WEBINAR / இயங்கலைப் பயில்களம் 1 : மின்கற்றலும் கூகிள் வகுப்பறை பயன்பாடும்

காணொலி இணைப்பு ⏩ 
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம் [WEBINAR SEKOLAH TAMIL PERAK] சிறப்பாக நடைபெற்றது. 22.04.2020ஆம் நாள் புதன்கிழமை நடந்த இந்தப் பயில்களத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 155 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


இயங்கலைப் பயில்களம் 1
தலைப்பு : மின்கற்றலும் கூகிள் வகுப்பறைப் பயன்பாடும்
நாள் : 22.04.2020 (புதன்கிழமை)
நேரம் : காலை மணி 10.00 – 11.30
இடம் : கூகிள் சந்திப்பு (MEET GOOGLE)

 இயங்கலைப் பயில்களம் முழுக் காணொலி

ஒருங்கிணைப்பாளர் :
திரு.சுப.சற்குணன் (பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர்)

தலைமை :
திரு.மு.அர்ச்சுணன் (தலைவர், பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகம்)

பயிற்றுநர்கள் :

திரு.மேகவர்ணன் ஜெகதீசன்

திரு.நாகலிங்கம் அழகேந்திரன்

திரு.சுந்தர் சண்முகம்

முதன் முறையாகத் தமிழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இயங்கலைப் பயில்களம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு கற்றல் கற்பித்தலில் புதிய வழமையை (NEW NORMAL) தொடக்கி வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

கலந்துகொண்ட ஆசிரியர்கள்

இந்த இயங்கலைப் பயில்களம் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இயங்கலையில் [ONLINE] ஆசிரியர்கள் கலந்துகொண்டு மின்கற்றல் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது. பயிற்றுநர்களின் படைப்புகளும் மிக மிக சிறப்பாக உள்ளது. முதல் முயற்சியாக இருந்தாலும் அதிகமான ஆசிரியர்கள் கலந்துகொன்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இயங்கலைப் பயில்களம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று திரு.மு.அர்ச்சுணன் தமது உரையில் கூறினார்.

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி