமையாசிரியர் திருமதி கி.சந்திரிகா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மின்னும் நடசந்திரங்களாக உருவாக்கியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிறப்பான அடைவுகளையும் சாதனைகளையும் தொகுத்து  '2021இன் ...

SJK(T) METHODIST, MALIM NAWAR - தீபாவளி & சிறுவர் நாள் கொண்டாட்டம்

Image
🎥 காணொலி இணைப்பு 9-12-2021ஆம் மாலிம் நாவார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் சிறுவர் நாளோடு கோலாகல தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குறுகிய காலத்திலேயே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இக்கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட கண்கவர் ஆடல் பாடலுடன் ஆடை அலங்காரப் படைப்புகளும் இடப்பெற்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் கோரணி பெருந்தொற்றின் காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. பல மாதங்களாக இல்லிருப்புக் கற்றல்  கற்பித்தலிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலானப் போட்டிகளில் சிறப்பாக பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும்  தலைமையாசிரியை திருமதி லோகேஸ்வரி  பாராட்டுகளைத் தெரிவித்தார். குறுகியக் காலத்தில் அப்போட்டிகளில் சிறப்பான அடைவுகளைப் பதிவு செய்ய மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் பங்களிப்பிற்கான நற்சான்றிதழ்கள் வழங்கும் அங்கமும் இந்நாளில் சிறப்பாக நடந்தேறியது. சிறுவர் நாளுக்காக உணவும் பன...

SJK(T) LADANG KATI - மறக்கப்பட்ட தமிழர் உணவுமுறை அறிமுக நிகழ்ச்சி

Image
SJK(T) Ladang Kati, Kuala Kangsar, Perak menganjurkan pameran Masakan & Makanan Tradisional Tamil கோரணி பெருந்தொற்றினால் கடந்த ஆறு மாதங்களாக இல்லிருப்புக் கற்றலை மேற்கொண்ட மாணவர்கள் , 22ஆம் திகதி நவம்பர் மாதத்திலிருந்து தங்களின் இயல்பான பள்ளி வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இவ்வேளையில் மாணவர்களுக்குக் கற்றலின்பால் ஆர்வத்தைத் தூண்டவும் கற்பிக்கும் திறன்களைக் கைவரப்பெறவும் கல்வி அமைச்சு பல்வகை கற்றல் அணுகுமுறைகளை வலியுறுத்தி வருகின்றது. அவ்வணுகுமுறைகளுள் ஒன்றான செயல்முறைக் கற்றல் மாணவர்கள் உய்த்துணர்ந்து ஒன்றைக் கற்கவும் நாடிக்கற்றலைத் தூண்டவும் வழிவகுக்கும் மிகச் சிறந்த அணுகுமுறையாகும்.  இந்தச் செயல்முறை கற்றலை எவ்வாறு நனிச்சிறப்பாக மாணவரிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக , அண்மையில் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கை அமைந்திருந்தது. ஆசிரியை குமாரி தனலட்சுமி குப்புசாமி அவர்களின் வழிகாட்டலில் ஆண்டு 4 , ஆண்டு 5 மற்றும் ஆண்டு 6 மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில்   தமிழர்களால் மறக்கப்பட்ட , மறுக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள் எனும் கருப்பொருளோடு ...