i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை
கடந்த 7- 9 அக்டோபர் 2019இல், கூலிம் யுனிகேஎல் (UNIKL MALAYSIAN SPANISH INSTITUTE, KULIM) கல்விக் கழகத்தில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி (INTERNATIONAL EUREKA INNOVATION EXHIBITION 2019) சிறப்பாக நடந்தது.
இந்தப் போட்டியில் கலந்துகொண்ட பேரா மாநிலத்தைச் சேர்ந்த 3 தமிழ்ப்பள்ளிகள் தங்கப் பதக்கமும் ஒரு பள்ளி வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தன.
அந்தச் சிறப்புமிகு சாதனைப் பள்ளிகள் பற்றிய முழு விவரம் பின்வருமாறு:-
#1.பெங்காலான் ஊலு, குரோ தமிழ்ப்பள்ளி
[SJK(T) KERUH, DAERAH HULU PERAK, PERAK)
ஆசிரியர் : ஷீத்தாலட்சுமி பாலு, தேவிகா முனுசாமி
மாணவர்கள் : ம.கயழ்விழி, இ.ஷிவாணி, சு.தர்வேஸ்வரன், ஜெ.ஷஸ்மிதா
அடைவுநிலை : தங்கப் பதக்கம்
#2.பாகான் செராய், சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளி
[SJK(T) LADANG SOON LEE, DAERAH KERIAN, PERAK]
ஆசிரியர் : கார்த்திகேசன் மாணிக்கவாசகன்
மாணவர்கள் : வா.ஜெசித்ரா, பு.தஸ்வின், ஆ.தினகரன், இ.கீர்த்திகா
அடைவுநிலை : தங்கப் பதக்கம்
#3.ஜென்றாட்டா பிரிவு 3 தோட்டத் தமிழ்ப்பள்ளி
[SJK(T) LADANG JENDERATA 3, DAERAH BAGAN DATUK, PERAK
ஆசிரியர் : அர்வினா சுப்பிரமணியம்
அடைவுநிலை : தங்கப் பதக்கம்
#4.சங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
[SJK(T) LADANG CHANGKAT SALAK, DAERAH KUALA KANGSAR, PERAK]
ஆசிரியர் : கலைமணி வெங்கிடாசலம், மோகனா ஜெகநாதன்
மாணவர்கள் : ச.தேவஶ்ரீ, சி.சங்கீதா
அடைவுநிலை : வெள்ளிப் பதக்கம்
சாதனை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Comments
Post a Comment