Posts

Showing posts with the label INFRASTRUKTUR

SJK(T) LDG BANOPDANE - சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசு வென்று சாதனை

Image
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தமிழ்ப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிப் பிரிவில் பனோப்டேன் தமிழ்ப்பள்ளி இந்த வெற்றியைக் கண்டுள்ளது. SJK(T) Ldg.Banopdane, Daerah Batang Padang, Perak menang anugerah Johan sebagai Pusat Sumber Terbaik Kategori Sekolah Kurang Murid peringkat Daerah Batang Padang. தொடக்கத்தில் இப்பள்ளியின் கருவள நடுவம் ஒரு குறுகிய அளவே கொண்டிருந்தது. இரண்டு பெரிய மேசைகள் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கான நாற்காலிகள் மட்டுமே இருந்தன. 2019 ஆம் ஆண்டு தொடங்கி இப்பள்ளி பல்வேறு உருமாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டு வருகின்றது . தலைமை ஆசிரியர் திரு.சரவணன் இராஜன் நாயுடு அவர்களின் தலைமைத்துவத்தில் இப்பள்ளியின் கருவள நடுவம் 21ஆம் நூற்றாண்டுக் கல்விக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. ‘தட்சிணாமூர்த்தி கருவள நடுவம்’ எனவும் பெயரிடப்பட்டது.  திறமையான தலைமைத்துவம், அன்பான அணுகுமுறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான முயற்சியால் 2019ஆம் ஆண்டு இப்பள்ளியின் நூலகம் மாவட்டத்தில் குறைந்த மாணவ...

SJK(T) LDG.SOON LEE - புதிய கருவள நடுவம் திறப்புவிழா

Image
பேரா, கிரியான் மாவட்டம், சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள கருவள நடுவம் திறப்புவிழா கண்டது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் இந்தக் கருவள நடுவத்தை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.   Majlis Perasmian Pusat Sumber SJK(T) Ldg.Soon Lee telah disempurnakan oleh Sargunan Subramaniam, Pen.Pengarah SJK(T) pada 09.03.2020   தமது திறப்புரையில் பேசுகையில், தாம் பணியாற்றிய பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள கருவள நடுவத்தைத் திறந்து வைப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார். இந்த நூலகம் மிகவும் அழகாகவும் மாணவரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது. மாணவர்கள் விரும்பி வந்து வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வழிவகுக்கும். இன்றைய சூழலுக்கு ஏற்ப புத்தகங்களைத் தவிர்த்து கணினி வழியாக வாசிப்பதையும் பாடங்களைக் கற்பதையும் அதிகம் மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப கணினி மூலை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலத்திற்கு ஏற்ப மாணவர்களைக் கல்வியின்பால் ஈர்க்கும் வகையில் இந்த நடுவத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ள பொறுப்பாசிரியர் சனா காய...

SJK(T) SAINT MARY'S - 40 கல்வியாளர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டனர்

Image
 காணொலி இணைப்பு  ⏭ கிரியான் மாவட்டம் , பாரிட் புந்தார் , செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் அண்மையில் கருப்பொருள் அடிப்படையில் வகுப்பறை உருமாற்றத் திட்டம் நிகழ்ந்தது. பேரா மாநிலக் கல்வி இயக்குநர் முனைவர் முகமது சுகைமி பின் முகமது அலி அவர்கள் இப்பள்ளியில் 12 உருமாற்ற வகுப்பறைகளையும் அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Lawatan Penanda Arasan ke SJK(T) Saint Mary's, Daerah Kerian, Perak. 40 orang Pensyarah IAB, Pengetua dan Guru Besar yang sedang berkursus TS25 Kohort 5 di IAB Jitra, Kedah membuat lawatan ini. Tuan Ketua PPD Kerian dan Pegawai-pegawai PPD turut mengiringi rombongan ini.   04.03.2020 புதன்கிழமை செயிண்மேரியின் உருமாற்ற வகுப்பறைகளை நேரில் காண்பதற்கு 40 பேர் அடங்கிய கல்வியாளர் குழுவினர் வந்தனர். கிரியான் மாவட்டத் தலைமைக் கல்வி அதிகாரி ஹாஜா செப்பியா இந்த அடைவுக் குறியீட்டுப் பயணத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கெடா , ஜித்ரா அமினுடின் பாக்கி கல்விக் கழகத்தைச் [ INSTITUT AMINUDIN BAKI, JITRA, KED...

SJK(TAMIL) MENGLEMBU : மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கூட புதிய கட்டடத்திற்கு சிவநேசன், சிவகுமார் நிதி வழங்கினர்

Image
இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளில் நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய கட்டட நிதிக்கு அறிவித்தபடி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் வெ. 50,000 மற்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் வெ. 20,000 வழங்கினர். இப்பள்ளிக் கூடம் வெ.35,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்தது. அதன் நிர்மாணிப்பு பணி நிதிப்  பிரச்சனையால் திட்டமிட்டப்படி நிறைவு செய்ய இயலாத காரணத்தால் பள்ளி நிர்வாகம் நிதி கோரிக்கையை முன் வைத்தது. இப்பள்ளிக்கு வருகை புரிந்த மேல் குறிப்பிட்ட இருவரும் செய்த நிதி அறிவிப்பை இன்று  ஒப்படைத்தனர். மேலும் படிக்க..

SJK(TAMIL) TAPAH - மெய்நிகர் கற்றல் வகுப்பறை (FROG VLE CLASSROOM)

Image
தமிழ் நேசன் நாளிதழ் 29.9.2018 சிறப்பு விருந்தினர்களும் ஆசிரியர்களும்

SJK(TAMIL) KG.TUN SAMBANTHAN - அருமையான பாடம் சொல்லும் அழகான ஓவியங்கள்

Image
பேரா, ஆயர் தாவார் கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் சுவரோவியங்கள் மிகவும் அழகாக வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவரோவியமும் ஒவ்வொரு கருத்தை மிக அருமையாகச் சொல்லுவதாய் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாது தமிழ்ச் சான்றோர்களையும் மாமனிதர்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவும் திகழ்கின்றது. இதற்கான முயற்சியை மேற்கொண்ட பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பரிமளா வடிவேலு, பள்ளியின் ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கம் மற்றும் ஓவியங்களை அன்பளிப்புச் செய்த நன்கொடையாளர்களுக்கும் பாராட்டுகள்.