Posts

Showing posts with the label DAERAH KINTA UTARA

SJK(T) KLEBANG - PdP PITCHING போட்டியில் ஆசிரியை காமினி முதல் நிலை வெற்றி

Image
பேரா, வடகிந்தா மாவட்ட நிலையில் நடைபெற்ற 3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கப் போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி காமினி கங்காதரன் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வடகிந்தா மாவட்ட நிகராளியாக இவர் மாநில நிலை போட்டியில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் பெயர் / Nama Sekolah:  கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT KLEBANG, CHEMOR, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan :  3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கம் 3 MINUTES PdP PITCHING நிலை / Peringkat:  மாவட்ட நிலை / PERINGKAT DAERAH அடைவு / Pencapaian:  முதல் நிலை / TEMPAT PERTAMA நாள் / Tarikh:  27 Ogos 2022 ஏற்பாட்டாளர் / Penganjur:  மலேசியக் கல்வி அமைச்சு  KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA தலைமையாசிரியர் / Nama Guru Besar:  திருமதி பத்மினி துரைசிங்கம்  PN. PATHMANI DORAISINGGAM சாதனை ஆசிரியர் / Nama Guru:  திருமதி காமினி கங்காதரன்  KAAMANI A/P GANGATHARAN

SJK(T) CHETTIARS, IPOH - INTOC அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம்

Image
பள்ளி- பெயர் / Nama Sekolah: செட்டியார் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJK(TAMIL) CHETTIARS, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan: INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவுநிலை / Pencapaian: தங்கப் பதக்கம் / GOLD AWARD நாள் /  Tarikh: 28 MEI 2022 ஏற்பாட்டாளர் / Penganjur: INTOC - GLOBAL INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY தலைமையாசிரியர் / Nama Guru Besar: PN. PACHAYAMMAL   A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat: திருமதி செல்வி முருகையா PN. CHELVI   A/P MURUGAYYA சாதனை மாணவர்கள் / M urid Terlibat: 1. லோகேந்திரன் சிவக்குமார் / LOHENDRAA A/L SIVAKUMAR 2. சர்வின் விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN 3. அமரேஸ் / மகேஸ்வரன் / AMARESS A/L MAGESWAREN 4. தீபிகா விஜயராமன் / THIPIKAA A/P VIJAYA RAMAN

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி

Image
18.12.2021 ஆம் நாள் அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இரட்டை வெற்றியைக் கண்டு மலேசியப் போட்டியாளர்கள் மாபெரும் சாதனை படைத்தனர். Adik Johnnes Abisya Edwin (SJKT Perak Sangetha Sabah, Ipoh) dinobatkan sebagai Johan dan Adik Darshini Kumaran (SJKT Ldg.Batak Rabit, Teluk Intan) menjadi Naib Johan dalam Pertandingan Pidato bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Antarabangsa pada 18.12.2021 வணக்கம் மலேசியா நிறுவனம் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர் மையமும் இணைந்து 7ஆவது ஆண்டாக நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிப் போட்டி இயங்கலை வாயிலாக நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த 2 போட்டியாளர், இலங்கையிலிருந்து ஒருவர், டென்மார்க் நாட்டிலிருந்து ஒருவர் என 4 பேர் இறுதிப் போட்டியில் களமிறங்கினர். அமைதியான உலகம் வேண்டும். அதற்கு என் உடனடி ஆணை வேண்டாம் ஆயுதம், வேண்டாம் கைப்பேசி, வேண்டாம் மது, வேண்டாம் நகரமயம் எனும் 4 நிலைப்பாடுகளில் ஒவ்வொரு போட்டியாளரும் பேசினர். வேண்டாம் நகரமயம் என்ற நிலைப்பாட்டில் மிகச் சிறப்பாகப் பேசியதோடு மிக இலாவ...

அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு

Image
வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசியா, இலங்கை, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். இவர்களுள் மலேசியாவின் நிகராளிகள் இருவர். அந்த இருவருமே பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . Adik Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah,Ipoh dan Adik Darshini Kumaran dari SJK(T) Ladang Batak Rabit, Teluk Intan telah mara ke Pusingan Akhir Pertandingan Pidato Manavar Muzhakkam Peringkat Antarabangsa mewakili Malaysia. ஒருவர், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவர் ஜோனஸ் அபிசியா எட்வின். மற்றொரு மாணவி பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தர்சினி குமரன். இவர்கள் இருவரும் தங்களின் பள்ளிக்கு மட்டுமின்றி பேரா மாநிலத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றால் மிகையாகாது. இந்தச் சாதனை மாணவர்கள் இருவருக்கும் அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் மனமா...

SJK(T) PERAK SANGGETHA SABAH & SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் 2021இல் பேரா மாநிலத்திற்கு இரட்டை வெற்றி

Image
மாணவர் முழக்கம் 2021 மாபெரும் இறுதிச் சுற்றில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் இடத்தையும் இரண்டாம் பரிசையும் வாகை சூடி இரட்டை வெற்றியைக் கண்டுள்ளனர். Murid Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah, Daerah Kinta Utara menjadi Johan dan Adik Darshini Kumaran dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak menjadi Naib Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 23.10.2021 23.10.2021ஆம் நாள் நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் முதல் நிலையில் வெற்றிபெற்றார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் முதல் பரிசான RM1000.00 (ஆயிரம் வெள்ளி) தொகையும் நற்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. நான் கல்வி அமைச்சரானால் கலைப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் திறம்பட பேசியதோடு, பொதுமக்கள் மற்றும் நடுவர்களின் வினாக்களுக்கு இலாவகமாக மறுமொழி பேசி ஜோனஸ் அபிசியா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அதே வேளையில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளர் பாத்தாக் ராபிட் ...

SJK(T) PERAK SANGGETHA SABAH - 'சுடர் வானிலே' மாணவர் மின்னிதழ் வெளியீடு [காணொலி இணைப்பு]

Image
வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் மாணவர் மின்னிதழ் வெளியீடு கண்டுள்ளது.  'சுடர் வானிலே' எனும் பெயரைக் கொண்ட இந்த மாணவர் மின்னிதழில் மாணவர்களின் படைப்புகளும் கைவண்ணங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாணவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன. படத்தைச் சொடுக்கி மின்னிதழைக் காண வும் இப்பள்ளியின் ஆசிரியர் இலாவண்யா மோகன்  பொறுப்பாசிரியராக இருந்து இந்த மின்னிதழை மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்புச் செய்துள்ளார். அவருடைய முயற்சியும் முனைப்பும் பாராட்டுக்க்குரியது. பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சந்திரிகா அப்பு இவ்விதழில் வழங்கியுள்ள வாழ்த்துரையில், "மாணவர்கள் நலன்கருதி வெளியாகும் 'சுடர் வானிலே' அனைத்து மாணவர்களின் கைகளிலும் தவழ்ந்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும் பணியில் நிச்சயம் வெற்றிதனை ஈட்டித்தரும் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு" எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாசிப்பிற்கும் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் சுடர் வானிலே மின்னிதழை வெளியிட்டுள்ள பேரா சங்கீத சபா ...

KARNIVAL BAHASA MELAYU SJK(C) & SJK(T) - தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மகத்தான சாதனை

Image
பேரா மாநில நிலையில் நடைபெற்று முடிந்த தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டிகளில் அனைத்துப் பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தனியாள் நாடகம், பேச்சுப் போட்டி, மலாய் எழுத்துப் போட்டி என மூன்று வகையான போட்டிகள் நடைபெற்றன. இம்மூன்றிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். தனியாள் நாடகப் போட்டியில் மலாய்மொழியில் கதைக்கூறி தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தெய்வான்ஷா திருஞானசுந்தர் முதல் பரிசை வென்றார். மலாய்மொழிப் பேச்சுப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி சாருமதி திருச்செல்வன் முதல் இடத்தை வெற்றி கண்டார். மலாய் எழுத்துப் போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி மாணவி ரோஷிமி பன்னீர்செல்வம் முதலாவது நிலையில் வெற்றி பெற்றார்.  மூன்று போட்டிகளிலும் தமிழ்ப்பள்ளி மானவர்களே வெற்றி கண்டிருப்பது இந்தத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டி வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனப்பள்ளி மாணவர்களின் ஆதிக்...

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  செட்டியார் தமிழ்ப்பள்ளி,ஈப்போ, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT CHETTIARS, IPOH, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan:  பன்னாட்டுப் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கக் கண்காட்சி INTERNATIONAL  CREATIVITY, INNOVATION AND INVENTION PROMOTION [OCIIP] NIGERIA 2021 புத்தாக்கம் / Inovasi: மூலிகைக் கைத்தூய்மி  / AYUR SANITIZER LOTION நிலை / Peringkat:  அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian:  1.தங்கப் பதக்கம் / GOLD  AWARD 2.சிறப்பு விருது / SPECIAL AWARD நாள் / Tarikh:  23-09-2021 ஏற்பாட்டாளர் / Penganjur:  புத்தாக்கம் மற்றும் புனைவாக்கச் சங்கம்,நைஜீரியா ORGANISATION FOR CREATIVITY, INNOVATION AND INVENTION PROMOTION [OCCIP] NIGERIA தலைமையாசிரியர் / Guru Besar:  திருமதி.பச்சையம்மாள் இரெங்கசாமி PUAN PACHAYAMMAL A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat:  திருமதி செல்வி முருகையா PUAN SELVI A/P MURUGAIYA சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1. சர்விகா விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN 2. லோகேந...

மாணவர் முழக்கம் 2021 - பேராவின் 2 மாணவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்

Image
மாணவர் முழக்கம் 2021 இறுதிச் சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியா மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 அரையிறுதிப் போட்டி  9.10.2021ஆம் நாள் நடந்து முடிந்தது. இதில், 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள் களம் இறங்கினர். போட்டியாளர்களின் படைப்புத் திறனை மதிப்பீடு செய்த நடுவர் குழுவினர் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்களைத் தெரிவு செய்தனர். கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தர்சினி குமரன் மற்றும் வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் ஆகிய 2 மாணவர்கள் மிகச் சிறப்பான படைப்பினை வழங்கி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.  இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி சாதனைச் செல்வங்களின் விவரங்களைக் கீழே காணலாம். 2 orang murid dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak dan SJK(T) Perak Sangetha Sabah, Daerah Kinta Utara layak ke Pertandingan Akhir Pidato Manavar Muzhakkam Peringkat K...

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 5 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 போட்டியில்  பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள்  அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டிக்கு மலேசியாவின் நிகராளிகளைத் தேடும் இந்தப் பயணத்தில் பேராவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இணைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். மாணவர் முழக்கம் 2021இல் தற்போது காலிறுதிச் சுற்றுகள்  4 மண்டல வாரியாக  நடைபெறுகின்றன. 14.09.2021ஆம் நாள் நடந்த பேரா மற்றும் பகாங் மண்டலத்திற்கான காலிறுதிச் சுற்றில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 6 மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பேசி அதிக புள்ளிகளைப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்ற வேளையில் 5 மாணவர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிச் சுற்றுகுத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர் விவரங்களைக் கீழே காணலாம். இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏற்கனவே நடந்து முடிந்த தகுதிச் சுற்றில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர் ...