சொல்வளம் 2.0 : திறன்பேசியில் தமிழ் விளையாட்டு

காணொலி இணைப்பு

சொல்வளம் 2.0 என்பது திறன்பேசி [SMART PHONE], தட்டை [TAB] கருவிகளில் விளையாடக்கூடிய தமிழ் விளையாட்டு. முரசு நிறுவனம் இந்த அருமையான விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்த விளையாட்டு உலக அளவில் உள்ள தமிழ்  மாணவர்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு எனலாம்.

ஆண்டிராய்டு [ANDROID] திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களும், ஐபோன், ஐபேட் [I-PHONE & I-PAD] தட்டைக் கருவிகளைப் பயன்படுத்துபவர்களும் சொல்வளம் விளையாட்டை [GOOGLE PLAY STORE அல்லது APPLE APP STORE]  இன்றே பதிவிறக்கம் செய்து விளையாடலாம். 

சொல்வளம் விளையாட்டில் உலகம் முழுவதும் விளையாட்டும் பலருடன் போட்டிப் போடலாம். விளையாட்டாளர்கள் விரும்பினால், அவர்களின் புள்ளிகள் ஒரு பொதுப் பட்டியலில் வரிசையாக இடம்பெறும். 

உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டாளர்களின் புள்ளிகளும் ஒரே வரிசையில் சேர்க்கப்படும். புள்ளிகள் சேர்க்கப்பட்டதும், உலகின் முதல் 10 விளையாட்டாளர் பட்டியலைத் திரையில்  உடனே பார்க்கலாம்.

சொல்வளத்தின் பயன்பாட்டைக் காட்டும் காணொலியைக் கீழே காணலாம் :



  பதிவிறக்க முகவரி / DOWNLOAD 

https://sellinam.com/apps/solvalam

கொரோனாவின் கோர விளையாட்டினால் வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கும் மாணவர்களுக்குச் சொல்வளம் விளையாட்டு நிச்சயமாகத் துணைபுரியும்.

சொல்வளம் விளையாட்டு பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.

#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
*****

  ⏪ BACK

Comments

Post a Comment

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்