பேரா , மாலிம் நாவார் எனும் ஊரில் மிகவும் எடுப்பான கட்டடத்தோடும் எழிலான தோற்றத்தோடும் தேசிய வகை மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கிறது. பள்ளியின் வளாகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ள இப்பள்ளியைச் சுற்றி வருகையில் ஓர் அழகான பூந்தோட்டத்தில் நுழைந்து உலா வந்த உணர்வு எல்லாருக்கும் தோன்றும். அந்த அளவுக்கு மிகவும் அழகான வளாகத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு எப்பிரல் மாதத்தில் இப்பள்ளிக்குப் புதிதாகத் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திருமதி.சுசிலா கில்டா பள்ளியில் பல உருமாற்றங்களைச் செய்து பலரும் வியக்கும் வகையில் பள்ளியை முன்னேற்றி இருக்கின்றார். புற நிலையில் மட்டுமல்லாது அக நிலையிலும் பள்ளியில் பல்வேறு உருமாற்றங்களை ஆசிரியர்களின் உதவியோடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் , பள்ளி வாரியக் குழு உதவியோடும் மிகவும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். இப்பள்ளியின் சுவர்களில் அறிஞர் பெருமக்களின் அருமையான பொன்மொழிகள் காட்சி தருகின்றன. எல்லா அறைகளும் தமிழ் அறிஞர் பெருமக்கள் , மாமனிதர்கள் , மேதைகளின் பெயர்களைத் தாங்கி மிகப் பொலிவுடன் மிளிர்கின்றன. பார்க்கும் இடங்கள்...