Posts

Showing posts from 2018

வெள்ளி மாநில வெற்றிக் கதைகள் [Victory Stories Of SJKT Perak]

Image
2018ஆம் ஆண்டில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நடடிக்கைகள், போட்டிகள், வெற்றிகள், சாதனைகள் ஆகியவை மின்னுல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி மின்னூலைப் பார்க்கலாம். http://online.anyflip.com/pacs/mkrs/

விழி - மடல் 12 : புகழொடு தோன்றிய 2018...

Image

அனைத்துலக மாணவர் முழக்கம் :- பேரா மாநிலத்தின் பாராட்டும் வெகுமதியும்

Image
“டிசம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதல் பரிசையும் 2-ஆம் பரிசையும் ஒருசேர வென்று மலேசியாவுக்கு இரட்டை வெற்றியை வாங்கிக் கொடுத்த இரண்டு மாணவரையும் பாராட்ட வேண்டும். இவர்கள் இரண்டு பேரும் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்” என்று ஈப்போவிலுள்ள பேராக் மாநிலச் செயலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடந்த பாராட்டு விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் கூறினார். முதல் பரிசை வென்ற கமல்ராஜ் குணாளன் மற்றும் இரண்டாம் பரிசுக்குரிய கிவேசா சுந்தர் இருவருக்கும் வெற்றிக் கேடயமும் ரொக்கத் தொகை 300 ரிங்கிட்டையும் பேராக் மாநில அரசாங்கம் சார்பில் சிவநேசன் வழங்கினார். மேலும் இவர்களின் பள்ளியான கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும், மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கும் தலா மூவாயிரம் ரிங்கிட் வெகுமதியாக வழங்கப்பட்டது. மேலும் படிக்க.. வணக்கம் மலேசியா செய்தி   செல்லியல் செய்தி  

அனைத்துலக மாணவர் முழக்கம் 2018;- மலேசியாவுக்கு இரட்டை வெற்றி; பேராவுக்குப் பெருமை

Image
01.12.2018 சனிக்கிழமையன்று சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 போட்டி வெகு கோலாகலமாக நடந்தது. இந்த அனைத்துலகப் பேச்சுப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த மாணவன் கமல்ராஜ் குணாளன் முதல் பரிசை வென்ற வேளையில் மலேசியாவின் மற்றொரு போட்டியாளர் கிவேசா சுந்தர் இரண்டாம் பரிசினை வென்று சாதனைப் படைத்தனர். இந்த வெற்றியானது மலேசியாவுக்கு மட்டுமல்லாது இந்த மாணவர்களை அனைத்துலகப் போட்டிக்கு அனுப்பிவைத்த பேரா மாநிலத்திற்கே பெருமையாகும். வணக்கம் மலேசியா செய்தி.. செல்லியல் செய்தி..  

அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 - பேரா மாநில மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றனர்

Image
மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டி 2018இல் மலேசியாவைப் பிரதிநிதித்து மூன்று மாணவர்கள் செல்லவிருக்கின்றனர். அவர்களில் இருவர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் பெருமையாக உள்ளது என்றாரவர். பேராக்கைச் சேர்ந்த கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் கமல்ராஜ் குணாளனும் இந்த அனைத்துலகப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.  செய்தி 1 : வெற்றிக் கொடியுடன் கிவேஷா வழியனுப்பு  செய்தி 2 : அனைத்துலக மாணவர் போட்டிக்கு மலேசியாவிலிருந்து மூவர் நன்றி: வணக்கம் மலேசியா.காம்

SJK(TAMIL) MENGLEMBU - அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டிக்கு வெற்றிப் பயணம்

Image
எட்டு ஆண்டுகால மாணவர் முழக்கம் போட்டிக் களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இந்த ஆண்டில் அனைத்துலக நிலைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பேரா மாநிலத்தைச் சேர்ந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மலேசியாவே மகிழும் பூவாக வெற்றியோடு திரும்ப வேண்டும் என்று பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் புகழாரம் சூட்டி வாழ்த்தினார். வருகின்ற டிசம்பர் முதல் திகதி அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி கிவேசா சுந்தர் தேர்வாகியுள்ளார். அந்தச் சாதனை மாணவிக்காக நடத்தப்பட்ட சிறப்பு வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் பொழுது சுப.சற்குணன் மேற்கண்டவாறு கூறினார். மேலும் படிக்க..

