Posts

Showing posts from April, 2018

கிரியான் தமிழ்ப்பள்ளிகளின் திடல்தடப் போட்டி

Image
28.04.2018 சனிக்கிழமையன்று கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல்தடப் போட்டி 2018 சிறப்புற நடந்தேறியது. நிபோங் திபால் , திரான்ஸ் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் திடலில் இப்போட்டி நடந்தது.    கிரியான் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 14 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 158 மாணவர்களும் 80 ஆசிரியர்களும் உள்பட ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டனர்.   கிரியான் மாவட்டக் கல்வி அதிகாரி துவான் ஹஜி அப்துல் வாஹிட் பின் ரம்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இப்போட்டியை அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார்.   அவர்தம் உரையில் , இந்தப் போட்டியை வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்த தலைமையாசிரியர் மன்றத்தையும் அதன் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலனையும் பாராட்டினார். மேலும் , தமிழ்ப்பள்ளிகள் சிறந்த முறையில் முயற்சி மேற்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது பெருமையளிப்பதாகக் கூறினார். நிறைவு விழாவில் கலந்துகொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் , பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் திடல்தடப் போட்டியை நடத்திய முதல் மாவ

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - மலாய் மேடை நாடகப் போட்டியில் ஆறுதல் பரிசு

Image
தேசிய நிலையில் நடைபெற்ற மலாய் மேடை நாடகப் போட்டியில் கலந்துகொண்டு சுங்கை சிப்புட் , மகாத்மா காந்தி கலாசாலைதமிழ்ப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இப்பள்ளிக்கு RM1000.00   ( ஆயிரம் வெள்ளி ) பரிசாகக் கிடைத்தது. மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த 21.4.2018 சனிக்கிழமை கோலாலம்பூர் கலை மண்டபத்தில் ( Kompleks Budaya Kuala Lumpur ) பரிசளிப்பு விழா நடந்தது. நாடு தழுவிய அளவில் இப்போட்டியில் கலந்துகொண்ட தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சாந்தகுமாரி, ஆசிரியர்கள் சுரேன் ராவ், காளிதாஸ், திருமதி அஸிசா பேகன், திருமதி.கஸ்தூரி, திருமதி.தேன்மொழி, திருமதி.கவிதா, செல்வி சங்கீதா ஆகியோர் இந்தப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே மேடை நாடகத் திறனை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் மலேசிய மேடை நாடகக் கலைஞர் எஸ்.டி.பாலா மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் இந்த மலாய் நாடகப் போட்டியை நடத்தி வருகின்றார். மாநில நிலையில் இப

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

Image
22.04.2018 ஞாயிற்றுக்கிழமை கடாரத்திலுள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய நிலை செந்தமிழ் விழா போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். மலேசியக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்தத் தேசிய நிலையிலான போட்டியில் மொத்தம் 10 மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்மொழி சார்ந்த மொத்தம் 13 போட்டிகளில் இந்தச் செந்தமிழ் விழாவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளி , தேசியப் பள்ளி , இடைநிலைப் பள்ளி , படிவம் 6 என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மாநில நிலையில் முதலாம் , இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற மாணவர்கள் இப்பொழுது தேசிய நிலையில் தங்கள் தமிழ்மொழித் திறனையும் ஆற்றலையும் வெளிபடுத்தவுள்ளனர். பேரா மாநிலத்தின் நிகராளிகளாக 30 மாணவர்கள் கலந்துகொள்ளும் வேளையில் அவர்களோடு மாநிலக் கல்வித் திணைக்களத்தின் சார்பில் 2 உயர் அதிகாரிகளும் 6 ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள். தேசிய நிலை செந்தமிழ் விழாவில் கலந்துகொள்ளும் பேரா மாநிலப் போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:- * தமிழ்ப்பள்ளி