Posts

Showing posts from September, 2020

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Image
கடந்த 17.09.2020 முதல் 19.09.2020 இந்தோனேசியாவில் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி [i3F Indonesia Invention Innovation Festival 2020] நடந்தது. பேரா, மஞ்சோங் மாவட்டம், சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஐவர் இந்த அனைத்துலகப் போட்டியில் மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளனர். Kumpulan Murid SJKT Ldg.Sungai Wangi II , Sitiawan menang Pingat Perak & Best Presentation Award dalam Pertandingan i3F Indonesia Invention Innovation Festival 2020 yang berlangsung atas talian pada 17.09.2020 hingga 19.09.2020. இயங்லையில் நடந்த இப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் [SILVER AWARD]  சிறந்த படைப்பாற்றலுக்கான [BEST PRESENTATION AWARD] விருதையும் ஒருசேர வென்று சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவாகியுள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் திறன், மொழி ஆளுமை என புதிய பரிணாமத்தில் 3 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. இணையம் வழி புதிய கோணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் [THE FIRST VIRTUAL INVENTION EXHIBITION]  முற்றிலும் புதுமையான இப்போட்டியில் மல

SJK(T) Daerah LMS - கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை

Image
லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 12.09.2020ஆம் நாள் ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை [Bengkel Perkongsian Pintar PdPc SJK(T) Daerah Larut Matang dan Selama] சிறப்புடன் நடந்தது.   லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் உள்ள 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 32 தமிழ்மொழி ஆசிரியர்கள் மற்றும் 14 தலைமையாசிரியர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர். பட்டறையில் நடைபெற்ற பகிர்வுகளின் விவரம்:-   1.திட்ட அடிப்படையிலான கற்றல் [Project Based Learning] பயிற்றுநர் : திரு.முத்தரசன் செல்லையா,  லாருட் மாத்தாங் செலாமா மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரி   2.தலைகீழ் வகுப்பு [Flipped Classroom] பயிற்றுநர் ஆசிரியர் திரு.சிவபாலன் திருச்செல்வம்,  இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்   3.நேரலைப் பயிற்சித்தாள் [Live Worksheets] பயிற்றுநர் : ஆசிரியர் திருமதி ஶ்ரீதேவி,  தைப்பிங் இரப்பர் தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                              லாருட் மாத்தாங் செலாமா மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஆ

SJK(T) ST.THERESA'S CONVENT - ஶ்ரீலங்கா புத்தாக்கப் போட்டியில் இரட்டைத் தங்கம் வென்று சாதனை

Image
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இலங்கை அனைத்துலகப் புத்தாக்க மற்றும் வடிவமைப்பு போட்டி 2020-இல்  இரட்டைத் தங்கப்பதகங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். Murid-murid SJK(T) St.Theresa's Convent menang 2 Pingat Emas dalam Pertandingan International Invention and Innovation Competition Sri Lanka 2020 yang diadakan atas talian. இணையம் வழியாக இப்போட்டியில் கலந்துகொண்டு செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் : குழு 1 தலைப்பு :தீடீர் வெள்ள எச்சரிக்கை கருவி (Flash Flood Alarm) 1.தமிழ்ச்செல்வன் கனகநாதன், 2.தான்யலெட்சுமி விக்னேஸ்வரன்,  3.மேத்ரா கணேசன்  4.தயகுமரன் விக்னேஸ்வரன் குழு 2 தலைப்பு : தூக்கம் மற்றும் சோர்வைப் போக்கும் மூலிகை நிவாரணி (Anti-Drowsy Herbal remedy) 1.பிரவின்ராஜ் லோகநாதன், 2.கவினா ஸ்ரீ சங்கர் 3.அவினாஷ் மனோகரன் 4.பூவன் சுகுமாறன் தங்களின் புத்தாக்கம் மூலம் அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்துவரும் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி ம

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

Image
பேரா, கிரியான் மாவட்டம், கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ‘ தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு செய்யப்பட்டது. கடந்த 12.09.2020ஆம் நாள் காரிக்கிழமை நடந்த இந்த விழாவில் மலேசியத் தமிழறிஞர் முத்தமிழ் முரசு இரா.திருமாவளவனார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளி இதழை வெளியீடு செய்தார்.   பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோவி.சந்திரன் தலைமையில் நடந்த இந்தச் சிறப்புமிகு நிகழ்ச்சியில் கூலா தோட்ட மேலாளர் த.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் பெ.ஆ.சங்கத்தினர், வாரியக் குழுவினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டனர்.   'தேன்சிட்டு' மாணவர் இதழை வாசிக்க கீழே படத்தைத் சொடுக்கவும். மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதற்கொப்ப சிறு பள்ளியானாலும் சீரிய பணியை முன்னெடுத்து,  மாணவர்களின் நன்மை கருதி சிறப்பானதொரு இதழை வெளியிட்டுள்ள கூலா தமிழ்ப்பள்ளி நிருவாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகட்டும். கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்

SJK(T) LDG.SUNGAI BOGAK - Wordwall & Edpuzzle கூகிள் வகுப்பறையில் தமிழ்மொழிப் பயிற்சிகள்

Image
பேரா, கிரியான் மாவட்டம், சுங்கை போகாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2  தமிழ்மொழி மின்னியல் பயிற்சிகளை உருவாக்கி தமது கூகிள் வகுப்பறையில் [Google Classroom] வழங்கியுள்ளார். எட்படல் (edpuzzle) பயிற்றுராகத் தகுதி பெற்ற இவர் இந்தச் செயலியை மற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டு 1 தமிழ்மொழிக் கலைத்திட்டத்தில் உள்ள அனைத்துத் திறன்களையும், ஆண்டு 2 தமிழ்மொழி கலைத்திட்டத்தின் இலக்கணத் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு முழுமையான மின்னியல் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். Wordwall & Edpuzzle ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி பயிற்சிகள் அனைத்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தம்முடைய கூகிள் வகுப்பறையில்  ஒருங்கிணைத்துள்ளார்.  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2 மாணவர்கள் இந்தக் கூகிள் வகுப்பறையில் இணைந்து பயன்பெறலாம். ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் உருவாக்கியுள்ள கூகிள் வகுப்பறைக்கான கடவுச்சொல் பின்வருமாறு:- ஆண்டு 1 :  nbvs3kt ஆண்டு 2 :  pzdzs4m

SJK(T) ST.THERESA'S CONVENT - DIIID JOHOR 2020 புத்தாக்கப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

Image
கடந்த 27.08.2020ஆம் நாள் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 3வது அனைத்துலக அளவிலான இலக்கவியல் புத்தாக்க வடிவமைப்பு போட்டியில் (3rd Digitalized International Invention, Innovation and Design UITM Johor 2020) தைப்பிங், செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரு புத்தாக்கப் படைப்புகளை படைத்து,  தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று வெற்றி வாகை சூடி சாதனைப் படைத்துள்ளனர்.  Muri-Murid SJK(T) St.Theresas's, Taiping, Daerah LMS telah menang Pingat Emas & Pingat Gangsa dalam Pertandingan 3rd Digitalized International Invention, Innovation and Design UITM Johor 2020 Peringkat Antarabangsa Pada 27.08.2020 முதல் குழுவினர் வாகனம் ஓட்டும் தருணத்தில் ஏற்படும் சோர்வு நிலையைப் போக்க மூலிகை வழியில் அமைந்த நிவாரண யுத்தியை மாணவர்கள் பிரவின் லோகநாதன், பூவன் சுகுமாறன், கவினா ஸ்ரீ சங்கர் மற்றும் அவினாஷ் மனோகரன் ஆகியோர் படைத்தனர். இவர்களின் படைப்பு சிறந்த படைப்பாக அமைந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர். இரண்டவது குழுவில் மாணவர்கள் தமிழ்ச்செல்வன் கனகநாதன், தான்யலெட்சுமி விக்