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

Image
மலேசியக்  கல்வி அமைச்சின் ஆதரவுடன் தமிழ் அறவாரியம், தேசிய தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம், மலாயா தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கம், மலேசிய இந்தியர் விண்வெளி அறிவார்ந்தோர் கழகம் ஆகியோரின் கூட்டு ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு, 17 நவம்பர் 2018 காரிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக வணிக கணக்கியல் புலத்தில் காலை மணி 8:00 முதல் மாலை மணி 6:00 வரை நடைபெற்றது. சுப.சற்குணன், சந்திரன் கோவிந்தன், மு.அர்ச்சுணன் இந்த மாநாட்டில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், தலைமையாசிரியர் கழகத்தின் தேசியத் தலைவரும் பேரா மாநிலத் துணைத்தலைவருமாகிய மு.அர்ச்சுணன் ஆகிய இருவரும் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களுள் பேரா மாநில ஆசிரியர்களே முதலிடம் வகித்தனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த மொத்தம் ஏழு ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கட்டுரை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைய காலமாகப் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்

SJK(TAMIL) BULUH AKAR - தேசிய நிலையில் 2ஆம் பரிசை வென்று சாதனை

Image
பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது. தேசிய நிலையில் நாடு தழுவிய அளவில் 3071 பள்ளிகளிடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி இரண்டாவது பரிசு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. 21 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தலைமைத்துவத்திலும் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசீலனின் அருமையான முயற்சியாலும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பினாலும் இந்தப் பள்ளி இணைப்பாடத் துறையில் பேரா மாநிலத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாகப் பெயர் பொறித்துள்ளது. ஒரு தமிழ்ப்பள்ளி இந்த அளவுக்குச் சிறந்து விளங்குவது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதோடு பாராட்டையும் பெற்றுள்ளது என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் குறிப்பிட்டார். மேலும் படிக்க..    

தமிழ்க்கல்வி மாநாட்டில் பேரா தமிழாசிரியர்கள் மூவர் கட்டுரை படைக்கின்றனர்

Image
மலேசியக்  கல்வி அமைச்சின் ஆதரவுடன் தமிழ் அறவாரியம், தேசிய தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம், மலாயா தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கம், மலேசிய இந்தியர் விண்வெளி அறிவார்ந்தோர் கழகம் ஆகியோரின் கூட்டு ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு 2018 நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 17 நவம்பர் 2018 காரிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக வணிக கணக்கியல் புலத்தில் காலை மணி 8:00 முதல் மாலை மணி 6:00 வரை நடைபெறவிருக்கின்றது. கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு திருமதி.தியோ நீ சிங் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு அதிகாரப்படியாகத் திறந்து வைப்பார், மலேசியாவில் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நலன் குறித்து பல கட்டுரைப் படைப்புகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில், சிறப்புமிக்க இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படைப்பதற்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தமிழாசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.  அண்மைய காலமாகப் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்ற வரிசையில் இ

விழி - மடல் 11 : துணிந்து நலம் செய்தால்...

Image

SJK(TAMIL) LDG.BANOPDANE - தலைமையாசிரியர் திருமதி பெ.கிருஷ்ணவேணி பணி ஓய்வு

Image

SJK(TAMIL) METHODIST, IPOH - தலைமையாசிரியர் திருமதி கோ.பைரவி பணி ஓய்வு

Image

விழி - மடல் 10 : நல்லார் ஒருவர் உளரேல்..

