Posts

Showing posts from May, 2018

கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தாக்கச் சாதனை

Image
பேரா , கிரியான் மாவட்டத்தில் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டி (PERTANDINGAN GURU INOVATIF 2018) நடைபெற்றது . இந்தப் போட்டியில் கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்   கலந்துகொண்டு குழு முறையில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர் . வெற்றிபெற்ற ஆசிரியர்களும் அவர்களின் தலைமையாசிரியர்களும் மே 30 & 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டியில் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி , சுங்கை போகா தமிழ்ப்பள்ளி மற்றும் களும்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி   ஆசிரியர்கள்   தங்களின் புத்தாக்கத்தைக் காட்சிப்படுத்தினர் .  மெதுபயில் மாணவர்களுகான ‘ மகிழறிவியல் ’ எனும் விளையாட்டு உத்தியினை அறிவியல் பாடத்தில் பயன்படுத்தி ஆறுமுகம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான குமாரி . பரிமளம் பலராமன் , குமாரி துர்கா தேவி சவுந்தர ராஜன் , திரு . பிரகலாதன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டைப் பெற்றனர் . இந்த உத்தி முறையின் வழி அறிவியல் பாடத்தில் மெது பயில் மாணவர்களின் ஆர்வத்தை த் தூண்டுவதுடன்   அவர்களின் உயர

SJKT MENGLEMBU - பண்புத் தளிர்கள் நிகழ்ச்சி (காணொலி இணைப்பு)

Image
மாணவர்களிடையே நற்பண்புகளையும் மாந்த நேயத்தையும் வளர்க்கும் வகையில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் ‘ பண்புத் தளிர்கள் ’ என்னும் சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 27.05.2018 ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 170 மாணவர்களும் 120 பெற்றோர்களும் , ஆசிரியர்களும் கலந்துகொண்டனர் என்பது மேலுமொரு சிறப்பாகும். மாண்புமிகு சிவக்குமார் பரிசு வழங்குகிறார் நற்பண்புகளின் மேன்மையையும் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் பல நடடிக்கைகள் , போட்டிகளை உள்ளடக்கி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவர்களின் உள்ளத்தைக் கவரும் வகையில் அமைந்தது. மேலும் , வந்திருந்த பெற்றோர்களுக்குத் தனியாக விழிப்புணர்வு உரை , கலந்துரையாடல் எனச் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேரா சத்திய சாயிபாபா மன்றத்தின் கல்விக்குழு இந்நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்தியது. அதன் ஒருங்கிணைப்பாளர் இராமகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகை மேற்கொண்ட பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் அவர்கள் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். இந்த அருமையான

முகமை அமைப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்குப் பிரியாவிடை

Image
மலேசியக் கல்வி அமைச்சில், தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்ற சு.பாஸ்கரன் அவர்களுக்குப் பேரா மாநில அளவில் பிரியாவிடை நல்கப்பட்டது. கடந்த 24.05.2018 வியாழக்கிழமை, ஈப்போ எக்செல்சியர் தங்கும் விடுதியில் அவருக்குப் பாராட்டு நிகழ்ச்சி சிறப்புடன் நிகழ்ந்தது. கடந்த 40 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளராகவும் பின்னர் ஓய்வு பெறும் முன்னர் மலேசியக் கல்வி அமைச்சில் தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி தம்முடைய அறுபதாவது வயதில் அவர் பணி ஓய்வு பெற்றார். நல்ல தமிழுணர்வும் தமிழ் உள்ளமும் கொண்ட சு.பாஸ்கரன் கல்வி அமைச்சில் மட்டும் 12 ஆண்டுகள் பணியற்றியுள்ளார். தம்முடைய பணிக்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் தனிக்கவனமும் அக்கறையும் காட்டியவர்.  கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள்,  ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது இயக்கங்கள், தலைவர்கள் என எல்லாத் தரப்பினரிடமும் சுமுகமான உறவைப் பாராட்டி அன்புடன் பழகியவர் இவர். மேலும், உயர்ந்த பதவியில்

பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகப் பொதுக்கூட்டம்

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் 26ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 24.05.2018 வியாழக்கிழமையன்று ஈப்போ எக்செல்சியல் விடுதியில் நிகழ்ந்தது. *பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ மாட் வாசிம் பின் இட்ரிஸ் இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறப்புரை ஆற்றினார். *கழகத்தின் தலைவர் ந.பத்மநாதன் தலைமையுரை ஆற்றினார். *ஆலோசகரும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளருமான சுப.சற்குணன் ஆலோசர்கள் உரை வழங்கியதோடு தேர்தலை வழிநடத்தினார். *செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி, பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி, பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின் சாதனைகள் காணொலிக் காட்சியாகப் படைக்கப்பட்டது. *2018ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் அடைந்த வெற்றிகளும் சாதனைக் கதைகளும் திறமுனைக் காட்சியாகப் படைக்கப்பட்டது. *இந்த ஆண்டுக் கூட்டத்தில் பேரா மநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் புதிய தலைவராக பத்மநாதனும் துணைத்தலைவராக மு.அர்ச்சுணனும் தெரிவு செய்யப்பட்டனர். பொருளாளராக இரா.கணேசன் தேர்ந்தெடுக்கப்படார்.