Posts

Showing posts with the label மாணவர் முழக்கம்

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

Image
கடந்த 17.09.2022 ஆம் நாள் மாணவர் முழக்கம் 2022 காலிறுதிச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டி இயங்கலை முறையில் நடந்தது. பேரா மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ஒருவர் மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சூரியவேந்தன். மற்றொரு வெற்றியாளர் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவி ரக்‌ஷிதா. சிறப்பான படைப்பினை வழங்கியதோடு, நல்ல வாதத் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் வினாக்களுக்கும் தகுந்த பதிலை வழங்கி  இவர்கள் இருவரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

மாணவர் முழக்கம் 2022 - பேராவின் 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Image
மாணவர் முழக்கம் 2022 தேர்வுச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியாளர்கள் தங்களின் பேச்சினை 1 நிமிடம் 30 வினாடிக்குக் காணொலியாகப் பதிவுசெய்து ஏற்பாட்டளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறப்பான காணொலிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். அதன்  அடிப்படையில், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பேரா மாநிலத்தின் 18 வெற்றியாளர்களின் பட்டியலைக் கீழே காணலாம். மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பாடாற்றிய தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். காலிறுதிச் சுற்றில் பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறப்பான படைப்பினை வெளிப்படுத்த வாழ்த்துகள்.

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி

Image
18.12.2021 ஆம் நாள் அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இரட்டை வெற்றியைக் கண்டு மலேசியப் போட்டியாளர்கள் மாபெரும் சாதனை படைத்தனர். Adik Johnnes Abisya Edwin (SJKT Perak Sangetha Sabah, Ipoh) dinobatkan sebagai Johan dan Adik Darshini Kumaran (SJKT Ldg.Batak Rabit, Teluk Intan) menjadi Naib Johan dalam Pertandingan Pidato bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Antarabangsa pada 18.12.2021 வணக்கம் மலேசியா நிறுவனம் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர் மையமும் இணைந்து 7ஆவது ஆண்டாக நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிப் போட்டி இயங்கலை வாயிலாக நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த 2 போட்டியாளர், இலங்கையிலிருந்து ஒருவர், டென்மார்க் நாட்டிலிருந்து ஒருவர் என 4 பேர் இறுதிப் போட்டியில் களமிறங்கினர். அமைதியான உலகம் வேண்டும். அதற்கு என் உடனடி ஆணை வேண்டாம் ஆயுதம், வேண்டாம் கைப்பேசி, வேண்டாம் மது, வேண்டாம் நகரமயம் எனும் 4 நிலைப்பாடுகளில் ஒவ்வொரு போட்டியாளரும் பேசினர். வேண்டாம் நகரமயம் என்ற நிலைப்பாட்டில் மிகச் சிறப்பாகப் பேசியதோடு மிக இலாவ...

அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு

Image
வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசியா, இலங்கை, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். இவர்களுள் மலேசியாவின் நிகராளிகள் இருவர். அந்த இருவருமே பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . Adik Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah,Ipoh dan Adik Darshini Kumaran dari SJK(T) Ladang Batak Rabit, Teluk Intan telah mara ke Pusingan Akhir Pertandingan Pidato Manavar Muzhakkam Peringkat Antarabangsa mewakili Malaysia. ஒருவர், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவர் ஜோனஸ் அபிசியா எட்வின். மற்றொரு மாணவி பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தர்சினி குமரன். இவர்கள் இருவரும் தங்களின் பள்ளிக்கு மட்டுமின்றி பேரா மாநிலத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றால் மிகையாகாது. இந்தச் சாதனை மாணவர்கள் இருவருக்கும் அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் மனமா...

SJK(T) PERAK SANGGETHA SABAH & SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் 2021இல் பேரா மாநிலத்திற்கு இரட்டை வெற்றி

Image
மாணவர் முழக்கம் 2021 மாபெரும் இறுதிச் சுற்றில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் இடத்தையும் இரண்டாம் பரிசையும் வாகை சூடி இரட்டை வெற்றியைக் கண்டுள்ளனர். Murid Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah, Daerah Kinta Utara menjadi Johan dan Adik Darshini Kumaran dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak menjadi Naib Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 23.10.2021 23.10.2021ஆம் நாள் நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் முதல் நிலையில் வெற்றிபெற்றார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் முதல் பரிசான RM1000.00 (ஆயிரம் வெள்ளி) தொகையும் நற்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. நான் கல்வி அமைச்சரானால் கலைப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் திறம்பட பேசியதோடு, பொதுமக்கள் மற்றும் நடுவர்களின் வினாக்களுக்கு இலாவகமாக மறுமொழி பேசி ஜோனஸ் அபிசியா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அதே வேளையில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளர் பாத்தாக் ராபிட் ...

