Posts

Showing posts from September, 2022

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

Image
கடந்த 17.09.2022 ஆம் நாள் மாணவர் முழக்கம் 2022 காலிறுதிச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டி இயங்கலை முறையில் நடந்தது. பேரா மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ஒருவர் மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சூரியவேந்தன். மற்றொரு வெற்றியாளர் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவி ரக்‌ஷிதா. சிறப்பான படைப்பினை வழங்கியதோடு, நல்ல வாதத் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் வினாக்களுக்கும் தகுந்த பதிலை வழங்கி  இவர்கள் இருவரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

மாணவர் முழக்கம் 2022 - பேராவின் 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Image
மாணவர் முழக்கம் 2022 தேர்வுச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியாளர்கள் தங்களின் பேச்சினை 1 நிமிடம் 30 வினாடிக்குக் காணொலியாகப் பதிவுசெய்து ஏற்பாட்டளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறப்பான காணொலிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். அதன்  அடிப்படையில், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பேரா மாநிலத்தின் 18 வெற்றியாளர்களின் பட்டியலைக் கீழே காணலாம். மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பாடாற்றிய தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். காலிறுதிச் சுற்றில் பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறப்பான படைப்பினை வெளிப்படுத்த வாழ்த்துகள்.

SJK(T) KLEBANG - PdP PITCHING போட்டியில் ஆசிரியை காமினி முதல் நிலை வெற்றி

Image
பேரா, வடகிந்தா மாவட்ட நிலையில் நடைபெற்ற 3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கப் போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி காமினி கங்காதரன் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வடகிந்தா மாவட்ட நிகராளியாக இவர் மாநில நிலை போட்டியில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் பெயர் / Nama Sekolah:  கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT KLEBANG, CHEMOR, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan :  3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கம் 3 MINUTES PdP PITCHING நிலை / Peringkat:  மாவட்ட நிலை / PERINGKAT DAERAH அடைவு / Pencapaian:  முதல் நிலை / TEMPAT PERTAMA நாள் / Tarikh:  27 Ogos 2022 ஏற்பாட்டாளர் / Penganjur:  மலேசியக் கல்வி அமைச்சு  KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA தலைமையாசிரியர் / Nama Guru Besar:  திருமதி பத்மினி துரைசிங்கம்  PN. PATHMANI DORAISINGGAM சாதனை ஆசிரியர் / Nama Guru:  திருமதி காமினி கங்காதரன்  KAAMANI A/P GANGATHARAN