Posts

Showing posts from January, 2022

SJK(T) MAHA GANESA VIDYASALAI - 2021 ஆம் ஆண்டின் செயல் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

Image
மகா கணேசா வித்யாசாலை, மஞ்சோங் மாவட்டத்தில் மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாகும். தொடர்ச்சியாகப் பல கல்வித் திட்டங்களும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளும் போட்டிகளும் சிறப்பாக இப்பள்ளியில் நடந்து வருகின்றன. மேலும், மாவட்டம், மாநிலம், தேசிய நிலை மட்டுமின்றி அனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டத்தக்க வெற்றிகளை இப்பள்ளி மாணவர்கள் அடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியோடு மாணவர் உருவாக்கத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படும் இப்பாள்ளியின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள். பள்ளிக்கு தலைமைப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி அவர்களுக்கும் நல்வாழ்த்துகள். தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி  இப்பள்ளியின் வெற்றிக்கதைகளும் சாதனைகளும் மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளதைக் கீழே காணலாம். Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும் முடிந்த 2021ஆம் ஆண்டில் மகா கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற செயல்நடவடிக்கைகள் கீழே உள்ள மின்னூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும்

SJK(T) KERUH - 2021ஆம் ஆண்டுத் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

Image
பேரா மாநிலம், மேல்பேரா மாவட்டத்தில் அமைந்துள்ளது குரோ தமிழ்ப்பள்ளி, கல்வி, இணைப்பாடம், மாணவர் உருவாக்கம், ஆசிரியர் மேம்பாடு என இப்பள்ளி பல வகையிலும் சிறப்புக்குரிய ஒரு பள்ளியாகத் திகழ்கின்றது. Aktiviti & Pencapaian SJK(T) Keruh Tahun 2021 கொரோனா கோரணி நச்சில் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதிலும் இயங்கலை வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளும், செயல் நடவடிக்கைகளும் இப்பள்ளியில் நடைபெற்றுள்ளன. மாறுபட்ட கோணத்தில் மாணவர்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தவிர, மாநில, தேசிய, அனைத்துலக நிலைகளில் இயங்கலை வாயிலாக நடந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர். அதுமட்டுமல்லாது, குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் உயரிய விருதுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர். இப்பள்ளியின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் நன்முறையில் வழிநடத்தி வெற்றிகளைக் குவித்துவரும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செல்வராணி அவர்கள் வெகுவாகப் பாராட்டலாம். தலைமைய