Posts

Showing posts with the label VIDEO / காணொலி

பேரா தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா 2022

Image
கடந்த  பிப்ரவரி 21ஆம் திகதி அனைத்துலகத் தாய்மொழி நாள், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் எளிமையாக ஆனால் தமிழ்மொழி உணர்வோடு கொண்டாடப்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கல்வி அமைச்சு வழங்கியுள்ள தரச்செயல்முறை விதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தாய்மொழி நாள் விழா நடத்தப்பட்டது. தாய்மொழி நாள் விழா 2022 படங்களையும் காணொலிகளையும் கீழே காணலாம்.  புனித பிலோமினா தமிழ்ப்பள்ளி, ஈப்போ சங்காட் தமிழ்ப்பள்ளி, பத்து காஜா செயின்ட் தெரேசா தமிழ்ப்பள்ளி, தைப்பிங் மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி

SJK(T) METHODIST, MALIM NAWAR - தீபாவளி & சிறுவர் நாள் கொண்டாட்டம்

Image
🎥 காணொலி இணைப்பு 9-12-2021ஆம் மாலிம் நாவார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் சிறுவர் நாளோடு கோலாகல தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குறுகிய காலத்திலேயே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இக்கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட கண்கவர் ஆடல் பாடலுடன் ஆடை அலங்காரப் படைப்புகளும் இடப்பெற்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் கோரணி பெருந்தொற்றின் காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. பல மாதங்களாக இல்லிருப்புக் கற்றல்  கற்பித்தலிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலானப் போட்டிகளில் சிறப்பாக பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும்  தலைமையாசிரியை திருமதி லோகேஸ்வரி  பாராட்டுகளைத் தெரிவித்தார். குறுகியக் காலத்தில் அப்போட்டிகளில் சிறப்பான அடைவுகளைப் பதிவு செய்ய மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் பங்களிப்பிற்கான நற்சான்றிதழ்கள் வழங்கும் அங்கமும் இந்நாளில் சிறப்பாக நடந்தேறியது. சிறுவர் நாளுக்காக உணவும் பன...

SJK(T) PERAK SANGGETHA SABAH - 'சுடர் வானிலே' மாணவர் மின்னிதழ் வெளியீடு [காணொலி இணைப்பு]

Image
வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் மாணவர் மின்னிதழ் வெளியீடு கண்டுள்ளது.  'சுடர் வானிலே' எனும் பெயரைக் கொண்ட இந்த மாணவர் மின்னிதழில் மாணவர்களின் படைப்புகளும் கைவண்ணங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாணவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன. படத்தைச் சொடுக்கி மின்னிதழைக் காண வும் இப்பள்ளியின் ஆசிரியர் இலாவண்யா மோகன்  பொறுப்பாசிரியராக இருந்து இந்த மின்னிதழை மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்புச் செய்துள்ளார். அவருடைய முயற்சியும் முனைப்பும் பாராட்டுக்க்குரியது. பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சந்திரிகா அப்பு இவ்விதழில் வழங்கியுள்ள வாழ்த்துரையில், "மாணவர்கள் நலன்கருதி வெளியாகும் 'சுடர் வானிலே' அனைத்து மாணவர்களின் கைகளிலும் தவழ்ந்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும் பணியில் நிச்சயம் வெற்றிதனை ஈட்டித்தரும் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு" எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாசிப்பிற்கும் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் சுடர் வானிலே மின்னிதழை வெளியிட்டுள்ள பேரா சங்கீத சபா ...

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Suren Rao: Young Teacher 'Challenged Himself', and Is Now Creating Records

Image
"If you don't challenge yourself, you will never realize what you can become," goes a famous quote on the internet. A Surenrao did just that when he was told by a teacher in secondary school to drop the Tamil subject, and today, he has created a national record in teaching the subject - and he's not stopping anytime soon. Astro Ulagam spoke to the inspiring 29-year-old who teaches at the SJK (T) Mahatma Gandhi Kalasalai in Sungai Siput, Perak. According to Surenrao, he did not really "like" Tamil in his younger days, eventhough he attended a Tamil primary school in his hometown in Kedah. He then joined a Chinese secondary school, but took Tamil as an elective, but even then, he was not really fond of the subject. At one instance, his Tamil teacher even told him to quit taking the subject as he wasn't really good at it. This triggered a change in Surenrao, who decided to take it as a challenge to excel in Tamil. Excel he did, as he majored in Tamil in the...

