UPSI - புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் பேரா ஆசிரியர்கள் கட்டுரைப் படைப்பு
11-12 அக்டோபர் 2019இல் சுலுத்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கிய மூன்றாம் பன்னாட்டு மாநாடு 2019 நடைபெற்றது. புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியங்களில் தமிழர்களின் குமுகாயச் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடந்தது. மலேசியா உள்பட தமிழ்நாடு, சிங்கப்பூரிலிருந்து பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர்.
இந்தப் பன்னாட்டு நிலை மாநாட்டில் நமது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் ஆய்வுக் கட்டுரை படைத்தனர்.
#1 ஆசிரியர் பெயர் : சந்திரன் கோவிந்தன்
பள்ளிப் பெயர் : சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கமுண்டிங், பேரா
ஆய்வுக் கட்டுரைத் தலைப்பு :குறிஞ்சிக் குமரனாரின் தமிழருவியில் வெளிப்படும் பண்பாட்டுச் சிந்தனைகள்
#2 ஆசிரியர் பெயர் : கலைவாணி செங்கோடன்
பள்ளிப் பெயர் : களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பாகான் செராய், பேரா
ஆய்வுக் கட்டுரைத் தலைப்பு : சிறுகதை செல்வர் ஆர்.சண்முகத்தின் சிறுகதைகளில் காணப்படும் மலேசியத் தமிழர்களின் குமுகாயச் சிக்கல்களும் தீர்வுகளும்
பன்னாட்டு நிலை இலக்கிய மாநாட்டில் மலேசியத் தமிழர்கள் தொடர்பான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரை எழுதி படைத்த இவ்விரு தமிழாசிரியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். ஆசிரியர்களிடையே ஆய்வுத் திறன் சிறப்பாக வளருவதற்கு இவர்கள் உந்துவிசையாக அமைவார்கள்.
Comments
Post a Comment