Posts

Showing posts from June, 2022

SJK(T) CHETTIARS, IPOH - INTOC அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம்

Image
பள்ளி- பெயர் / Nama Sekolah: செட்டியார் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJK(TAMIL) CHETTIARS, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan: INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவுநிலை / Pencapaian: தங்கப் பதக்கம் / GOLD AWARD நாள் /  Tarikh: 28 MEI 2022 ஏற்பாட்டாளர் / Penganjur: INTOC - GLOBAL INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY தலைமையாசிரியர் / Nama Guru Besar: PN. PACHAYAMMAL   A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat: திருமதி செல்வி முருகையா PN. CHELVI   A/P MURUGAYYA சாதனை மாணவர்கள் / M urid Terlibat: 1. லோகேந்திரன் சிவக்குமார் / LOHENDRAA A/L SIVAKUMAR 2. சர்வின் விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN 3. அமரேஸ் / மகேஸ்வரன் / AMARESS A/L MAGESWAREN 4. தீபிகா விஜயராமன் / THIPIKAA A/P VIJAYA RAMAN

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

Image
பேரா, கிரியான் மாவட்டம், கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பியர் அறிவகம், உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா கண்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தோட்ட மேலாளர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.   இத்திறப்பு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரியைப் படிநிகர்த்து Pegawai SISC+ திரு.மயூடின் பின் சஹாரி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வகுப்பறையினைப் பள்ளி மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இது போன்ற முயற்சிகள் ஒவ்வொரு பள்ளியிலும் முடுக்கிவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் சிந்தனைத் திறன் தொடர்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை அறிந்து வைத்திருப்பதுடன் அதனைச் சிறந்த முறையில் மாணவருக்குக் கொண்டு சேர்க்க வழிவகை காண வேண்டும் என்றார்.   மாணவரிடையே சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்பில் பல்வேறு வகையான சிந்தனைத் திறன் தொடர்பான நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்ட மேலாளர் திரு.பிரபாகரன் தண்ணீர்மலை அவர