Posts

Showing posts from March, 2018

கிரியானில் தமிழ் நளிநயப் பாடல் (Action Song) போட்டி

Image
கடந்த மார்ச்சு 30 முதல் ஏப்ரல் 1 வரை பேரா , கிரியான் மாவட்டத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘ கல்விப் பெருவுலா ’ நிகழ்ச்சி நடைப்பெற்றது. மலேசியக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மாட்சீர் காலிட் இந்தக் கல்விப் பெருவுலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். இந்தப் பெருவுலா நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகக் கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்காக நளிநயப் பாடல் போட்டி ( Action Song ) நடைபெற்றது. இப்போட்டி தமிழ்மொழியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த 11 தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் பங்கெடுத்தன. ஒவ்வொரு பள்ளியும் மிகவும் சிறப்பான முறையில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பொதுமக்களின் பாராட்டை அள்ளிக் குவித்தன. முதல் பரிசு - செயிண்மேரி தமிழ்ப்பள்ளி   இரண்டாம் பரிசு - செர்சோனீசு தமிழ்ப்பள்ளி மூன்றாம் பரிசு - ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி வெற்றிக் குழு -  செயிண்மேரி தமிழ்ப்பள்ளி கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலன் இப்போட்டிக்கான ஒருங்கிணைப

தேசியநிலை மலாய் நாடகப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

Image
தேசிய நிலை மலாய் நாடகப்  ( Pertandingan Teater Bahasa Malaysia Peringkat Kebangsaan 2018) போட்டியில் , பேரா சுங்கை சிப்புட் , மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொணடனர். தேசிய கலை பண்பாட்டுத் திணைக்களத்தின் (JABATAN KEBUDAYAAN DAN KESENIAN NEGARA) ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சி மலேசிய சுற்றுலா அமைச்சு , மலேசிய கல்வி அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளின் முழு அதரவோடு நடத்தப்பட்டது. கடந்த 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை ஈப்போவில் நடைபெற்ற இப்போட்டியில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியின் ஆசிரியர்கள் கவிதா மணியம் , சுரேன் ராவ் ஆகிய இருவரும் பொறுப்பாசியராக இருந்து மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்தனர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவ்வகையான போட்டிகளில் பங்கெடுப்பது பாராட்டுக்குரியதாகும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திறமைசாளிகள் ; எந்தத் துறையிலும் சிறப்பாக ஈடுபடக்கூடியவர்கள் என்பதை மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 2018ஆம் ஆண்டுக்கான இந்தத் தேசிய போட்டி மாநில வாரியாக நடைபெற்று முடிந்த பி

பேராவில் 7 தமிழ்ப்பள்ளிகளில் '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை'

Image
பேரா மாநிலத்தில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளில் '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை' (21st Century Classroom) அமைப்பதற்கு மலேசியக் கல்வி அமைச்சு மானியம் வழங்கியுள்ளது. மலேசியா முழுவதும் 50 தமிழ்ப்பள்ளிகளில் இந்த '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை' உருவாக்கபடவுள்ளது. அவற்றுள், பேராவில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும். 27.03.2018 செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கலந்துகொண்டு பள்ளிகளுக்கான மானியத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றும் டத்தோ ப.கமலநாதன் தமிழ்ப்பள்ளிகளில்  '21ஆம் நூற்றாண்டு வகுப்பறைகள்' அமைக்கப்படுவதும் மாணவர்கள் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்களைக் (21st Century Learning Skills) கற்றுக்கொள்வதும் இன்றைய காலக்கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். இதனை உறுதிபடுத்தும் வகையில் மலேசியாவில் 50 தமிழ்ப்பள்ளிகள் விரைவில் திறன் வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கபட உள்ளன. இந்நிகழ்ச்சியில் மானியம் பெற்றுக்கொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள்:- அரசினர் தமிழ்ப்பள்ளி, ஈப்போ - தலைமையாசிரியர் திரு.முனுசாமி

4 மாவட்டங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீராங்கனை மகுடம் சூடினார்கள்

Image
தமிழ்நேசன் நாளிதழ் - 24/03/2018

SJK(TAMIL) JENDERATA BHG.3 - தேசிய நிலை காணொலிப் போட்டி

Image

SJK(TAMIL) LDG.WALBROOK - மாவட்ட நிலை விளையாட்டு வீராங்கனை

Image

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

Image
பெங்காலான் ஊலு, குரோ தமிழ்ப்பள்ளியில் இளம் வடிவமைப்பாளர் திட்டம் (Young Designer) சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மின்னல் பண்பலை வானொலி நிலையம் (Minnal FM) ஏற்பாடு செய்திருந்தது. வடிவமைப்புத் துறை வல்லுநர் முனைவர் வேலுபெருமாள் அவர்கள் இந்தத் திட்டத்தை அருமையாக வழிநடத்தினார். மின்னல் பண்பலை அறிவிப்பாளர்கள், குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரளான அளவில் பலரும் கலந்துகொண்டனர். இப்படியொரு சிறப்பான திட்டத்தை மாணவர்களுக்காக நடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.செல்வராணி அவர்கள் பாராட்டுக்குரியவர். இளம் வயதிலேயே மாணவர்களை வடிவமைத்துறையில் ஈடுபடுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும் என்றால் மிகையாகாது.

SJK(TAMIL) MAHATHMA GHANDI KALASALAI - மாவட்ட நிலை விளையாட்டு வீராங்கனை

Image
தொழிலதிபர் திரு.யோகேந்திர பாலன் பரிசு வழங்குகிறார் தலைமையாசிரியர் திருமதி.சாந்தகுமாரியும் வெற்றி மாணவர்களும் பள்ளிக் குழுவினர்

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BG.PASIR - மாவட்ட நிலை விளையாட்டு வீராங்கனை

Image

SJK(TAMIL) LDG.GETAH TAIPING - மாவட்ட நிலை விளையாட்டு வீராங்கனை

Image

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BG.PASIR - தேசிய நிலை வெற்றி

Image
மாணவி சுவேதா பரிசு பெறுகிறார் பேரா மாநிலக் கல்வி இயக்குனருடன் வெற்றி மாணவர்கள்

வளர்தமிழ் விழா 2018 - நாளிதழ் செய்திகள்

Image
மக்கள் ஓசை மலேசிய நண்பன்

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

Image
வளர்தமிழ் விழா 18ஆவது ஆண்டாகப் பேரா மாநில நிலையில் 10.3.2018ஆம் நாள், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் மிகவும் கோலாகலமாகவும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்துடனும் நடைபெற்றது. மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் தலைமையாசிரியர் திரு.ஏ.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர்கள் அனைவரும்  இவ்விழாவினைப் பொறுப்பேற்று நடத்தினார்கள் நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், ம.இ.கா தேசிய உதவி தலைவருமாகிய மாண்புமிகு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். மேலும் தம்முடைய நன்கொடையாகப் பத்தாயிரம் வெள்ளி (RM10,000.00) வழங்கினார். மலேசியக் கல்வி அமைச்சிலிருந்து தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்திலிருந்து தமிழ்மொழி உதவி இயக்குனர் திரு.ந.சந்திரசேகரன் அவர்களும் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் அவர்களும் வருகையளித்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்