SJK(T) LDG.KAMATCHY - [கோவிட் 19] நாடும் மக்களும் நலம்பெற இறை வேண்டுகை

Image
கடந்த 01.06.2021 இரவு 7.30 முதல் 7.45 வரை பேரா, பாகான் டத்தோ மாவட்டம், தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் "மலேசியாவிற்குப் பிரார்த்திப்போம்" என்ற இறை வேண்டுகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  இக்கூட்டுப் பிரார்த்தனையில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாதுகாவலர், தோட்டக்காரர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர். இன்றையக் கால கட்டத்தில் உலக நாடுகள் மட்டுமின்றி நம் நாடும் கோவிட் -19 என்ற கிருமியின் கொடூரத் தாக்குதலில்  சிக்குண்டு அல்லல் படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நாளுக்கு நாள் இக்கிருமியின் தாக்குதல் பயங்கர வேகத்தில் பரவி மரண எண்ணிக்கையையும் கிடுகிடுவென உயர்த்திக் கொண்டே வருகின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பல உயிர்கள் இத்தாக்குதலின் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் எத்திசையிலும் எல்லையில்லாமல் நீக்கமற நிறைந்துள்ள இறையருளுக்கே உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு  நம் நாடு இக்கிருமியின் ...

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலண்டன் மாநகரில் ஏறக்குறைய 200 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. தற்போது இலண்டனிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் உள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இதேபோல, நம் மலேசியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிருந்தே இல்லிருப்புக் கற்றல் முறைகளை இணையம் வழி மேற்கொண்டனர். அந்த வகையில், பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ‘இயங்கலை பயில்களம்’ என்ற பெயரில் இணையம் வழி பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு, தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை என்ற தலைப்பில் இயங்கலையில் பல்வேறு பயிற்சிகளைத் தமிழ்ப்...

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #9 : திறமுனைக் காணொலிப் படைப்பு

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #7 : மின்கற்றலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : முரசு அஞ்சல் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

நேர்படப் பேசு : இறுதிச் சுற்றில் திறமை காட்டும் பேரா போட்டியாளர்கள்

Image
காணொலி இணைப்பு ⏩ நேர்படப் பேசு இயங்கலைப் பேச்சுக்களம், தேசிய நிலைப் போட்டியில் பேரா மாநில நிகராளிகளாக 3 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறந்த முறையில் நேர்படப் பேசி திறமை காட்டி வெற்றிபெற புறவம் வலைப்பதிவு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. பேரா மாநிலப் போட்டியாளர்களின் 'வெற்றியை நோக்கி' காணொலிகளைக் கீழே காணலாம். வெற்றியை நோக்கி - 1 போட்டியாளர் : கதிர்வேலன் கணேசன் பள்ளி : மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ, பேரா வெற்றியை நோக்கி - 2 போட்டியாளர் : தனுஶ்ரீ ஆனந்தன்  பள்ளி : செயின்ட் திரேசா கான்வண்ட்  தமிழ்ப்பள்ளி, தைப்பிங், பேரா வெற்றியை நோக்கி - 3 போட்டியாளர் : ஷாஸ்னிதா குமார் ராஜா பள்ளி : கம்பார் தமிழ்ப்பள்ளி, கம்பார் பேரா

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

Image
காணொலி இணைப்பு ⏩ தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது. தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள். தமிழ்மொழி கருத்துணர்தல் ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா தமிழ்மொழி கட்டுரை ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன் பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா BAHASA MELAYU PEMAHAMAN GURU : CIKGU UMAGESWARI MOHAN SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK BAHASA MELAYU PENULISAN GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG ENGLISH COMPREHENSION TEACHER : CIKGU PUV...

EMOJI PUZZLE QUIZ - கண்ணுக்குப் புதிர் விளையாட்டு

Image
  காணொலி இணைப்பு ⏩ அன்புக் குழந்தைகளே, உங்கள் கண்களுக்கு இதோ புதிர் விளையாட்டு. மாறுபட்ட ஒர் உணர்வுக்குறி  எது என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்! [FIND THE ODD EMOJI]   விளையாட்டு 1:-   விளையாட்டு 2:-   விளையாட்டு 3:-   விளையாட்டு 4:-   விளையாட்டு 5:-   விளையாட்டு 6:-   விளையாட்டு 7:-   விளையாட்டு 8:-   விளையாட்டு 9:-   விளையாட்டு 10:-                 ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****   ⏪ BACK