மாணவர் முழக்கம் 2021 - பேராவின் 2 மாணவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்

Image
மாணவர் முழக்கம் 2021 இறுதிச் சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியா மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 அரையிறுதிப் போட்டி  9.10.2021ஆம் நாள் நடந்து முடிந்தது. இதில், 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள் களம் இறங்கினர். போட்டியாளர்களின் படைப்புத் திறனை மதிப்பீடு செய்த நடுவர் குழுவினர் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்களைத் தெரிவு செய்தனர். கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தர்சினி குமரன் மற்றும் வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் ஆகிய 2 மாணவர்கள் மிகச் சிறப்பான படைப்பினை வழங்கி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.  இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி சாதனைச் செல்வங்களின் விவரங்களைக் கீழே காணலாம். 2 orang murid dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak dan SJK(T) Perak Sangetha Sabah, Daerah Kinta Utara layak ke Pertandingan Akhir Pidato Manavar Muzhakkam Peringkat K...

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 5 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 போட்டியில்  பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள்  அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டிக்கு மலேசியாவின் நிகராளிகளைத் தேடும் இந்தப் பயணத்தில் பேராவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இணைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். மாணவர் முழக்கம் 2021இல் தற்போது காலிறுதிச் சுற்றுகள்  4 மண்டல வாரியாக  நடைபெறுகின்றன. 14.09.2021ஆம் நாள் நடந்த பேரா மற்றும் பகாங் மண்டலத்திற்கான காலிறுதிச் சுற்றில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 6 மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பேசி அதிக புள்ளிகளைப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்ற வேளையில் 5 மாணவர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிச் சுற்றுகுத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர் விவரங்களைக் கீழே காணலாம். இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏற்கனவே நடந்து முடிந்த தகுதிச் சுற்றில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர் ...

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 தகுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது. இதில், அதிக எண்ணிக்கையில் பேரா மாநிலத்தின் மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. 10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன்  இப்போட்டி நடைபெறுகிறது. தகுதிச் சுற்றில் போட்டியாளர்கள் பேசி  காணொலியாகப் பதிவுசெய்து  போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதிலிருந்து நடுவர் குழுவினர் சிறந்த 120 மாணவர்களைக்  காலிறுதி சுற்றுக்குத் தெரிவுசெய்துள்ளனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் விவரங்களைக் பின்வரும் அட...

SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் போட்டியில் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசு

Image
மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டியில் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசை வென்று சாதனை செய்துள்ளார். Adik Navasri Guganath dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak, Perak menang sebagai Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 29.08.2020. மாணவர் முழக்கம் 2020 தேசியநிலைப் போட்டி 29.08.2020ஆம் நாள் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது. மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ மு.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர் முழக்கம் முதல் சுற்றில் நாடு தழுவிய நிலையில் 2300 மாணவர்கள் கலந்துகொண்டனர், இரண்டாம் சுற்றில் 200 மாணவர்களும் அவர்களுள் 20 போட்டியாளர்கள் அரையிறுதிச் சுற்றிலும் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிக்கு 4 போட்டியாளர்கள் தேர்வாகினர். கோறனி நச்சில் பெருந்தொற்று காரணமாக இவ்வாண்டின் மாணவர் முழக்கம் அரையிறுதிச் சுற்று வரையில் இயங்கலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான வாதத்தை வழங...

SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றது

Image
மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டிக்குப் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் ர.நவஶ்ரீகுணநாத் தகுதிப் பெற்றுள்ளார். அறையிறுதிச் சுற்றில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட வேளையில் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகினர். அவர்களுள்  ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிபெற்று பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத்திற்கே பெருமை சேர்ந்த்துள்ளார். மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. அதில் 20 மாணவர்கள் அறையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். அவர்களுள்  4 போட்டியாளர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் . செல்வன்  ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுகள்; பயிற்றுவித்த  பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.