Posts

Showing posts with the label LAWATAN

SJK(T) KERUH – தமிழ்ப்பள்ளிக்குத் தாய்லாந்து ஆசிரியர் சிறப்பு வருகை

Image
மேல் பேரா மாவட்டம் , பெங்காலான் ஊலு , குரோ தமிழ்ப்பள்ளிக்கு ஆசிரியர் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் தாய்லாந்து ஆசிரியர் ஒருவர் அதிகாரப்படியாக வருகை புரிந்தார். மலேசிய நாட்டின் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமும் தாய்லாந்து நாட்டின் ஆசிரியர் சம்மேளனமும் இணைந்து இந்த ஆசிரியர் பரிமாற்றுத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. குரோ தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் தாய்லாந்து ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவ் குரோ தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.கி.செல்வராணி அவர்களின் இசைவுடன் இப்பள்ளி ஆசிரியர் செல்வி.சீத்தாலட்சுமி பாலு மேற்பார்வையில் தாய்லாந்து ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவ் மலேசியாவில் தங்கி இருந்தார். இதே போல தாய்லாந்திலிருந்து 5 ஆசிரியர்கள் மலேசியா வந்திருந்தனர். 5 orang guru dari Thailand berkunjung ke Malaysia di bawah Program Pertukaran Guru Antara NUTP dan The Theachers Council Of Thailand. Seorang guru Cik.Pornsawan Kieaw-On@Cha ditempatkan di SJK(T) Keroh, Daerah Hulu Perak. Beliau mengikuti berbagai aktiviti pendidikan bermula dari 4 hingga 18 Oktober 2019. ...

SJK(T) BANDAR SRI SENDAYAN - எதிர்காலத் தமிழ்ப்பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம்

Image
நெகிரி செம்பிலான், பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளிக்குப் பேரா, பத்தாங் பாடாங் மாவட்ட ஆசிரியர் குழுவினர் அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டனர். பத்தாங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. 03.10.2019 வியாழக்கிழமை இந்த ஒரு நாள் பயணம் நடைபெற்றது. பள்ளியின் தோற்றுநர் டத்தோ யோகேந்திரன் நாராயணசாமி, தலைமையாசிரியர் திருமதி சாந்தி அச்சுதன் இருவருடன் பயணக் குழுவினர் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள 19 தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் துணைத் தலைமை ஆசிரியர்களுமாக மொத்தம் 38 பேர் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்திலிருந்து அமைப்பாளர் திரு,சுப.சற்குணன் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் சீனப்பள்ளி கண்காணிப்பாளர் திருமதி.சாவ் வேய் திங் ஆகிய இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மலேசியாவில் மிக நவினமான பள்ளியாகவும் 'எதிர்காலப் பள்ளி' (FUTURE SCHOOL) என்ற புகழைப் பெற்ற பள்ளியாகவும் திகழும் பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியின...

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

Image
27.08.2019 –ஆம் நாள் பேரா, பத்தாங்  பாடாங் மாவ ட் டம், தேசிய வகை கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளிக்கு இந்திய கல்வியாளர் திட்டத்தின் கீழ் அறுவர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து அதிகாரப்படியான வருகை மேற்கொண்டனர். இந்தியா மஹாராஷ்டிரா, பெங்களூரு  மற்றும் குஜராத் மாநிலங்களைப் பிரதிநிதித்து இக்கல்வியாளர்கள் வந்திருந்தனர். வருகை புரிந்த பேராசிரியர், பள்ளியின் முதல்வர்,  அனைத்துலக கணித ஆசிரியர், இந்திய அரசாங்க நிகராளி, பொருளக மற்றும் காப்புறுதிச் சேவையாளர்கள்  அடங்கிய இந்தக் குழுவினரைப்   பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன், துணைத்தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.  மலேசியாவில் தொடக்கப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிந்து கொள்ள வந்தவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள் விளக்கப்பட்டன. மேலும் அவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறைகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்களைப் பாலர் பள்ளி ஆசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்களும் அளித்தனர். அவர்கள் மாணவர...

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI : மாநில அரசாங்கக் கட்டடத்திற்கு மாணவர்கள் வருகை

Image
தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்விக் கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்க ஆசிரியர்களின் சேவையை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் பாராட்டினார். சிறந்த நிலையில் உருவாக்கப்பட்டு வரும் மாணவர்கள் பொது அறிவு ஆற்றல் உள்ளவர்களாகவும் விளங்கச் செய்வதின் வழி அது அவர்களின் திறமை மேலும் வலுப்படுத்தும் என்றார். மாநில அரசாங்க செயலகத்திற்கு வருகை புரிந்த சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் படிக்க..

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - இந்தியத் தூதரின் சிறப்பு வருகை

Image
“இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும் பெருமை அடைந்தேன். இந்த மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளிக்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக உதவிகள் வழங்கப்படும்” என கடந்த புதன்கிழமை அக்டோபர் 17-ஆம் தேதி இப்பள்ளிக்கு அதிகாரபூர்வ சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுள்  குமார் தெரிவித்தார். இந்தியத் தூதருடன் தோ புவான் உமா சம்பந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்   மேலும் படிக்க..

SJK(TAMIL) TAPAH - உருமாற்றுப் பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம்

Image
கடந்த 09.06.2018 சனிக்கிழமையன்று சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் பேரா, தாப்பா உருமாற்றுத் தமிழ்ப்பள்ளிக்கு (Sekolah Transformasi - TS25 Kohort 2)  அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை புரிந்தனர். சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி, பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி, நைகல் கார்டன் தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் உள்பட மொத்தம் 40 ஆசிரியர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். மாலை மணி 2:30 தொடங்கி 6:00 வரையில் அவர்கள் தாப்பா தமிழ்ப்பள்ளியில் நேரத்தைச் செலவிட்டு நல்ல பயனைப் பெற்றனர். தாப்பா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஐயை வனஜா, துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வருகை புரிந்த சிலாங்கூர்  மாநில ஆசிரியர்களை மகிழ்வோடு வரவேற்று வாழை இலை போட்டு மதிய உணவு விருந்தோம்பல் செய்தார்கள். தப்பா தமிழ்ப்பள்ளியின் சிறப்புகள் பற்றியும் பள்ளியின் சிறப்பான அடைவுகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உருமாற்றுப் பற்றி, 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை, கற்றல் எளிமையாக்கல் ஆகியவை குறித்து பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்...