Image

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

Image
அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழியானக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முத்து நெடுமாறன் உரையாற்றினார். மூத்த இலங்கை தமிழறிஞர் அமரர் கா.சிவத்தம்பியின் வாசகமான “தமிழ் மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை. மாறாக அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது” என்பதைத் தனதுரையில் மேற்கோள் காட்டி நினைவுபடுத்திய முத்து நெடுமாறன், அதற்கேற்ப அனைவரும் தமிழ் மொழியைத் தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளின் துணையோடு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் படிக்க..  

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது

Image
அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழிக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்புரை ஆற்றினார். கடந்த 2015-இல் மலேசியக் கல்வி அமைச்சு உருமாற்றுப் பள்ளித் திட்டத்தினைத் (Program Sekolah Transformasi TS25) தொடங்கியது. அதற்காக மலேசியாவில் உள்ள 100 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இடைநிலைப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி என 100 பள்ளிகள் இடம்பெற்றன. மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் சார்பில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.   மேலும் படிக்க,,

இலண்டன் திருவள்ளுவர் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் பள்ளி தமிழால் இணையம் வழி இணைந்தன

Image
பீடோர்/இலண்டன் – இன்று சனிக்கிழமை இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் , பீடோரில் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயம் தொடங்கியது. இந்தத் தொடக்க நிகழ்ச்சி பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற வேளையில் அதே நேரத்தில் உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் இலண்டன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் வளாகத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா ஒரே நேரத்தில் நடைபெற்றது. மேலும் படிக்க..  

இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி இணையம் வழி இணையும் சாதனை

Image
இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் , பீடோரின் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயத்தைத் தொடக்குகின்றன. அந்தத் தொடக்க நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (அக்டோபர் 27) பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.   மேலும் படிக்க..  

மலேசியாவில் தமிழ்க்கல்வி 202ஆம் ஆண்டு நிறைவை அடைகிறது

Image
(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளருமான சுப.நற்குணன் வழங்கும் சிறப்புக் கட்டுரை இது)  2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21அம் நாள், நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 202 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 202 ஆண்டுகளாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் மிகையாகாது. மலேசியாவில் 202 ஆண்டுகள் நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை. மேலும் படிக்க..

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - இந்தியத் தூதரின் சிறப்பு வருகை

Image
“இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும் பெருமை அடைந்தேன். இந்த மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளிக்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக உதவிகள் வழங்கப்படும்” என கடந்த புதன்கிழமை அக்டோபர் 17-ஆம் தேதி இப்பள்ளிக்கு அதிகாரபூர்வ சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுள்  குமார் தெரிவித்தார். இந்தியத் தூதருடன் தோ புவான் உமா சம்பந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்   மேலும் படிக்க..

SJK(TAMIL) BULUH AKAR - இணைப்பாட நன்மதிப்பு விருது

Image
பேரா ஆட்சிக்குழு உறுப்பினரிடம் விருது பெறுகிறார் தலைமையாசிரியர் மனஹரன்

SJK(TAMIL) GERIK - இளம் வடிவமைப்பாளர் பட்டறை

Image
கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மலேசிய வானொலி மின்னல் பண்பலையுடன் இணைந்து இளம் வடிவமைப்பாளர் பட்டறையை வெகுச்சிறப்புடன் நடத்தியது. கடந்த 5 – 6 அக்டோபர் 2018 ஆகிய இரண்டு நாட்கள் இந்தப் பட்டறை நடந்தது. முனைவர் வேலு, தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் முதல் நாளன்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்ட வேளையில் , மறுநாள் மாணவர்களுக்குப் பட்டறை நடத்தப்பட்டது.  வடிவமைப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் வேலு பெருமாள் இந்தப் பட்டறையை செவ்வனே வழிநடத்தினார். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெற்றோர்கள் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் வடிவமைப்பு பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பெற்றது என்று பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள் கூறினார். மேலும் , மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியினை வழிநடத்தியதோடு மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். செல்லமே செல்வமே வானொலி நிகழ்ச்சிக்காக மாணவர்களின் நேர்க்காணலும் படைப்புகளும் பதிவு செய்ய