SJK(T) LADANG BANOPDANE - ஐவர் காற்பந்து போட்டியை நடத்தி வரலாறு படைத்தது

பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் முதன்முறையாக பனோப்டேன் கிண்ணம் ஐவர் காற்பந்து போட்டி 2019 (PERTANDINGAN FUTSAL PIALA BANOPDANE 2019) நடந்தேறியது.



இந்தச் சிறப்புமிக்க ஐவர் காற்பந்து போட்டி முன்னாள் மாணவர்கள் ஆதரவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு.ஆனந்தன்  இப்போட்டியைத் தொடக்கி வைத்து ரி.ம.9000ஐ வழங்கி பள்ளியின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
மற்றொரு முன்னாள் மானவராகிய திரு.வினோத்  பள்ளியின் சீரமைப்புக்கு ரி.ம.2000 வழங்கினார். பேரா மற்றும் மலேசியா முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் திரு.இரவிந்திரன் அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார்.
பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 குழுக்கள் இப்போட்டியில் பங்கெடுத்தன.
முதல் நிலை வெற்றியாளராக டான் ஸ்ரீ மாணிக்கவாசகம்  தமிழ்ப்பள்ளி (குழு 2) மாணவர்கள் சுழற்கிண்ணம், வெற்றி கேடயங்கள் மற்றும் ரிம.800 ரொக்கத்தை வெற்றிக் கொண்டனர்.

இரண்டாம் நிலை வெற்றியாளராக துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மானவர்கள் வெற்றிக் கேடயம் மற்றும் ரிம.400 ரொக்கத்தை வாகை சூடினர்.

மூன்றாம் நிலையில்  பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணியினர் வெற்றிக் கேடயம் மற்றும் ரி.ம.200ஐ வென்றனர்.

நான்காம் நிலையில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம்  தமிழ்ப்பள்ளி (குழு 1) அணி வெற்றிக் கேடயம் மற்றும் ரிம.100 ரொக்கத்தை வென்றது.

சிறந்த கோல் மன்னன் விருக்ச் செல்வன் அவினாஷ் (பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி) வாகை சூடினார்.

தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இந்த பனோப்டேன் கிண்ண ஐவர் காற்பந்து போட்டி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது என்று இப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சரவணன் குறிப்பிட்டார்.

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி