SJK(T) LADANG GULA – சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம்


நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் [LEMBAGA PENDUDUK DAN PEMBANGUNAN KELUARGA NEGARA (LPPKN)] பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக PEKERTI@ SJK(T) எனப்படும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் (PROGRAM PENDIDIKAN KESIHATAN REPRODUKTIF DAN SOSIAL) பயிலரங்கை கிரியான் மாவட்டம், கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடத்தியது.

16.10.2019 செவ்வாய்கிழமை நடந்த இந்தப் பயிலரங்கத்திற்குக் கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சோமசுந்தரம் பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.


தலைமையாசிரியர் நினைவுப் பரிசு வழங்குறார்

கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலக் குராவ் தமிழ்ப்பள்ளி, களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். காலை மணி 11:00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை மணி 2:00க்கு நிறைவடைந்தது.







சமூகச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பாலியல் பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டது. விளக்கவுரை மற்றும் குழு நடவடிக்கை முறையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கம் மாணவர்களைக் கவரக்கூடிய வகையில் அமைந்தது. அதோடு, மிகவும் பயனாகவும் இருந்தது.

அதிகாரிகள் லோகராணி, முகனேஸ், எழிலரசி

நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரிய  (LPPKN) பேரா மாநில உதவி இயக்குநர் லோகராணி மதிவாணன் மற்றும் அதிகாரிகளான எழிலரசி மீரா, முகனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகிய மூவரும் மிகச் சிறந்த முறையில் வழிநடத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.



கலந்துகொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும்

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

வெள்ளி மலர் 2 [Velli Malar Februari 2019]

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) LDG.SABRANG - Cikgu Chelva Cipta Pelbagai Inovasi Tingkat Prestasi

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) METHODIST, MALIM NAWAR - விரைந்து முன்னேறும் தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு