பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை

தெமெங்கோங் இபுராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (INSTITUT PENDIDIKAN GURU TEMENGGONG IBRAHIN, JOHOR) கடந்த 15 அக்டோபர் 2019 நடைப்பெற்ற தேசிய அளவிலான கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி (PERTANDINGAN INOVASI PENDIDIKAN DAN TEKNOLOGI KEBANGSAAN) நடைபெற்றது.

தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் இதில் வெள்ளிப் பதக்கம் வென்று மஞ்சோங் மாவட்டத்திற்கும் பேரா மாநிலத்திற்கும் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளனர். இப்போட்டியில் 'ஆசிரியர் திலகம் திரு. தனேசு பாலகிருட்டிணன் (கல்வியியல் தொழில்நுட்ப அதிகாரி), 'ஆசிரியர் திலகம்' திருமதி. புஷ்பராதா பெருமாள் (தேசிய வகை தமிழ்ப்பள்ளி கம்போங் கொலம்பியா தலைமையாசிரியர்), 'ஆசிரியர் திலகம்' திருமதி. பரிமளா வடிவேலு (தேசிய வகை தமிழ்ப்பள்ளி துன் சம்பந்தன் தலைமையாசிரியர்) மற்றும் 'ஆசிரியர் திலகம்'  திரு.கலைச்செல்வன் மோகன் (தேசிய வகை தமிழ்ப்பள்ளி கம்போங் கொலம்பியா துணைத்தலைமையாசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டனர். 

திரு. தனேசு பாலகிருட்டிணன்

திருமதி. புஷ்பராதா பெருமாள்

திருமதி. பரிமளா வடிவேலு

திரு.கலைச்செல்வன் மோகன்
இவர்கள், பாவாணம் மின் நாள் பாடத் திட்டத்தினைத் தமிழ்ப் பள்ளிகளுக்காக வடிவமைத்துள்ளனர். கல்வி உருமாற்றுத் திட்டத்தில் மின் நாள் பாடத்திட்டம் முக்கியமான ஒரு கூறாகக் கவனிக்கப்படுகிறது. 

தமிழ்ச் சான்றோர் ஊழிப் பேரறிஞர் மொழிஞாயிறு பாவாணர் பெயரில் ஒரு புத்தாக்கத்தை உருவாக்கிச் சாதனை செய்திருக்கும் இந்த ஆசிரியர் குழுவினர் மிகவும் பாராக்குரியவர்கள்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

SJK(T) ST.THERESA'S CONVENT - KLESF அனைத்துலகப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்