SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - ஆசிரியர் சுரேனுக்கு அஸ்ட்ரோ சாதனையாளர் விருது


பேரா மாநிலம், சுங்கை சிப்புட், மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சுரேன் ராவுக்கு அஸ்ட்ரோ வானவில் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Guru SJK(T) Mahathma Gandhi Kalasalai, Sungai Siput, Perak Suren Rao mendapat Anugerah Astro Vaanavil  Best Acheivers Award

06.10.2019ஆம் நாள் ஜி.எம்.கிள்ளான் வணிக நடுவத்தில் (EXPO GM KLANG)  நடைபெற்ற அஸ்ட்ரோவின் 5ஆவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சுரேன் ராவ் இந்த விருதைப் பெற்றார்.

கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் முதலான துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கி முத்திரை பதித்த 5 சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.



ஆசிரியர் சுரேன் அண்மையில் தமது பள்ளி மாணவர்கள் மொத்தம் 300 பேருக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் தமிழ்மொழிப் பாடத்தை நடத்தி மலேசிய சாதனைப் புத்தகத்தில் (MALAYSIA BOOK OF RECORS) பெயர் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி